‘தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்து விட்டது’ – பாமக நிர்வாகி கொலை; ராமதாஸ் கண்டனம்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் அரசியல் கொலைகளும், கொலை முயற்சிகளும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இத்தகைய கொடூர நிகழ்வுகள் குறித்தெல்லாம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெரியுமா? என்றே தெரியவில்லை. அடுத்தடுத்து நடைபெற்று வரும் கொலைகளும், கொலைமுயற்சிகளும் தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்து விட்டது என்பதையே காட்டுகிறது. என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கடலூர் மாவட்டம் சூரப்பநாயக்கன் சாவடியைச் சேர்ந்த பாட்டாளி … Read more

சூரத்தில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: 7 பேர் பலி; பலர் காயம்

சூரத்: குஜராத் மாநிலம் சூரத் நகரில் ஆறு தளங்கள் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 7 பலியாகினர். 10-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான கட்டிடத்தில் அங்குள்ள ஜவுளித்துறையில் வேலை செய்யும் பல்வேறு புலம் பெயர் தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வந்திருக்கின்றனர். அந்தக் கட்டிடம் தரம் குறைந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. கட்டிடத்தில் இருந்து ஏழு பேர் மீட்கப்பட்டனர் என்று கூறப்படும் நிலையில் இடிபாடுகளில் இன்னும் எத்தனை பேர் சிக்கியிருக்கிறார்கள் என்பது தெரிவியவில்லை. … Read more

உயிரிழந்த ராணுவ வீரரின் காதல் கதை – உடைந்து அழுத மனைவி!

Kirti Chakra Award: மறைந்த ராணுவ கேப்டன் அன்ஷுமன் சிங்குக்கு வழங்கப்பட்ட கீர்த்தி சக்ரா விருதை அவர் சார்பில் அவரது மனைவி ஸ்மிருதி சிங், குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து நேற்று பெற்றுக்கொண்டார். 

Cinema Roundup: அந்நியன் ரீமேக் அப்டேட்; பிரமாண்ட இயக்குநரைப் பற்றிய ஆவணப்படம்- டாப் சினிமா தகவல்கள்

இந்த வார டாப் சினிமா தகவல்களை இங்கே பார்க்கலாம். மோகன் பாபுவை அரவணைத்த ரஜினி: நடிகர் மோகன் பாபுவுடன் ரஜினி இருக்கும் அந்த அழகான புகைப்படம்தான் தற்போதைய சமூக வலைதள வைரல். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்றைய தினம் தொடங்கியது. கடந்த ஜூலை 2-ம் தேதி ‘கூலி’ படக்குழு திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் செல்கிறார்கள் என்ற தகவல்கள் உலா வந்தன. இதை உறுதிப்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் புகைப்படங்களும் வெளியாகின. … Read more

சாம்சங் முதல் நத்திங் வரை… ஜூலை 2வது வாரத்தில் சந்தைக்கு வரும் அசத்தல் போன்கள்..!!

Smartphone Launches in July 2024: இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் இல்லாதவர்களை காண இயலாது. இந்நிலையில், வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், ஜூலை இரண்டாவது வாரத்தில் பல புதிய ஸ்மார்ட்போன்கள் சந்தைக்கு வர உள்ளன. வாடிக்கையாளர்களும் அது குறித்த விபரங்களை அறிய மிகவும் ஆர்வமாக உள்ளனர். ஜூலை 10ம் தேதி, சாம்சங் நிறுவனம் மிகவும் எதிர்பார்ப்புகள் நிறைந்த மடிக்கக்கூடிய வகையிலான ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது. அதே நேரத்தில் நத்திங் நிறுவனத்தின் துணை பிராண்டான CMF தனது முதல் … Read more

தொடர்ந்து 113 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 113 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. சென்னையில் தொடர்ந்து 113 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல், விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் ரூ.92.34-க்கும் … Read more

பரணி எடுத்த விபரீத முடிவு.. அண்ணா சீரியலின் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இதில் நேற்றைய எபிசோடில், சண்முகம் தவறுதலாக பாக்கியத்தை குத்திவிட கோவத்தோடு வந்த பரணி, கத்தியை எடுத்து கொடுத்து போ எல்லாத்தையும் குத்து, அம்மாவிற்கு எதாவது ஆச்சு, உன்கூட சேர்ந்து வாழவே மாட்டேன் என்று சண்முகத்தின் கன்னத்தில்

கெஜ்ரிவாலின் மருத்துவ ஆவணங்களை மனைவி பார்வையிடலாம் – டெல்லி கோர்ட்டு அனுமதி

புதுடெல்லி, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் இருந்து வருகிறார். அவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சிறையில் உள்ள டாக்டர்களின் பரிந்துரைப்படி அவருக்கு மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. உணவு கட்டுப்பாடும் பின்பற்றப்படுகிறது. இந்நிலையில், தனது மருத்துவ ஆவணங்களை தன் மனைவி சுனிதா பார்வையிட அனுமதி கோரி கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி விசாரணை கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிபதி காவேரி பவேஜா, கெஜ்ரிவாலின் மருத்துவ ஆவணங்களை சுனிதா பார்வையிட … Read more

Samantha: "சமந்தாவை அப்படிப் பேசியிருக்கக்கூடாது; ஆனால் அவர் செய்தது தவறு"- டாக்டர் விளக்கம்

கடந்த 2022ம் ஆண்டு மயோசைட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா, நீண்ட நாள்கள் வெளிநாடுகளில் சிகிச்சை எடுத்து வந்தார். தற்போது அதிலிருந்து மீண்டு நீண்ட நாள்கள் ஓய்விற்குப் பிறகு திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். இதையடுத்து மருத்துவம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாட்காஸ்ட் மற்றும் நேர்காணல்களில் தொடர்ந்து பேசிவருகிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவ்வப்போது சில மருத்துவ முறைகளைப் பரிந்துரைத்து வருகிறார். Ms. Samantha Ruth Prabhu has responded to my “provocative” criticism … Read more

“ஆம்ஸ்ட்ராங் கொலையில் சிபிஐ விசாரணை தேவை; தமிழகத்தில் சட்டம் ஒழுங்கே இல்லை” – மாயாவதி @ சென்னை

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மைக் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. ஆகையால் சிபிஐ விசாரணை தேவை என சென்னையில் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் பகுஜன் சமாஜ் கட்சி தேசியத் தலைவர் மாயாவதி தெரிவித்தார். சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5 ம் தேதி மாலை ஒரு கும்பலால் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக முதல்கட்டமாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஸ் தம்பி உட்பட 8 … Read more