உ.பி: பாஜக சரிவு; 78 தொகுதிகளில் 40,000 தொண்டர்களிடம் நேர்காணல் – சொல்லப்படும் காரணங்கள் என்னென்ன?

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது முறையாக என்.டி.ஏ கூட்டணி ஆட்சியமைத்தது. இந்த தேர்தலில், பா.ஜ.க-வின் கோட்டையாக கருதப்பட்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க கடுமையான சரிவைக் கண்டனது. 2019 தேர்தலுடன் ஒப்பிடும்போது, ​​பிரஜ், மேற்கு உ.பி., கான்பூர்-புந்தேல்கண்ட், அவத், காசி, கோரக்பூர் பகுதிகளில் குறிப்பிடத்தக்க சரிவை பாஜக கண்டிருக்கிறது. ராகுல் காந்தி – மோடி எனவே, இந்த தேர்தல் தோல்விக்கான காரணங்களை அறியும் நோக்கில், பா.ஜ.க, 78 மக்களவைத் தொகுதிகளில், 40 குழுக்களால் விரிவான ஆய்வு நடத்தியது. … Read more

ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மாயாவதி அஞ்சலி: சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தல்

சென்னை: சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு, கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி நேற்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய, இந்த கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் (52), கடந்த 5-ம் தேதி மாலை சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் முன்பு வெட்டி கொலை செய்யப்பட்டார். … Read more

ஹாத்ரஸ் நெரிசலில் 121 பேர் இறந்தது மிகவும் வேதனை அளிக்கிறது: போலே பாபா வீடியோவில் பேச்சு

ஆக்ரா: ‘‘ஹாத்ரஸ் ஆன்மிக கூட்ட நெரிசலில் 121 பேர் உயிரிழந்தது மிகவும் வேதனை அளிக்கிறது’’ என்று சாமியார் போலே பாபா வீடியோவில் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டம் சிக்கந்தராராவின் கிராமத்தில் முகல்கடி கிராமத்தில், கடந்த 2-ம் தேதி சாமியார் நாராயண் சாகர் விஸ்வ ஹரி (எ) போலே பாபா (65) என்பவரது ஆன்மிகக் கூட்டம் நடைபெற்றது. இவரது உண்மையான பெயர் சுராஜ்பால். கூட்டம் முடிந்ததும் போலே பாபா வெளியேறினார். அப்போது அவரது பாதங்களை வணங்கி ஆசீர்வாதம் … Read more

வரலக்ஷ்மி ரிசப்ஷனுக்கு மட்டும் இத்தனை கோடியா? அம்பானி போல் செலவு செய்த சரத்குமார்

Varalaxmi Nicholai Wedding Expenses: வரலக்ஷ்மி மற்றும் நிகோலாய் திருமண விழா கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரம்மாண்ட முறையில் நடைபெற்றது. மேலும் இந்த திருமணத்திற்கு என பிரமாண்ட செலவுகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. 

வேற்றுகிரகவாசிகள் எங்கே வசிக்கின்றனர்? தீவிரமாய் ஏலியன்களை தேடும் நாசாவின் முயற்சி!

Alien Searching Telescope : நாசா ஏலியன்களை தேடும் தொலைநோக்கியை உருவாக்குகிறது, 2050 ஆம் ஆண்டுக்குள் மக்கள் வசிக்கும் கிரகத்தை கண்டுபிடிப்பதை நோக்கமாகக் கொண்டு, இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்படும் தொலைநோக்கி 2040 ஆம் ஆண்டுக்குள் வேறு கிரகங்களில் உயிரினங்கள் வாழ்வதற்கான தடயங்கள் இருக்கிறதா என்பதை தேடும் முயற்சிகளைத் தொடங்கும்.  தொழில்நுட்பத்தில் தொடர்ந்து அடுத்தடுத்த கட்டத்திற்கு சென்று கொண்டிருக்கும் விண்வெளி ஏஜென்சி நாசா ஒரு ‘ஏலியன்களைத் தேடும்’ (alien-hunting) தொலைநோக்கியை உருவாக்கியுள்ளது, இது ஏவப்பட்டு இறுதிக்கும் மனிதர்கள் வாழ்வதற்கான … Read more

