கேரள மாநிலம் வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: மண்ணில் புதைந்து 120+ பேர் பரிதாப உயிரிழப்பு

வயநாடு: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் மண்ணில் புதைந்து குழந்தைகள், பெண்கள் உட்பட 120 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அடைமழை, வெள்ளம் காரணமாக பல்வேறு சாலைகள், பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதால் உடல்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் பலரது நிலைமை என்னவென்று தெரியாததால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், விமானப் படையினர், தீயணைப்பு வீரர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் என பல்வேறு குழுவினர் மீட்பு, நிவாரண, மருத்துவப் … Read more

ஏ.ஐ. மூலம் மார்பக புற்றுநோயை 5 ஆண்டுக்கு முன்பே கண்டறியலாம்: அமெரிக்க நிறுவன ஆய்வறிக்கையில் தகவல்

புதுடெல்லி: அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் பல்கலைக்கழகம், ஜமீல் கிளினிக் ஆகியவை இணைந்து மார்பக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து உள்ளன. இதற்கு ‘மிராய்’என்று பெயரிடப்பட்டு உள்ளது.கடந்த 2021-ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த தொழில்நுட்பம் அமெரிக்காவின் பல்வேறு மருத்துவமனைகளில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன்படி 5 ஆண்டுகளுக்கு முன்பே மார்பக புற்றுநோயை கண்டறிய முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தொழில்நுட்பம் குறித்துஅமெரிக்காவின் இலினாய்ஸ் மாகாணம், ஓக் புரூக் நகரைதலைமையிடமாகக் கொண்டு ‘ரேடியோலாஜிக்கல் சொசைட்டிஆப் … Read more

விஜய் சம்பளத்தை விட 3 மடங்கு.. டாக்டர் டூம் படத்தில் நடிக்க ராபர்ட் டவுனி ஜூனியருக்கு இத்தனை கோடியா?

லாஸ் ஏஞ்சல்ஸ்: இந்தியாவிலேயே அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகர்களாக ஷாருக்கான், விஜய், ரஜினிகாந்த், அல்லு அர்ஜுன் உள்ளனர். அந்த வரிசையில் பிரபாஸும் இணையப் போவதாக கூறுகின்றனர். பல ஹாலிவுட் நடிகர்களுக்கே 200 கோடி சம்பளம் என்பது இன்னமும் எட்டாக் கனியாக உள்ளதாக கூறி வரும் நிலையில், ராபர்ட் டவுனி ஜூனியருக்கு உலகிலேயே எந்தவொரு நடிகரும் வாங்காத சம்பளத்தை

45 அடியை நெருங்கும் முன்பே சிறுவாணி அணையில் இருந்து மீண்டும் நீரை வெளியேற்றிய கேரள அரசு!

கோவை: 45 அடியை நெருங்குவதற்குள் சிறுவாணி அணையிலிருந்து கேரளா நீர்வளத்துறை அதிகாரிகள் மீண்டும் தண்ணீரைத் திறந்து வெளியேற்றியுள்ளனர். கோவை மாநகராட்சியின் 30 வார்டுகளுக்கும், சாடிவயல் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து மாநகராட்சிக்கு வரும் வழித்தடத்தில் உள்ள 22-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் சிறுவாணி குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. கேரளாவில் அமைந்துள்ள சிறுவாணி அணையின் பராமரிப்பு கேரள அரசின் நீர்வளத்துறை வசம் உள்ளது. அணை பாதுகாப்பு காரணங்களால் 49.53 அடிக்கு பதில் 45 அடி வரை மட்டுமே கேரள அரசால் தண்ணீர் தேக்கப்படுகிறது. … Read more

இந்தியாவை உலுக்கிய மோசமான 5 நிலச்சரிவு பேரழிவுகள் – ஒரு பார்வை | HTT Explainer

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த மாவட்டத்தின் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்; அதே எண்ணிக்கையிலானோர் காணவில்லை. அங்கு ஒரேநாளில் 300 மில்லி மீட்டர் அளவு மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை தொடர்ந்து நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. வாசிக்க > “கேரளா இதுவரை கண்டிராத இயற்கை பேரழிவு” – வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை … Read more

