SJ Suryah: நடிகர் எஸ்.ஜே. சூர்யா எடுத்த முடிவால் ரசிகர்கள் அப்செட்.. மகிழ்ச்சியில் எஸ்.ஜே.எஸ்!

சென்னை: தமிழ் சினிமாவில் இயக்குநர்களாக கொடிகட்டிப் பறந்துகொண்டு இருந்த இயக்குநர்கள் அவ்வப்போது படங்களில் நடித்து வந்தனர். ஆனால் தற்போது இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா, மிஷ்கின், பாரதிராஜா உள்ளிட்டோர் படங்கள் இயக்குவதை விட்டுவிட்டு முழுக்க முழுக்க நடிக்கத் தொடங்கியது மட்டும் இல்லாமல், நடிப்பிலும் புகழ் பெற்று வருகின்றனர். தமிழ் சினிமாவில் தற்போது மோஸ்ட் வாண்டட் ஆர்ட்டிஸ்ட்டாக இருப்பவர் நடிகர்

சென்னை பெரம்பூர் இல்லத்தில் ஆம்ஸ்ட்ராங் உடல் – ‘ஜெய் பீம்’ முழக்கமிட்ட ஆதரவாளர்கள்

சென்னை: படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் உடல் ஒப்படைப்பு. இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் புடைசூழ சென்னை – பெரம்பூர் இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். அதன் பிறகு பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது. … Read more

சென்னை உட்பட 4 இடங்களில் உச்ச நீதிமன்றக் கிளைகள் அமைக்க திமுக எம்.பி. வில்சன் கோரிக்கை

புதுடெல்லி: சென்னை உட்பட 4 இடங்களில் உச்ச நீதிமன்றக் கிளைகளை அமைக்க மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வாலிடம், திமுக எம்பி பி.வில்சன் நேரில் வலியுறுத்தியுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் நிரந்தர பிராந்திய அமர்வுகளை நிறுவுதல்: இது தொடர்பாக அர்ஜூன் ராம் மேக்வாலை சந்தித்த பி. வில்சன், உச்ச நீதிமன்றக் கிளைகளை அமைப்பது தொடர்பாக கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த கோரிக்கை மனுவில் அவர் கூறியிருப்பதாவது: டெல்லியில் உள்ள அரசியல் சாசன அமர்வினைத் தவிர்த்து, தெற்கு, … Read more

சுனைனாவை திருமணம் செய்யப் போகிறாரா துபாய் யூடியூபர்?.. கேரளாவில் ஸ்டே.. சாபமிட்ட முன்னாள் மனைவி!

வயநாடு: துபாயை சேர்ந்த பிரபல யூடியூபரான காலித் அல் அமெரி என்பவரை நடிகை சுனைனா நிச்சயம் செய்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகை சுனைனா தனக்கு நிச்சயம் ஆகி விட்டது என பதிவிட்டுள்ளார். அதே தேதியில் பிரபல யூடியூபரான காலித் அல் அமெரியும் தனக்கு நிச்சயம் ஆகி விட்டது என பதிவிட்டதும் நெட்டிசன்கள் இருவருக்கும் இடையேயான

“ஆம்ஸ்ட்ராங் மறைவு…. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பேரிழப்பு” – துரை வைகோ

மதுரை: ஆம்ஸ்ட்ராங்கின் மறைவு ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அவரது கட்சிக்கும் பேரிழப்பு என திருச்சி எம்.பி துரை வைகோ தெரிவித்தார். பாஜக ஆளுகின்ற மாநிலங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற தான் செய்கிறது. காவல் துறையும் தமிழக அரசும் இரும்புக்கரம் கொண்டு இது போன்ற சம்பவம் நடைபெறாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். மதுரையில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருச்சி எம்.பி துரை வைகோ சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார். மதுரையின் விமான நிலையத்தில் … Read more

“அயோத்தியில் தோற்கடித்ததைப் போல குஜராத்திலும் பாஜகவை காங்கிரஸ் தோற்கடிக்கும்” – ராகுல் காந்தி

