வயநாடு மக்களுக்கு நிவராணமாக ஒரு மாத அமர்வுக் கட்டணம் அளிக்க குன்னூர் கவுன்சிலர்கள் தீர்மானம்

குன்னூர்: வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு குன்னூரில் நடந்த நகராட்சி கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்துடன் கவுன்சிலர்கள் அனைவரும் ஒரு மாதத்திற்கான தங்களின் அமர்வுக் கட்டணத்தை நிவாரண நிதிக்கு வழங்கவும் தீர்மானம் நிறைவேற்றினர். கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை மற்றும் சுரல்மலைப் பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவால் 190-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று (ஜூலை 31) குன்னூர் நகராட்சியில் நடந்த நகர்மன்றக் கூட்டத்தில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு … Read more

ரேன்சம்வேர் தாக்குதல்: நாடு முழுவதும் 300+ கூட்டுறவு வங்கி சேவை பாதிப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் 300-க்கும் மேற்பட்ட கூட்டுறவு மற்றும் மண்டல ஊரக வங்கிகள், இணையதளங்கள் ஆகியவை ரேன்சம்வேர் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதாக நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள சிறிய வங்கிகளுக்கு தொழில்நுட்ப அமைப்புகளை வழங்கும் சி-எட்ஜ் டெக்னாலஜிஸ் என்ற மென்பொருள் நிறுவனம் இந்த தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI), சி-எட்ஜ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் மென்பொருள், சில்லறை … Read more

தமிழக ஆளுநர் ஆர் என் ரவியின் பதவிக்காலம் நீட்டிப்பா?

டெல்லி தமிழக ஆளுநர் ஆர் என் ரவியின் பதவிக்காலம் நீட்டிகப்படலாம் என அதிகாரபுர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்ற்ன. கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றார். இதற்கு முன்பு நாகலாந்து ஆளுநராக இருந்த இவரின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. என்வே இவருடைய பதவி நீட்டிக்கப்படுமா? அல்லது வேறொருவர் புதிதாக நியமிக்கப்படுவாரா? என்ற கேள்வி அனைவரும் மத்தியிலும் எழுந்தது. தற்போது ஆளுநர் ரவியின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரபுர்வமற்ற தகவல் வெளியாகி உள்ளது. புதுச்சேரி, மகாராஷ்டிரா, … Read more

இவனுங்க தொல்லை தாங்கல.. கோட் 3வது சிங்கிள் பரிதாபங்கள்.. யுவன் சங்கர் ராஜா போட்ட போஸ்ட்!

சென்னை: கோட் படத்தின் 3வது சிங்கிளையாவது ரசிகர்கள் கொண்டாடும் விதமாக கொடுங்க யுவன் என அவரது ஸ்டூடியோவிலேயே தவமாய் தவம் கிடக்க ஆரம்பித்து விட்டார் இயக்குநர் வெங்கட் பிரபு என யுவன் சங்கர் ராஜா சற்றுமுன் வெளியிட்ட போஸ்ட்டை பார்த்து ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப்

ஆயுள், மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் மீதான ஜிஎஸ்டியை நீக்கவும் – நிதி மந்திரிக்கு நிதின் கட்கரி கடிதம்

புதுடெல்லி, ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டு பிரீமியங்கள் மீதான ஜிஎஸ்டியை நீக்குமாறு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு, மத்திய சாலை போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்கரி கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “நாக்பூரின் ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் சார்பில் தொழில் துறையில் எதிர்கொள்ளும் தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஒரு குறிப்பாணையை என்னிடம் அளித்துள்ளனர். அவர்கள் எழுப்பிய முக்கிய பிரச்சினை, ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டு பிரீமியத்தின் … Read more

டிஎன்பிஎல் எலிமினேட்டர் சுற்று – டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சு

திண்டுக்கல், டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் வெளியேற்றுதல் சுற்றில் பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீசும். ஆர்.அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்சும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடி வருகிறது. லீக் சுற்று முடிவில் 8 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ஏற்கனவே திண்டுக்கல் டிராகன்சை 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து இருப்பதால் கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம … Read more

ஈரானில் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் யார்? தாக்குதல் நடத்தியது இஸ்ரேலா? – முழு விவரம்

தெஹ்ரான், காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 100க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளது. ஆனால், 110க்கும் மேற்பட்டோர் இன்னும் பணய கைதிகளாக ஹமாஸ் பிடியில் … Read more

ஒகஸ்ட் மாத எரிபொருள் விலை திருத்தத்தில் மாற்றம் இல்லை..

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தினால் மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தம் இம்மாதம் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதற்கமைய தற்போது காணப்படுகின்ற சில்லறை விலையில் மாற்றம் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அறிக்கை மூலம் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது

ஆடிப்பூரம்: ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் ஆண்டாள் அவதாரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

108 வைணவத் திருத்தலங்களில் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலாகும். லட்சுமி தேவியின் அம்சமாகிய ஸ்ரீஆண்டாள் மானிடப் பெண்ணாகப் பிறந்து பூமாலை சூட்டியபின் பாமாலை பாடி இறைவனை அடைந்ததாக வரலாறு உண்டு. இங்கு ஆண்டாளின் ஜன்ம நட்சத்திரமான ஆடிப்பூரத்தன்று தேர்திருவிழா மிக வெகுவிமர்சையாக நடைபெறும். அதன்படி, இந்த வருடத்திற்கான ஆடிப்பூரத் திருவிழா ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. ஆண்டாள் ரெங்கமன்னார் 12 நாள்கள் நடைபெறும் ஆடிப்பூர விழாவின் ஐந்தாம் நாளில் (3-ம் தேதி) … Read more

மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்காமல் திமுக கவுன்சிலர்கள் ரகசிய கூட்டம்: ஓசூர் திமுகவில் பரபரப்பு

ஓசூர்: ஓசூர் மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் பங்கேற்காமல் தனியார் ஓட்டலில் ரகசிய கூட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் திமுக 22, அதிமுக 16, பாஜக 1, பாமக,1 காங்கிரஸ் 1 சுயேட்சி 4 என மொத்தம் 45 கவுன்சிலர்கள் உள்ளனர். இந்நிலையில் ஓசூர் மாமன்ற கூட்டம் இன்று நடந்தது. இக்கூட்டத்தில் மேயர் சத்யா தலைமை வகித்தார். துணை ஆணையாளர் டிட்டோ முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் அதிமுக 16 பேர் , … Read more