போதை மருந்து வைத்திருந்த மூவர் கிளாம்பாக்க்ம் பேருந்து நிலையத்தில் கைது

சென்னை போதைப் பொருள் வைத்திருந்த மூவர் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் போதை நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், ஆங்காங்கே போதை பொருள்கள் பறிமுதல் செய்யப்படும் செய்தி அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளன. கடந்த 24 ஆம் தேதி சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவரிடம் இருந்து 24.07.2024 அன்று 5.970 கிலோ மெத்தாம்பெட்டமைனை போதைப்பொருள் தடுப்புப் பிரிவை சேர்ந்த சென்னை காவல்துறையினர் மீட்டுள்ள்னர். … Read more

AR Muruga dos: அடுத்தடுத்த உதவிகள்.. ராசு மதுரவன் குடும்பத்திற்கு ஏஆர் முருகதாஸ் ஒரு லட்சம் நிதிஉதவி

சென்னை: மாயாண்டி குடும்பத்தார், முத்துக்கு முத்தாக போன்ற குடும்ப உறவுகளின் மகத்துவத்தை சொல்லும் படங்களை கொடுத்தவர் இயக்குநர் ராசு மதுரவன். இவரது படங்களை பார்க்கும் யாரும் கண்ணீர் இல்லாமல் கடந்து விட முடியாது. இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னதாக ராசு மதுரவன் புற்றுநோயால் உயிரிழந்தார். அவர் இறந்து பத்து ஆண்டுகள் ஆனதையொட்டி அவரது மனைவி பிரபல

சக்கர வியூகம்போல் நாடு தாமரை வியூகத்தில் சிக்கியுள்ளது – ராகுல்காந்தி

புதுடெல்லி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 22-ம் தேதி தொடங்கிய நிலையில், 23-ம் தேதி 2024, 2025-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதை தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. பட்ஜெட் குறித்து காரசார விவாதம், ஆளுங்கட்சி-எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே வார்த்தை மோதல், அமளி என அவை நடவடிக்கைகளில் அனல் பறந்து வருகிறது. இந்தநிலையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி … Read more

விராட் கோலியின் இடத்தை யாரால் நிரப்ப முடியும்? – ராபின் உத்தப்பா பதில்

பல்லகெலே, 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. சாம்பியன் பட்டம் வென்றதும் விராட் கோலி, ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகிய சீனியர் வீரர்கள் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இதைத் தொடர்ந்து டி20 அணியில் அவர்களுடைய இடத்தை நிரப்பப்போவது யார் என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில் 3 வகையான கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடும் விராட் கோலியின் இடத்தை யாரால் நிரப்ப முடியும்? என்ற கேள்விக்கு இந்திய … Read more

தைவானில் சர்வதேச மாநாடு : 6 நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை

தைபே சிட்டி, சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949-ம் ஆண்டு தனிநாடாக பிரிந்தது. ஆனால் தைவானை தனது நாட்டின் ஒரு அங்கம் என கருதும் சீனா அதனை மீண்டும் இணைத்துக்கொள்ள துடிக்கிறது. இதனால் தைவான் எல்லையில் போர்க்கப்பல்களை அனுப்பி சீனா பதற்றத்தை ஏற்படுத்துகின்றது. மேலும் வேறு எந்த நாடுகளும் தைவானுடன் அதிகாரப்பூர்வ உறவு வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தநிலையில் அடுத்த வாரம் சர்வதேச உச்சிமாநாடு தைவானில் நடைபெற உள்ளது. இதில் 25-க்கும் மேற்பட்ட நாடுகள் … Read more

ரூ.50,000 விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட தயாராகும் ஓலா

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் புதிதாக மற்றொரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தற்பொழுது உள்ள மாடல்களை விட மிகக் குறைவான விலையில் ரூபாய் 50,000 முதல் ரூபாய் 60,000 விலைக்குள் விற்பனைக்கு வெளியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஏற்கனவே சந்தையில் போலா நிறுவனம் மிகக் குறைந்த விலையில் அதாவது ரூபாய் 75 ஆயிரம் ஆரம்ப விலையில் S1X வரிசை எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகின்றது. Affordable Ola escooter S1X மாடலை விட மிக குறைவான விலையில் வரவுள்ள … Read more

`5 ஆண்டுகளில் 633 இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உயிரிழப்பு' – மத்திய அமைச்சர் `அதிர்ச்சி' தகவல்!

அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் இந்திய மாணவர்கள் உயிரிழப்பு, கொலை போன்ற செய்திகள் அவ்வப்போது தொடர்ச்சியாக வந்த வண்ணமே இருக்கிறது. இந்த நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் வெளிநாடுகளில் 633 இந்திய மாணவர்கள் உயிரிழந்திருப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்திருக்கிறார். முன்னதாக, நாடாளுமன்றத்தில் தற்போது நடந்துகொண்டிருக்கும் மழைக்கால கூட்டத்தொடரில், கடந்த வெள்ளியன்று மக்களவையில் கேரள எம்.பி கே.சுரேஷ், 2019 முதல் வெளிநாடுகளில் உயர் கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்களின் உயிரிழப்பு பற்றி கேள்வியெழுப்பினார். உயிரிழப்புகள் அதற்கு … Read more

தமிழகத்தில் 20 ஆண்டுகளில் 5,557 லஞ்ச வழக்குகள் பதிவு: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

மதுரை: “தமிழகத்தில் 20 ஆண்டுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் 5,557 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இதில் 3,035 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்ட கல்வித் துறையில் ஆர்எம்எஸ்ஏ திட்டத்தில் கடந்த 2016- 2017 ஆண்டில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக 2027-ல் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு உத்தரவிடக்கோரி குணசேகரன் என்பவர் உயர் … Read more

மகாராஷ்டிர வனப்பகுதியில் இரும்பு சங்கிலியால் கட்டப்பட்டிருந்த பெண் மீட்பு – நடந்தது என்ன?

மும்பை: மகாராஷ்டிர மாநில வனப்பகுதியில் இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் ஒரு பெண் மீட்கப்பட்டுள்ளார். அவரிடம் அமெரிக்க பாஸ்போர்ட் மற்றும் தமிழக முகவரி கொண்ட ஆதார் அட்டை மீட்டெடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மரத்தில் இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அவரிடம் அமெரிக்க பாஸ்போர்ட்டின் நகலும் மற்றும் தமிழக முகவரி கொண்ட ஆதார் அட்டை போன்ற ஆவணங்கள் உள்ளன. அந்தப் பெண்ணின் பெயர் லலிதா … Read more

இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை காசாவில் 10,000 மாணவர்கள், 400 ஆசிரியர்கள் பலி

டெல் அவில்: காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 10,000 மாணவர்கள் மற்றும் 400 ஆசிரியர்கள் பலியாகியுள்ளதாக பாலஸ்தீன கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாளுக்கு நாள் காசா போர் தீவிரமடைந்து வரும்நிலையில், இஸ்ரேலிய இராணுவம் புதிய வெளியேற்ற உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்நிலையில், மத்திய காசா பகுதியில் உள்ள புரேஜ் மற்றும் நுசிராத் அகதிகள் முகாம்களில் இருந்து பாலஸ்தீனர்கள் வெளியேறி வருகின்றனர். 86% காசா மக்கள் தங்கள் இருப்பிடங்களில் இருந்து வெளியேறிவிட்டனர் என்று பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா … Read more