ஆம்ஸ்ட்ராங் படுகொலை: பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கண்டனம்

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு அக்கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான கே. ஆம்ஸ்ட்ராங், சென்னையில் அவரது வீட்டின் வெளியே கொடூரமான முறையில் கொல்லப்பட்டது மிகவும் வருந்தத்தக்கது மற்றும் கண்டனத்திற்குரியது. தொழில்ரீதியாக ஒரு வழக்கறிஞரான அவர் மாநிலத்தில் வலுவான தலித் குரலாக அறியப்பட்டார். மாநில அரசு குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்” … Read more

ஐந்து நட்சத்திர ஓட்டல் போல சொகுசு ஆசிரமம்: போலே பாபா பற்றிய விவரங்கள் அம்பலம்

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டம் சிக்கந்தரராவ் தாலுகாவின் முகல்கடி கிராமத்தில், கடந்த செவ்வாய்க்கிழமை விஸ்வ ஹரி நாராயண் (எ) போலே பாபா என்பவரது ஆன்மிகக் கூட்டம் நடைபெற்றது. அப்போது நெரிசலில் 121 பேர் இறந்தது தொடர்பாக போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், போலே பாபா பெயர் அதில் இடம்பெறவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் நேற்று கூறியதாவது: போலே பாபா மீது பாலியல் வன்கொடுமை வழக்கும் உள்ளது.தற்போது அவர் நிறைய சொத்துகளை … Read more

காங்கிரசில் இணைந்த 6 பி ஆர் எஸ கட்சி எம் எல் சிக்கள்

ஐதராபாத் தெலுங்கானா முன்னாள் முதவ்வர் சந்திரசேகர் ராவின் பி ஆர் எஸ் கட்சியின் 6 எம் எல் சி க்கள் இணைந்துள்ளனர். தற்போது தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. நேற்று அம்மாநிலத்தின் எதிர்க்கட்சியும் முன்னாள் முதலவர் சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ். கட்சியின் 6 எம்.எல்.சி.க்கள் (சட்டசபை மேலவை உறுப்பினர்கள்) காங்கிரசில் இணைந்துள்ளனர். அதாவது தெலுங்கானா காங்கிரஸ் தலைவரும் அம்மாநில முதல்வ்ருமான ரேவந்த் ரெட்டி தலைமையில் தண்டே விட்டல், பானுபிரசாத், தயானந்த், பிரபாகர் ராவ், பசவராஜு, … Read more

Nayanthara: நேசிப்பிற்கும் ஆறுதலுக்கும் ஏங்குகிறோம்.. க்யூட் புடவையில் நயன்தாரா பதிவு!

சென்னை: நடிகை நயன்தாரா விஜய், அஜித், ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து ஏராளமான வெற்றி படங்களை கொடுத்துள்ளவர். தன்னுடைய படத்தை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நயன்தாரா, வாடகைத்தாய் முறையில் உயிர் மற்றும் உலக் என இரு குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார். தொடர்ந்து குழந்தைகளை வளர்ப்பதில் அதிக ஆர்வம்

கேகாலை, கேகலு வித்தியாலயத்தின் மாணவர் பாராளுமன்றம் ஜனாதிபதி செயலகத்தில் 

கேகாலை, கேகலு வித்தியாலயத்தின் மாணவர் பாராளுமன்றம் 2024.07.04 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தின் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி செயலகம் மற்றும் பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார். இதன்போது, ஜனாதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க பாராளுமன்ற முறைமை தொடர்பில் புரிந்துகொள்வதற்கான இளையோரின் பங்கேற்பு தொடர்பில் தனது மகிழ்ச்சியை வெளியிட்டார். மேலும், அரசியல் களத்தில் பிரவேசிக்கும் போது அரசியலில் நல்ல புரிதலுடன் இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் … Read more

நோட்டமிட்டு வெட்டி சாய்த்த கும்பல்; சென்னையை பரபரப்பாக்கிய ஆம்ஸ்ட்ராங் கொலை – என்ன நடந்தது?

சென்னை பெரம்பூர், வேணுகோபால்சாமிகோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆம்ஸ்ட்ராங் (52). வழக்கறிஞரான இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வந்தார். தற்போது அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் இவர் இன்று இரவு பெரம்பூர் வேணுகோபால்சாமி கோயில் தெருவில் புதிதாக கட்டி வரும் வீட்டின் பணிகளை தன்னுடைய ஆதரவாளர்கள் பெரம்பூரைச் சேர்ந்த வீரமணி (65), பாலாஜி ஆகியோருடன் பார்வையிட்டுக் கொண்டிருந்தார். அப்போது மூன்று பைக்கில் … Read more

“அமைதிப் பூங்கா தமிழகத்தில்…” – ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்

சென்னை: “அமைதிப் பூங்காவாக இருக்கிற தமிழகத்தில் இத்தகைய படுகொலைகளை வன்முறையாளர்கள் நிகழ்த்துவது மிகுந்த வேதனைக்குரியது. இதை வன்மையாக கண்டிக்கிறேன்” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வன்முறை கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருக்கிற சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும், துயரத்தையும் தருகிறது. தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு கல்வி பயில, தொழில் தொடங்க, அடிப்படை தேவைகளை நிறைவு செய்ய மிகுந்த சேவை … Read more

“இந்தியாவை பெருமைப்படுத்துங்கள்” – ஒலிம்பிக் செல்லும் வீரர்களுக்கு மோடி அறிவுரை

புதுடெல்லி: “உங்களின் சிறந்த திறனை வெளிப்படுத்துங்கள், இந்தியாவை பெருமைப்படுத்துங்கள்” என்றும் பாரிஸ் ஒலிம்பிக் 2024 செல்லும் இந்திய வீரர்களை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். பாரீஸ் ஒலிம்பிக்கில் முதன்முறையாக நாட்டை பிரதிநிதித்துவப்படுத்த உள்ள இந்திய அணி வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) கலந்துரையாடினார். அப்போது அவர், “நீங்கள் ஒலிம்பிக் சென்று வெற்றிபெறும் மனநிலையில் உள்ளீர்கள். நீங்கள் திரும்பி வரும்போது உங்களை வரவேற்கும் மனநிலையில் நான் இருக்கிறேன். விளையாட்டு உலகத்துடன் தொடர்புடைய நம் நாட்டின் நட்சத்திரங்களைச் சந்திக்கவும், … Read more

அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 05.07.2024 மற்றும் 06.07.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 07.07.2024 முதல் 11.07.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், … Read more

அதை டெலிட் பண்ணிட்டு.. பகிரங்க மன்னிப்பு கேளுங்க.. சமந்தா சொல்றதெல்லாம் பொய்.. மருத்துவர் பதிலடி!

சென்னை: வைரல் காய்ச்சலுக்கு சாதாரண மருந்துகளை எடுத்துக் கொள்வதற்கு பதில் ஹைட்ரோஜன் பெராக்ஸைடை சுவாசித்தாலே நோய் குணமாகிவிடும் என சமீபத்தில் நடிகை சமந்தா இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட மருத்துவ குறிப்புக்கு எதிராக மருத்துவர் Cyriac Abby Philips, aka ‘The Liver Doc’, சமந்தாவை விளாசியுள்ளார். நடிகை சமந்தா கொஞ்சம் கூட மருத்துவ அறிவு இல்லாமல் பேசியுள்ளார். அவர்,