“உளவுத்துறை சரியாக பணியாற்றி இருந்தால்…” – ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அன்புமணி ராமதாஸ் 

விழுப்புரம்: உளவுத்துறை சரியாக பணியாற்றி இருந்தால் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டு இருக்கமாட்டார் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் சி. அன்புமணியை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அய்யூர் அகரம், தென்னமாதேவி, சோழகனூர். ஆசாரங்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், “திமுகவினர் கொடுக்கும் பணம், சாராயம், கஞ்சா விற்று சம்பாதித்த பணம். கடந்த தேர்தலில் கல்விக்கடன், நகைக்கடன் ரத்து என்றார்கள். செய்தார்களா? இத்தொகுதிக்கு எவ்வளவோ … Read more

காங்கிரஸில் இணைந்த பிஆர்எஸ் எம்எல்ஏ

ஹைதராபாத்: தெலங்கானாவில் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. ரேவந்த் ரெட்டி முதல்வராக உள்ளார். தொடர்ந்து 2 முறை ஆட்சியில் இருந்த பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சி தோல்வி அடைந்தது. இந்நிலையில், பிஆர்எஸ் கட்சியின் 6 எம்எல்ஏக்கள் ஏற்கெனவே காங்கிரஸில் இணைந்தனர். இந்நிலையில், கத்வாலா பிஆர் எஸ் கட்சி எம்எல்ஏவான கிருஷ்ண மோகன் ரெட்டி நேற்று ஹைதராபாத்தில் முதல்வர் ரேவந்த் ரெட்டியின் முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார். Source … Read more

தமிழக முதல்வரின் புதுக்கோட்டை பயணம் திடீர் ரத்து

சென்னை தமிழக முதல்வரின் புதுக்கோட்டை பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழக அரசின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இல்ல திருமண விழா புதுக்கோட்டையில் நடைபெற று வருகிறது. காலை திருமண நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், மாலை வரவேற்பு நடைபெறு உள்ளது. இந்த  திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி மாலை 5 மணியளவில் முதல்வ்ர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்திற்குச் சென்று, அங்கிருந்து திருச்சிக்கு செல்வார் என்றும், … Read more

Neeya naana show: சண்முகம் சார் பொண்ணை சூப்பரா வளர்த்திருக்கீங்க.. சர்ட்டிபிகேட் கொடுத்த கோபிநாத்!

சென்னை: விஜய் டிவியின் டாக் ஷோவான நீயா நானா ஷோ, பல ஆண்டுகளை கடந்தும் ஏராளமான ரசிகர்களின் விருப்பத்திற்குரியதாக அமைந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டாலும் நீயா நானா ஷோவை முந்த முடியாமல் திணறி வருகின்றன. இந்த சிறப்பிற்கு நிகழ்ச்சியின் ஆங்கர் கோபிநாத்தான் காரணமாக அமைந்துள்ளார். இந்த நிகழ்ச்சியின் துவக்கத்திலிருந்தே நிகழ்ச்சியின் ஆங்கராக

வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் கூலிப்படைகளாக மாறுகின்றனர்: டிடிவி தினகரன் வருத்தம்

விழுப்புரம்: “வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் தீயவர்களிடம் சிக்கி கூலிப்படைகளாக மாறிவருகின்றனர். காவல்துறையினரும் இந்த ஆட்சியின்மீது மிகுந்த வருத்தத்துடன் உள்ளனர். பெண்களுக்கு இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை” என்று விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரத்தில் டிடிவி தினகரன் தெரிவித்தார். விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 10-ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் போட்டியிடும் திமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் அந்தவகையில் இன்று (ஜூலை 07) பாமக … Read more

ஹத்ராஸ் நெரிசல் சம்பவம்: டெல்லியில் கைதான முக்கிய குற்றவாளிக்கு 14 நாள் நீதிமன்ற காவல்

புதுடெல்லி: ஹாத்ரஸ் நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த விவகாரத்தில் டெல்லியில் கைதான முக்கிய குற்றவாளியை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் மாவட்டம் புல்ராய் கிராமத்தில் கடந்த 2-ம் தேதி சாமியார் போலே பாபாவின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக சிக்கந்திரா ராவ் போலீஸார், பாரதிய நியாயசன்ஹிதா சட்டத்தின் பிரிவான மரணம் விளைவித்தல் உள்ளிட்ட … Read more

அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் சிபிசிஐடி சோதனை

கரூர் அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் சிபிசிஐடி காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கரூரில் நடந்த ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் தனது பெயரும் சேர்க்கப்படலாம் என கருதி அ.தி.மு.க. முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், முன்ஜாமீன் கேட்டு கரூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். நேற்று இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எனவே கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிசிஐடி போலீசார் … Read more

சேஸிங்கும் இருக்கு.. துப்பாக்கியும் இருக்கு.. அஜித்தின் லுக்ஸ்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சென்னை: நடிகர் அஜித், திரிஷா, அர்ஜுன், ஆரவ் என முன்னணி நடிகர்கள் கூட்டணியில் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் கடந்த ஆண்டிலேயே அசர்பைஜானில் துவங்கப்பட்ட நிலையில் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படத்தின் சூட்டிங் இடையிலேயே முடங்கியது. கடந்த ஆறு மாத காலங்களாக இந்த படத்தின் சூட்டிங் நடத்தப்படாத நிலையில் கடந்த மாதம் 24ம் தேதி அசர்பைஜானிலேயே

இந்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் – கவாஸ்கர் கோரிக்கை

மும்பை, அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடருடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி, ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஓய்வு பெற்றனர். அதே போல பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் வெற்றியுடன் விடைபெற்றார். ஒரு வீரராக இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த ராகுல் டிராவிட் ஓய்வுக்குப் பின் அண்டர்-19 மற்றும் இந்தியா ஏ அணிகளின் பயிற்சியாளராகவும் என்.சி.ஏ. … Read more

ஆசிரியர் இடமாற்றம்; அதே பள்ளிக்கு மாறிய 133 மாணவர்கள்; நெகிழ்ச்சிக் கதை!

ஹைதராபாத், மஞ்சேரியல் மாவட்டத்தில் இருக்கும் பொனகல் கிராமத்தில் நீண்ட ஆண்டுகளாக அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார் 53 வயதாக ஜெ.ஶ்ரீனிவாஸ். நீண்ட ஆண்டுகளாக இப்பள்ளியில் ஆசிரியராகப் பணிப்புரியும் இவர், மாணவர்களுடன் மிகுந்த அன்பாகப் பழகி, பாடம் எடுத்து வருபவர். அதனால் அப்பகுதியில் உள்ள அனைவரும் இவர் மீது நல்ல மரியாதை கொண்டுள்ளனர். மாணவர்களுக்கும் இவருக்கும் ஆசிரியர் – மாணவர்கள் என்ற உறவைத்தாண்டி பெற்றோரைப் போல மாணவர்கள் மீது அன்பும், அக்கறையும் கொண்டவர் என்று நெகிழ்ச்சியுடன் … Read more