அகமதாபாத்: மக்களவைத் தேர்தலின்போது அயோத்தியில் தோற்கடித்ததைப் போல, சட்டப்பேரவைத் தேர்தலின்போது குஜராத்தில் பாஜகவை காங்கிரஸ் தோற்கடிக்கும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அகமதாபாத்தில் நடைபெற்ற கட்சித் தொண்டர்கள் மாநாட்டில் உரையாற்றிய காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, “அவர்கள் (பாஜகவினர்) எங்களை அச்சுறுத்தி எங்கள் அலுவலகத்தை சேதப்படுத்தியதன் மூலம் எங்களுக்கு சவால் விடுத்துள்ளனர். எங்கள் அலுவலகத்தை சேதப்படுத்தியது போல் நாங்கள் ஒன்றாக சேர்ந்து அவர்களின் அரசாங்கத்தை காலி செய்வோம். … Read more

10ந்தேதி விடுமுறை: விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள வெளி நபர்கள் ஜூலை 8ந்தேதி மாலை வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியில் முகாமிட்டுள்ள  வெளிநபர்கள் 8-ம் தேதி தேதி மாலை 6 மணிக்கு மேல் வெளியேற வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு அறிவுறுத்தியுள்ளார். மேலும்,  விக்கிரவாண்டி தொகுதிக்குள் இருக்கும் அரசு, பொதுத்துறை, தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு ஜூலை 10-ம்தேதி பொது விடுமுறை அறிவித்து அரசு உத்தரவிட்டது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரும் 10ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மும்முனை போட்டி நிலவி வரும் நிலையில், ஆளும் கட்சி … Read more

ஐநா நடத்தி வந்த பள்ளி மீது குண்டு வீச்சு.. 13 பேர் பலி! நாளுக்கு நாள் உக்கிரமாகும் இஸ்ரேல் தாக்குதல்

காசா: காசாவில் ஐநா நடத்தி வந்த பள்ளியின் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 13 பேர் வரை உயிரிழந்துள்ளனர். கடந்த 2007ம் ஆண்டு முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து, ஹமாஸ் எனும் பாலஸ்தீன விடுதலை அமைப்பானது கடந்த Source Link

இதெல்லாம் பார்த்தா சிம்பு கல்யாணமே பண்ண மாட்டாரே.. பிரேம்ஜி வெளியிட்ட வீடியோ.. ஆடிய ஆட்டம் என்ன?

சென்னை: கடந்த மாதம் ஜூன் 9ம் தேதி திருத்தணி கோயிலில் நடிகர் பிரேம்ஜிக்கும் அவரது காதலி இந்துவுக்கும் திருமணம் நடைபெற்றது. அண்ணன் வெங்கட் பிரபு தலைமையில் அந்த திருமணம் நடைபெற்றது. பெரியப்பா இளையராஜாவும் மற்றும் அவரது குடும்பத்தில் இருந்து திருமணத்துக்கு யாருமே வரவில்லை. பவதாரிணி உயிரிழந்த நிலையில், அந்த சோகத்தில் இருக்கும் இளையராஜா திருமணத்தில் கலந்து கொண்டிருக்க

“விரைவில் மாவட்ட தலைவர், மாநில நிர்வாகிகள் மாற்றம்” – செல்வப்பெருந்தகை உறுதி

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸில் விரைவில் மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் மாற்றப்பட இருப்பதாக மகளிரணி செயற்குழு கூட்டத்தில் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் மகளிரணி செயற்குழு கூட்டம், மகளிரணி தலைவி அசினா சையத் தலைமையில் சென்னை சத்யமூர்த்தி பவனில் இன்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியது: “காங்கிரஸ் 139 ஆண்டுகளாக குரலற்றவர்களின் குரலாக ஒலித்து வரும் பழமையான கட்சி. பெண்கள் முயன்றால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம். ஒவ்வொரு … Read more