இங்கிலாந்தில் கத்திக்குத்து தாக்குதல்: 2 சிறுவர்கள் பலி-9 பேர் காயம்

லண்டன், இங்கிலாந்தின் சவுத்போர்ட் நகரில் உள்ள நடன பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்றுள்ளது. 17-வயது சிறுவன் திடீரென நடன வகுப்பில் பயிற்சி எடுத்துக் கொண்டு இருந்த சிறார்களை கத்தியால் குத்தியுள்ளான். இந்த தாக்குதலில் 2 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தாக்குதலை தடுக்க முயன்ற சிலருக்கும் கத்திக் குத்து விழுந்தது. இதில், 9 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் 2 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உயிரிழந்த சிறுவர்கள் 7-11 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தகவல் … Read more

ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதை அடுத்து அஸ்கிரிய மகாநாயக்க தேரரிடம் ஆசி பெற்ற செந்தில் தொண்டமான்!

ஜனாதிபதித் தேர்தல் திகதி நேற்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சியாம் நிகாயாவின் அஸ்கிரிய பிரிவின் வணக்கத்திற்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன மகாநாயக்க தேரரிடம் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் ஆசி பெற்றார். மேலும், கிழக்கு மாகாணத்தில் அனைத்து சமூகங்களுக்கிடையில் நிலவும் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் பற்றியும் சகல சமூகங்களுக்கிடையிலும் சிறந்த புரிந்துணர்வை ஏற்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் வணக்கத்துக்குரிய தேரருக்கு விளக்கமளித்தார். அத்துடன், பெருந்தோட்டப் பகுதிகளில் நிலவும் சம்பளப் பிரச்சினைகள் மற்றும் … Read more

US Elections: `Harris-க்கு சுந்தர் பிச்சை… Trump-க்கு மஸ்க் ஆதரவா?' – பரபரக்கும் குற்றச்சாட்டுகள்!

இந்த ஆண்டு, நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் குடியரசுக் கட்சி சார்பில், முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மறுபக்கம் ஜனநாயகக் கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் ஆகியோர் களமிறங்குகிறார்கள். ஆரம்பத்தில் ட்ரம்ப் Vs ஜோ பைடன் என்றிருந்த தேர்தல் களம், தற்போது ட்ரம்ப் Vs கமலா ஹாரிஸ் என அனல் தகித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், மறைமுகமாக கார்பரேட் நிறுவனங்கள் களத்தில் ஊடுருவுவதாக இரு தரப்பு ஆதரவாளர்களும், சமூக … Read more

43-வது முறையாக 120 அடியை எட்டியது மேட்டூர் அணை: கால்வாய் பாசனத்துக்கு நீர் திறப்பு

மேட்டூர்: மேட்டூர் அணை 43-வது முறையாக தனது முழு கொள்ளவான 120 அடியை செவ்வாய்க்கிழமை மாலை எட்டியது. இதைத்தொடர்ந்து அணையில் இருந்து மொத்தம் 81,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, கர்நாடக அணைகள் நிரம்பியது. அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியதையடுத்து காவிரியில் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, மேட்டூர் அணைக்கு, கடந்த 16-ம் தேதி முதல் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. … Read more

10 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 88% உயர்வு: மத்திய அரசு

புதுடெல்லி: கடந்த 10 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 88% அதிகரித்து தற்போது நாட்டில் 731 மருத்துவக் கல்லூரிகள் உள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநிலங்களவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக பதிலளித்துள்ள மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் அனுப்பிரியா பட்டேல், “மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையை அரசு அதிகரித்துள்ளதுடன், எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களையும் அதிகரித்துள்ளது. 2014-ம் ஆண்டுக்கு முன்பு 387 ஆக இருந்த மருத்துவக் … Read more

நடிகர் தனுஸ்க்கு ரெட் கார்டா? உண்மை நிலவரம் என்ன?

நடிகர் தனுஷ்க்கு தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்து இருப்பது தமிழ் சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு நடிகர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.  

போதைப் பொருள் கடத்திய திமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்

சென்னை திமுக நிர்வாகி சையத் இப்ராகிம் போதைப் பொருள் கடத்தியதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து கடந்த வாரம் ரூ.70 கோடி மதிப்புள்ள 6 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் மற்றும் ரூ.7 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த முவரில் ஒருவராய் கைது செய்யப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு துணைத் தலைவர் சையது இப்ராஹிம் … Read more

ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை .. மனு பாக்கரை பாராட்டிய கமல்!

சென்னை: பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை ஹரியானா வீராங்கனை மனு பாக்கர் சாதனை படைத்துள்ளார். இந்த வரலாற்று சாதனையை படைத்த மனு பாக்கரை உலக நாயகன் கமலஹாசன் , தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டி உள்ளார். 33வது ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பாக இளம்

தொடர் ரெயில் விபத்துகள்: மத்திய அரசு மீது மம்தா பானர்ஜி சாடல்

கொல்கத்தா, ஜார்க்கண்ட் மாநிலத்தின் செராய்கேலா மாவட்டத்தில் இன்று அதிகாலை மும்பை நோக்கிச் சென்ற மும்பை – ஹவுரா பயணிகள் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ரெயிலின் 18-பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் நாட்டில் அடுத்தடுத்து ரெயில் விபத்துகள் நேரிடுவது தொடர்பாக மத்திய அரசை கடுமையாக சாடிய மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, மத்திய அரசின் அலட்சியப் போக்கிற்கு முடிவு கிடைக்காதா என … Read more

பாரீஸ் ஒலிம்பிக்; வெண்கலம் வென்ற சரப்ஜோத் சிங், மனு பாக்கருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி, உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த ஒலிம்பிக்கில் 206 நாடுகளை சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்திய தரப்பில் 117 பேர் பாரீஸ் ஒலிம்பிக்குக்கு சென்றுள்ளனர். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் 5-வது நாளான இன்று நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் வெண்கல பதக்க போட்டியில் இந்தியாவின் சரப்ஜோத் சிங் – மனு பாக்கர் இணை, தென் கொரியாவின் … Read more