நான் ஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்தாதீர் : ஐ சி எம் ஆர் எச்சரிக்கை

டெல்லி இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் நான் ஸ்டிக் பாத்திரங்கள் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என எச்சரித்துள்ளது. மண்பாண்டத்தில் சமைக்க ஆரம்பித்த மனிதர்கள் தற்போது செம்பு பித்தளை, இரும்பு, எவர்சில்வர், நான்-ஸ்டிக், செராமிக் பாத்திரங்கள் வரை பல வகைகளை பயன்படுத்தி வருகின்றனர். நான்-ஸ்டிக் குக்வேர், சமைக்கவும் பயன்படுத்தவும்,  சுத்தம் செய்வதும் எளிதாக இருப்பதால், நீண்ட காலமாக சமையலறையில் பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. … Read more

பாக்கியத்துக்கு விழுந்த அறை.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: அண்ணா சீரியலில் நேற்றை எபிசோடில், சண்முகம் வீட்டில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் குறித்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது சூடாமணி மாப்பிள்ளைக்கு செயின், மோதிரம், வாட்ச் எல்லாம் வாங்க வேண்டும். நகை வாங்கும் போது, பாக்யம் நிச்சயம் அழைத்துப்போக வேண்டும். அவளுக்கு போன் போட்டு கூப்பிடு என்று சொல்ல, பரணி, அம்மாவிற்கு விஷயத்தை சொல்ல, அனைவரும் சேர்ந்து நகை

ரெட் அலெர்ட்: கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு

திருவனந்தபுரம், கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக அங்கு கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில், கேரளாவின் வயநாடு பகுதியில் நேற்று இரவு மிக கனமழை பெய்தது. இந்த கனமழையை தொடர்ந்து அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இன்று அதிகாலை 2 மணியளவில் சூரல்மலை பகுதியில் முதலில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து, அதிகாலை 4.30 மணிக்கு 2-வதாக மற்றொரு பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளால் வைத்திரி, வெள்ளேரிமலை, மேப்பாடி … Read more

இந்த வருடத்தின் முதல் நான்கு மாதத்தில் பெருந்தோட்டப் பயிர்களின் ஏற்றுமதி வருமானம் 1118 மில்லியன் டொலர் வரை அதிகரிப்பு

தேயிலை, இறப்பர், தென்னை, கறுவா மற்றும் மிளகு போன்ற பெருங்கோட்ட பயிர்களின் ஏற்றுமதி ஊடாக 2024 ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரையான காலப் பகுதியில் நாட்டிற்கு கிடைத்த ஏற்றுமதி வருமானம் 1118.06 மில்லியன் டொலர் வரை அதிகரித்துள்ளது. விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் நேற்று (29) இடம்பெற்ற பெருந்தோட்ட பிரிவின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடலில் இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரையான காலப்பகுதியில் நாட்டின் பெருந்தோட்டப் … Read more

“உங்களை கோடீஸ்வரர் ஆக்கும் 4 உத்திகள்.." பணத்தை பெருக்க எளிய வழிமுறை இதுதான்…!

பணம் சம்பாதிப்பது, அதில் ஒரு பகுதியை சேமித்து சரியாக முதலீடு செய்தால் பணத்தை பெருக்குவது எளிது. `பெரும் பணத்தை சேர்ப்பது, எளிமையானது’ என்பதை புரிந்து கொள்ள உங்களுக்கு பண நிர்வாக படிப்போ, பார்முலாவோ தெரிய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இந்த கட்டுரையில் உங்கள் பணத்தை பெருக்கும் 4 முக்கிய வழிமுறைகளை சற்று விரிவாக காண்போம். குடும்பத்துக்கு நிதிப் பாதுகாப்பு 1 குடும்பத்துக்கு நிதிப் பாதுகாப்பு டேர்ம் லைஃப் இன்ஷுரன்ஸ் (Term Life Insurance) என்றாலே காத … Read more

வயநாடு நிலச்சரிவு துயரச் சம்பவம்: நடிகர் விஜய் கவலை

சென்னை: “வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறேன்” என நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு துயரச் செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக பிரார்த்திப்பதுடன் இந்நேரத்தில் அவர்களுடன் துணை நிற்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் … Read more

வயநாடு நிலச்சரிவு: பாறையை பிடித்து உயிருக்குப் போராடும் நபரை காப்பற்ற தீவிர முயற்சி

வயநாடு: கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட கிராமத்தில், வேகமாகப் பாயும் வெள்ளத்துக்கு மத்தியில் சேற்றில் மூழ்கிய நிலையில் ஒரு பெரிய பாறையை பிடித்துக் கொண்டு ஒரு நபர் உயிருக்குப் போராடும் காட்சிகள் வெளியாகி நெஞ்சை பதற வைத்துள்ளது. அவரைக் காப்பாற்றும் முயற்சி தீவிரமாக நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட அந்த நபர், பெரிய பாறைகளுக்கு இடையில் சிக்கி உயிர் பிழைத்துள்ளார். எனினும், நிலச்சரிவினால் ஏற்பட்ட சேறுகளில் சிக்கி அவரால் எழுந்து … Read more

நாம கல்யாணம் பண்ணிக்கலாமா.. “நெஞ்சத்தை கிள்ளாதே” இன்றைய எபிசோட் அப்டேட்

Nenjathai Killathe Today Episode: இன்றைய “நெஞ்சத்தை கிள்ளாதே” சீரியல் எபிசோட்டில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

டேரில் மிட்செல்க்கு பதில் சென்னை அணிக்கு வரும் கிளென் மேக்ஸ்வெல்!

அடுத்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ளது. இதனால் பல அணிகளில் பெரிய மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை ஐபிஎல் ஏலம் தொடர்பாக பிசிசிஐ மற்றும் அணி உரிமையாளர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆர்சிபி அணியின் ஆல்ரவுண்டர் அந்த அணியை விட்டு விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த சில சீசர்களாக மேக்ஸ்வெல் ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மேக்ஸ்வெல் … Read more

படப்பிடிப்பு நிறுத்தம்?! வேகமெடுக்கும் தயாரிப்பாளர் சங்க விவகாரம் – நடிகர் சங்கம் சொல்லும் பதில்!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கூட்டுக் கலந்தாய்வுக் கூட்டத்தின் சார்பில் விஷாலைத் தொடர்ந்து தனுஷுக்கும் கட்டுப்பாடு விதித்தனர். புதிய படப்பிடிப்புகள் தொடங்கக் கூடாது உட்படச் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அந்தத் தீர்மானம் குறித்து விவாதிக்க நடிகர் சங்கத்தில் அவசர கூட்டம் நடந்தது. நேற்று நடந்த அந்தக் கூட்டத்திற்குப் பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் பூச்சி எஸ்.முருகன், கருணாஸ் உட்படப் பலரும் வந்திருந்தார்கள். தனுஷுக்குக் கட்டுப்பாடு, படப்பிடிப்பு நிறுத்தம் தொடர்பான பல தீர்மானங்களுக்குக் கண்டனம் தெரிவித்தனர். … Read more