வயநாடு நிலச்சரிவு பலி 63… மீட்பு பணிக்கு தமிழ்நாட்டில் இருந்து குழு… கேரள அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் ரூ. 5 கோடி நிவாரணம்…

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 63 பேர் பலியாகி உள்ளனர். இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக வயநாடு பகுதி பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. நிலச்சரிவில் இருந்து மக்களை மீட்க தமிழ்நாட்டில் இருந்து மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர். கேரள அரசுக்கு உதவிடம் வகையில் இவர்கள் அங்கு சென்றுள்ளனர். வயநாடு பகுதியில் உள்ள மேப்பாடி, சூரல்மலை மற்றும் முண்டகை நகரில் ஏற்பட்ட நிலைச்சரிவு காரணமாக … Read more

Raayan: செல்வராகவன் மட்டும்தான்! உச்சம் தொட வேண்டிய ராயன் கோட்டைவிட்ட இடங்கள்!

சென்னை: தனுஷ் தனது 50வது படமான ராயன் படத்தினை தானே இயக்கி நடித்துள்ளார். இந்த படம் கடந்த 26ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்திற்கு தனுஷின் தீவிர ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் ஜென்ரல் ஆடியன்ஸ் எனப்படும் பொதுமக்கள் மத்தியில் இந்த படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. ஒரு படம் வெற்றிப்படமாக மாறவேண்டும்

பொது இடங்களில் டெங்கு நுளம்பு பரவும் அபாயம்

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட புள்ளிவிபர தரவுகளின்; அடிப்படையில் பொது இடங்களில் டெங்கு நுளம்பு பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். இதன்படி, வீடுகளில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள், பொது இடங்களான அரச கட்டிடங்கள், பாடசாலைகள், மேலதிக நேர (டியூஷன்) வகுப்பறைகள், மத வழிபாட்டுத் தலங்கள், கட்டுமான பணிகள் நடைபெறும்; கட்டிடங்கள் போன்றவற்றில் டெங்கு நுளம்பு பெருகும் அபாயம் அதிகரித்துள்ளது. தற்போதைய மழையுடனான காலநிலையினால் டெங்கு நுளம்புகள் பெருகும் … Read more

‘அனைவருக்கும் அனைத்து வளர்ச்சி திட்டங்கள்’ என்பது நடிப்பு: மக்களவையில் நவாஸ்கனி எம்.பி சாடல்

புதுடெல்லி: மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி, அனைவருக்கும் அனைத்து வளர்ச்சி திட்டங்கள் (சப்கே சாத் சப்கா விகாஸ்) என்பது வெறும் நடிப்பு என்று கூறினார். நாடாளுமன்ற மக்களவையில் மத்திய பட்ஜெட் 2024 மீதான விவாதத்தில் கலந்துகொண்டு ராமநாதபுரம் எம்பி கே.நவாஸ்கனி பேசியது: “தமிழ்நாடு என்ற மாநிலம் இந்தியாவில் இருப்பது மத்திய அரசுக்கு தெரியுமா, தெரியாதா என்ற சந்தேகத்தை இந்த நிதி நிலை அறிக்கை எழுப்புகிறது. தங்களுடைய ஆட்சியை காப்பாற்றுவதற்கு இந்த நாட்டினுடைய … Read more

கேஜ்ரிவாலை விடுவிக்கக் கோரி இண்டியா கூட்டணி போராட்டம்: ஜந்தர் மந்தரில் தலைவர்கள் பேசியது என்ன?

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் உடல்நிலை மோசமடைந்து வருவதால், அவரை உடனடியாக விடுவிக்கக் கோரி இண்டியா கூட்டணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், பஞ்சாப் முதல்வர் பகந்த் மான், கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கேஜ்ரிவால், ஆம் ஆத்மி தலைவர்கள் கோபால் ராய், ராகவ் சத்தா, காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிபிஐ பொதுச் செயலாளர் டி. ராஜா உள்ளிட்ட இண்டியா கூட்டணி … Read more