Dhanush: 30 படங்கள் இருக்கு.. ராயனுக்கு மியூசிக் போடுறது கஷ்டம் எனச் சொன்ன ரகுமான் – தனுஷ்!

சென்னை: தனுஷின் 50வது படமான ராயன் படத்தை தானே இயக்கி நடிக்கவும் செய்திருந்தார். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று அதாவது ஜூலை 6ஆம் தேதி சென்னையில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இதில் பேசிய தனுஷ் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அது குறித்து இங்கு காணலாம்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் நாளை ஓய்கிறது

விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் நாளை (ஜூலை 8) மாலையுடன் ஓய்கிறது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியின் திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து இத்தொகுதி காலியாக இருப்பதாக சட்டப்பேரவை செயலகம் தேர்தல் ஆணையத்துக்கு தகவல் அனுப்பியது. இதைத்தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து கடந்த மாதம் 14-ம் தேதி வேட்பு … Read more

ஆந்திரா – தெலங்கானா பிரச்சினை குறித்து இரு மாநில முதல்வர்கள் ஆலோசனை

ஹைதராபாத்: ஆந்திரா மற்றும் தெலங்கானா இடையே நிலவும் பிரச்சினைகளைக்கு சுமுக தீர்வு காண இரு மாநில முதல்வர்களான சந்திரபாபு நாயுடுவும், ரேவந்த் ரெட்டியும் ஹைதராபாத்தில் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்திலும் உரிமை வேண்டுமென தெலங்கானா மாநிலஅரசு சந்திரபாபு நாயுடுவிடம் கோரிக்கை வைத்துள்ளது. ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தெலங்கானா மாநிலம் உருவானது. மாநில பிரிவினைக்கு பின்னர் பல பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படாமலேயே உள்ளன. தற்போது ஆந்திர … Read more

நாளை ராகுல் காந்தி மணிப்பூர் பயணம்

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை மணிப்பூர் செல்கிறார். கடந்த ஆண்டு மே மாதம் மணிப்பூரில் மெய்தி, குகி இனக்குழுவினருக்கு இடையே கலவரம் வெடித்தது. தற்போதும் அதாவது ஓராண்டை கடந்தும் மோதல் சம்பவங்கள் ஆங்காங்கே நீடித்து வருகிறது. இதுவரை இந்த வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் வன்முறையை கட்டுப்படுத்த மணிப்பூரில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. தற்போது சற்றே வன்முறை சம்பவங்கள் தற்போது குறைந்துள்ளதால் மணிப்பூரில் மெல்ல மெல்ல இயல்புநிலை திரும்பி வருகிறது. ஆயினும் ஆங்காக்கே அவ்வப்போது கலவரம் … Read more

புதுப்பொண்ணு இந்திரஜாவுக்கு விருந்து கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. ஒரே முத்த மழை தான் போங்க!

சென்னை: நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கருக்கு கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி கார்த்திக் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்த விழாவே திருமணம் போல நடைபெற்ற நிலையில், அதை விட தடபுடலாக மதுரையில் கடந்த மார்ச் 24ம் தேதி திருமணம் நடைபெற்றது. அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. மதுரையில் உள்ள ஜேபி

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்: தமிழக பாஜக செயற்குழு தீர்மானம்

திருவள்ளூர்: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் குறித்த வழக்கை சிபிஐ விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக பாஜக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில சிறப்பு செயற்குழு கூட்டம் திருவள்ளூர் மாவட்டம் வானகரம் பகுதியில் நடைபெற்றது. இதில், பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான், எல். முருகன், தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மூன்றாவது முறையாக … Read more

நாடாளுமன்ற கூட்டத் தொடர் 22-ம் தேதி தொடக்கம்: மத்திய பட்ஜெட் ஜூலை 23-ல் தாக்கல்

புதுடெல்லி: ஜூலை 22-ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க உள்ளது என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து 23-ம் தேதி 2024-25-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். 18-வது மக்களவை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 24-ம் தேதி தொடங்கியது. 24, 25-ம் தேதிகளில் மக்களவை எம்.பி.க்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். அதன் பின்னர் 26-ம் தேதி மக்களவைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. … Read more

பார்த்திபனின் டீன்ஸ்.. வெளியாவதில் சிக்கல்.. தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு!

சென்னை: இயக்குநர் பார்த்திபன் டீன்ஸ் படத்தின் கிராபிக்ஸ் பணிகளை தாமதப்படுத்தியதாக கோவையைச் சேர்ந்த சிவபிரசாத் என்பவர் மீது நேற்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்த நிலையில், சிவபிரசாத் தரப்பில் படத்தின் ரிலீஸுக்கு தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனால் படம் திட்டமிட்டபடி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வித்தியாச விரும்பியான பார்த்திபன், இதுவரை 15 திரைப்படங்களை இயக்கி

“ராமதாஸ் மருமகள், பேத்தியை பிரச்சாரத்தில் பாமக களமிறக்க காரணம்…” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்

விழுப்புரம்: “பாமகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பழைய முகங்களாகிப் போனதால் மருமகளையும் பேத்தியையும் பிரச்சாரத்தில் இறக்கியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்” என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியுள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு ஜூலை 10-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி திமுக அமைச்சர்கள் அங்கு தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் விக்கிரவாண்டி அருகே செ.புதூர், செ.கொளப்பாக்கம் கிராமங்களில் இன்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு ஆதரவாக தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார் அமைச்சர் செஞ்சி மஸ்தான்.அப்போது … Read more

ஹாத்ரஸ் சம்பவத்தில் தேடப்பட்ட முக்கிய நபர் மதுக்கர் கைது: நீதிமன்றத்தில் விரைவில் ஆஜர் 

புதுடெல்லி: ஹாத்ரஸ் சம்பவத்தின் தேடப்பட்டுவந்த முக்கியக் நபர் தேவ்பிரகாஷ் மதுக்கர் நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவில் கைதானார். டெல்லியில் சிகிச்சை பெற்று வந்தவரை இன்று உபி போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்றனர். உத்தரப்பிரதேசம் ஹாத்ரஸ் மாவட்டத்தின் சிக்கந்தராராவில் போலே பாபாவின் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. 80,000 பேருக்காக அனுமதிபெற்றதில் சுமார் 1.25 லட்சம் பேர் வந்திருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் தலித் மற்றும் பிறடுத்தப்பட்ட சமூகத்தினர். இதன் முடிவில் ஏற்பட்ட நெரிசலில் 112 பெண்கள் உட்பட 121 பேர் பலியாகினர். இந்தச் … Read more