வங்கி ஆவணங்கள் கோரிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனு மீது இன்று உத்தரவு

சென்னை: கடந்த ஓராண்டை கடந்தும் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனு மீது இன்று சென்னை அமைர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது. ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு ஓராண்டாக சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத் துறை,  சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்தது. இந்த வழக்கின் கடந்த விசாரணைகளின்போது, அமலாக்கத்துறை குற்றம் சாட்டிய,  வங்கி ஆவணங்களை  தங்களக்கு வழங்க உத்தரவிடக்கோரி செந்தில்பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார். … Read more

GOAT: மரணக்குத்து சாங்.. கோட் படத்தில் இணைந்த கங்கை அமரன்!

சென்னை: தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் திரைப்படம் செப்டம்பர் 5ந் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியான நிலையில், மூன்றாவது பாடலை வெங்கட்பிரபுவின் தந்தை கங்கை அமரன் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. லியோ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், வெங்கட் பிரபு

மீண்டும் `அண்ணாமலை Vs எடப்பாடி’ – உச்சக்கட்ட மோதலில் ஸ்கோர் செய்வது யார்?!

கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “2019-ல் எங்களுக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு அ.தி.மு.க-தான் காரணம். மதுரை முதல் கன்னியாகுமரி வரையில் அந்த கட்சி என்னவாகிறது என ஜூன் 4-ம் தேதி பாருங்கள். ஒரு இடத்தில் கூட டெபாசிட் வாங்கமாட்டார்கள். தி.மு.க எதிர்ப்புக்கு என ஒரு கட்சி தேவையா?. தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க என்கிற ஒரு கட்சி இருக்காது” என பேசியிருந்தார். இதற்கு எடப்பாடி பழனிசாமி, “பா.ஜ.கவுக்கு புதிதாக ஒரு தலைவர் … Read more

தமிழகம் முழுவதும் 3,335 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் சேதம்: இழப்பீடு வழங்கும் பணிகள் மும்முரம்

சென்னை: தமிழகத்தில் அண்மையில் பெய்தகோடை மழை மற்றும் சூறைக்காற்றால் 3 ஆயிரத்து 335 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன என்றுகண்டறியப்பட்டுள்ளது. அதனால், 2.47 ஏக்கருக்கு ரூ.17 ஆயிரம் வீதம் விவசாயிகளுக்கு இழப்பீடுவழங்குவதற்கான நடைமுறைகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. தமிழகத்தில் கோடை மழையால், சூறைக்காற்றால் தோட்டக்கலைப் பயிர்கள் பெரிதும் சேதமடைந்தன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. மழையால், சூறைக்காற்றால் சேதமடைந்த பயிர்களை உடனடியாக கணக்கிட்டு இழப்பீடு வழங்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, சேதமடைந்த … Read more

அசாம் வெள்ளத்தில் 64 பேர் உயிரிழப்பு: காசிரங்கா பூங்காவில் 114 விலங்குகள் இறந்தன

குவாஹாட்டி: கடந்த ஜூன் மாதத்தில் இருந்து அசாமில் கனமழை பெய்து வருகிறது. பிரம்மபுத்திரா, பராக் நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அசாம் மாநிலத்தில் மொத்தமுள்ள 35 மாவட்டங்களில் 30 மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளன. 3,533 கிராமங்கள் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. கடந்த ஜூன் மாதம் முதல் இதுவரை வெள்ள பாதிப்புகளால் 64 பேர் உயிரிழந்துள்ளனர். 24லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சுமார் 50,000-க்கும் மேற்பட்டோர் வீடு, உடைமைகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்து … Read more