தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 9 முதல் 12-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும், 13-ம்தேதி ஒருசில இடங்களிலும் லேசானது … Read more

‘ஹாத்ரஸ் சம்பவத்தில் பாரபட்சமற்ற விசாரணை வேண்டும்’ – யோகி ஆதித்யநாத்துக்கு ராகுல் காந்தி கடிதம்

லக்னோ: ஹாத்ரஸ் நெரிசல் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். பாரபட்சமற்ற விசாரணை வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். ஜூலை 6-ம் தேதியிடப்பட்ட அந்த கடிதத்தை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பகிர்ந்துள்ளார். அதில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரங்களை விளக்கியுள்ள ராகுல் காந்தி, இழப்பீட்டுத் தொகையை உயர்ந்தி விரைவாக … Read more

ஃபுட்டேஜ் சீரிஸின் அதிரடி போஸ்டர் வெளியீடு

தென்னிந்தியாவின் ஃபவுண்ட் ஃபுட்டேஜ் திரில்லர் ‘ஃபுட்டேஜ்’ ஆகஸ்ட் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!! 

ஆம்ஸ்ட்ராங்கிற்கு நினைவிடம்… நீதிமன்றம் அனுமதி – அடக்கம் செய்யும் இடமும் உறுதியானது!

BSP Leader Armstrong Last Rites: திருவள்ளூரில் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை அடக்கம் செய்யலாம் எனவும் கட்சி இடத்தில் நினைவிடமும் அமைக்கலாம் எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அனைத்து விளையாட்டுகளையும் சமமாக மதிக்க வேண்டும்… பேட்மிண்டன் வீரர் சிராக் ஷெட்டி…

அனைத்து விளையாட்டுகளையும் சமமாக மதிக்க வேண்டும் என்று இந்திய பேட்மிண்டன் வீரர் சிராக் ஷெட்டி கூறியுள்ளார். டி20 உலகக்கோப்பை வென்ற கிரிக்கெட் வீரர்கள் இந்தியா வந்த போது அவர்களுக்கு ஊரே திரள பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனநாயக கடமையைக் கூட செய்ய தவறிய மும்பை மக்கள் நடிகர் நடிகைகள் விளையாட்டு வீரர்கள் செல்வந்தர்கள் தொழிலதிபர்கள் பின்னால் கூட்டம் கூட்டமாக சென்று ஆடிப்பாடி கேளிக்கைகளில் ஈடுபட்டு வருவது குறித்து சமூக வலைத்தளங்களில் வெகுவாக விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில் உலகக்கோப்பை … Read more

எமோஷ்னலாக பேசிய தனுஷ்.. வழக்கம்போல் வேலையைக் காட்டிய ப்ளூ சட்டை மாறன்! என்னனு நீங்களே பாருங்க!

சென்னை: தனுஷின் 50வது படமான ராயன் படத்தை தானே இயக்கி நடிக்கவும் செய்திருந்தார். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று அதாவது ஜூலை 6ஆம் தேதி சென்னையில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இதில் பேசிய தனுஷ் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். தனுஷ் எமோஷ்னலாக பேசியதற்கு ப்ளூ

போலீசாரால் தீர்க்க முடியாத பஞ்சாயத்தை தீர்த்த எருமை

லக்னோ, உத்தரப்பிரதேச மாநிலம், பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள அஷ்கரன்பூர் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் நந்தலால். விவசாயியான இவர் சொந்தமாக மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் மேய்ச்சலுக்கு சென்ற இவரது எருமை மாடு ஒன்று வீடு திரும்பவில்லை. 3 நாட்களாக மாட்டை தேடி அலைந்துள்ள இவர் கடைசியாக பக்கத்து கிராமமான புரேரி ஹரிகேஷில் தன்னுடைய எருமை மாடு இருப்பதைக் கண்டறிந்துள்ளார். மாடு கிடைத்த மகிழ்ச்சியில் அவர் மாட்டை அழைத்து செல்ல முயன்றார். திடீரென ஹனுமான் சரோஜ் என்பவர் … Read more

பாகிஸ்தானில் சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் வரும் 17-ம் தேதி முஹரம் ஆஷுரா கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, அங்குள்ள பஞ்சாப் மாகாணத்தில் வரும் 13ம் தேதி முதல் 18ம் தேதி வரை சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாகாண முதல் மந்திரி மரியம் நவாஸ் தலைமையிலான அரசு இதனை அறிவித்துள்ளது. இது தொடர்பான பரிந்துரையை அந்நாட்டில் மத்தியில் உள்ள ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசிடம் முன் வைக்கப்பட்டுள்ளது. ‘வன்முறையை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக வெறுப்பு பேச்சு … Read more

ரூ.100 கோடி நிலமோசடி வழக்கு: எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் சோதனை!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சரான எம்.ஆர்.விஜயபாஸ்கர், தற்போது அ.தி.மு.க கரூர் மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறார். இவர் மீது, கரூர் அருகே உள்ள வாங்கல் காட்டூர் பகுதியைச் சேர்ந்த தொழிலாதிபர் பிரகாஷ் என்பவர் தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டி கிராமத்தில் உள்ள தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆட்களை வைத்து மிரட்டி, போலியான ஆவணம் கொடுத்து சொத்தை அபகரித்துக் கொண்டதாக, கரூர் நகர காவல் நிலையத்தில் கடந்த மாதம் புகார் அளித்தார். இதற்கிடையில், … Read more