ரூ.70 கோடி போதைப்பொருள்; இலங்கைக்கு கடத்தவிருந்த கும்பல் – கிளாம்பாக்கத்தில் மடக்கிய அதிகாரிகள்!

சென்னையிலிருந்து ராமநாதபுரம் வழியாக இலங்கைக்குப் பெருமளவு போதைப்பொருள் கடத்தப்படவிருப்பதாகச் சென்னை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் சென்னையில் உள்ள பேருந்து நிலையங்கள், விமான நிலையம், ரயில் நிலையங்களில் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அந்த வகையில் சென்னை அருகே உள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த ஒருவரைப் பிடித்து … Read more

வாடகை தாய் மூலம் குழந்தை பெற 60 வயது தம்பதிக்கு தகுதி சான்றிதழ்: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: வாடகை தாய் மூலம் குழந்தை பெற நினைக்கும் 60 வயது தம்பிக்கு தகுதி சான்றிதழ் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த 60 வயது தம்பதி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: “எனக்கும், என் மனைவிக்கும் 1984-ம் ஆண்டில் திருமணம் நடந்தது.பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை. டாக்டர்கள் பரிந்துரையின்பேரில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தோம். ஆனாலும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ள … Read more

டெல்லியில் 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரம்: ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிப்பு; விசாரணை குழு அமைப்பு

புதுடெல்லி: திடீர் வெள்ளத்தில் சிக்கி டெல்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரிக்க குழு அமைத்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ள இந்த விசாரணை குழு, 30 நாட்களுக்குள் விபத்துக்கான காரணங்களை கண்டறிந்து, நடவடிக்கைகள் மற்றும் கொள்கை மாற்றங்களை பரிந்துரை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற … Read more

காஞ்சிபுரம் மேயரின் பதவி தப்பியது எப்படி : முழு விவரம்

காஞ்சிபுரம் இன்று காஞ்சிபுரம் மேயருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் போது உறுப்பினர் யாரும் வராததால் அவருடைய பதவி தப்பி உள்ளது. திமுகவைச் சேர்ந்த மகாலட்சுமி யுவராஜ் 51 வார்டுகள் கொண்ட காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக உள்ளார். அவர் மீது எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் பல்வேறு புகார்களை கூறி வந்த நிலையில், திமுக மாமன்ற உறுப்பினர்களும் மேயருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். எனவே மேயர் தனது பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி 33 மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி … Read more

Yogi babu: எனக்கும் சூரிக்கும் போட்டியா.. யோகிபாபு சொன்ன விஷயம்!

சென்னை: யோகி பாபு காமெடியனாகவும் ஹீரோவாகவும் அடுத்தடுத்த தளங்களில் பயணித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான மண்டேலா, பொம்மை நாயகி படங்கள் ஹீரோவாக மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுக் கொடுத்தன. இதே போல ரஜினி. விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடி டிராக்கில் பயணிக்கவும் யோகி பாபு தயக்கம் காட்டவில்லை. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 2ம்

பாரீஸ் ஒலிம்பிக்; நூலிழையில் பதக்கத்தை தவறவிட்ட அர்ஜுன் பாபுதா

பாரீஸ், 33-வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில், 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிச்சுற்றுக்கான தகுதிச்சுற்று போட்டியில் இந்திய வீரர் அர்ஜுன் பாபுதா பங்கேற்றார். இதில் பாபுதா சிறப்பாக செயல்பட்டு 630.1 புள்ளிகள் பெற்று 7-வது இடம் பிடித்தார். இதன்மூலம் அவர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்நிலையில், … Read more

வெனிசூலா அதிபர் தேர்தலில் நிகோலஸ் மதுரோ வெற்றி.. எதிர்க்கட்சிகள் ஏற்க மறுப்பு

காரகஸ்: வெனிசூலா நாட்டில் நேற்று அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் நிகோலஸ் மதுரோ மீண்டும் போட்டியிட்டார். எதிர்க்கட்சிகள் கூட்டணி வேட்பாளர் எட்மண்டோ கான்சலஸ் மற்றும் 8 பேர் களத்தில் இருந்தனர். எனினும் நிகோலஸ் மதுரோவுக்கும், எட்மண்டோ கான்சலசுக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. சமூகப் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி, வாய்ப்பு தேடி நாட்டை விட்டு வெளியேறும் மக்கள், அரசுக்கு எதிரான அதிருப்தி அலை ஆகிய அம்சங்கள் தேர்தல் பிரசாரத்தில் எதிரொலித்தது. வெளிநாடுகளில் … Read more

தனியார் நிறுவனத்தில் ரூ.20 கோடி மோசடி; ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு.. பெண் மேலாளர் சிக்கியது எப்படி?

கேரள மாநிலம், கொல்லம் முளங்காடகம் பகுதியைச் சேர்ந்தவர் தன்யா மோகன் (40). மணப்புரம் குழுமத்தின் அங்கமான திருச்சூர் திருப்ரையார் மணப்புரம் கோம்ப்டக் அண்ட் கன்சல்ட்டன்ட் லிமிட்டெட் நிறுவனத்தின் உதவி பொது மேலாளராக இருந்தார். அந்த நிறுவனத்தில் 18 ஆண்டுகளாக உதவி பொது மேலாளராக இருந்ததால், மிகவும் நம்பிக்கைகுரியவராக வலம் வந்தார். இந்த நிலையில்தான் தன்யா மோகன் லோன் ஆப் மூலம் சிறிது சிறிதாக 19.94 கோடி ரூபாய் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பணத்தில் பலருக்கும் தாராளமாக … Read more

காவிரியில் வெள்ளப் பெருக்கு: சேலம் – ஈரோடு விசைப்படகு போக்குவரத்து நிறுத்தம்

மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 20,000 கன அடி நீர் திறப்பால், சேலம் – ஈரோடு இடையே விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சேலம் – ஈரோடு மாவட்டத்தை இணைக்கும் வகையில், எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி,, ஈரோடு நெரிஞ்சிப்பேட்டை பகுதிகளை இணைக்கும் வகையில் கதவணை கட்டப்பட்டுள்ளது. இந்த கதவணை மூலம் மின்சார உற்பத்தியும் நடக்கிறது. இந்த இரு மாவட்டத்துக்கு இடையிலான விசைப்படகு போக்குவரத்து மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு அலுவலர்கள், விவசாயிகள் என ஆயிரக்கணக்கானோர் … Read more

அரசியல் கட்சியாக மாறும் ஜன சுராஜ்: பிஹார் தேர்தலில் போட்டி என பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு

பாட்னா: தனது ‘ஜன சுராஜ்’ அமைப்பு அரசியல் கட்சியாக அடுத்த வருடம் பிஹார் தேர்தலில் போட்டியிடும் என்று தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தேர்தல் திட்டமிடுதலுக்கு புகழ்பெற்ற ஐ-பேக் என்ற அமைப்பின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர். பாஜக, ஆம் ஆத்மி, திமுக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் என பல்வேறு கட்சிகளுக்காக அவர் பணியாற்றினார். 2021ல் நடந்த ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் திமுக மற்றும் திரிணமூல் காங்கிரஸுக்காக பிரஷாந்த் கிஷோர் பிரச்சார வியூகம் அமைத்தார். … Read more