“போலே பாபா தவறை ஒப்புக்கொள்ள வேண்டும்” – ராமர் கோயில் தலைமை அர்ச்சகர்

அயோத்தி: உத்தரபிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் போலே பாபா சாமியார் நடத்திய பிரசங்க கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர். இந்தச் சூழலில் இந்த சம்பவம் குறித்து தனது கருத்தை அயோத்தி ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சாரிய சத்யேந்திர தாஸ் தெரிவித்தது. “ஹாத்ரஸில் சத்சங்கம் நடத்தியவர் ‘போலே பாபா’ அல்லது சூரஜ் பால் என அறியப்படும் பிரபலமாக உள்ளார். கடந்த ஜூலை 2-ம் தேதி அன்று அங்கு நடந்த துயர சம்பவத்தை … Read more

ஆம்ஸ்ட்ராங் கொலை: குற்றவாளிகளுக்கு சட்டப்படி தண்டனை பெற்றதர முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்  பட்டப்பகலில் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,  குற்றவாளிகளுக்கு சட்டப்படி தண்டனை பெற்றதர உத்தரவிட்டுள்ளதாக  தெரிவித்து உள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு சட்டப்படி உரிய தண்டனை கிடைக்கும் என்று உறுதி அளித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது … Read more

Selvaragavan: கல்லு மட்டும்தான் வச்சேன்.. அவரே செதுக்கிட்டார்.. தனுஷ் குறித்து செல்வராகவன் ஓபன்!

சென்னை: நடிகர் தனுஷ், எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், அபர்ணா முரளி, துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் ராயன். தனுஷின் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் 26ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் மிகவும்

Snake: தன்னைக் கடித்த பாம்பை திருப்பிக் கடித்த ரயில்வே ஊழியர்; இறுதியில் பாம்புக்கு நேர்ந்த சோகம்!

பீகாரில், பாம்புக் கடிக்கு ஆளான ரயில்வே ஊழியர் ஒருவர், அந்தப் பாம்பைத் திருப்பிக் கடித்ததில் பாம்பு உயிரிழந்திருக்கிறது. இந்தச் சம்பவம் குறித்து வெளியான தகவலின்படி, சந்தோஷ் லோஹர் என்று அறியப்படும் ரயில்வே ஊழியர் பீகாரிலுள்ள ரஜௌலியின் அடர்ந்த வனப் பகுதியில் ரயில் தண்டவாளம் அமைக்கும் குழுவில் ஒரு பகுதியாக இருக்கிறார். பாம்பு (கோப்புப் படம்) கடந்த செவ்வாய்கிழமை வேலை முடிந்து இரவு முகாமில் தூங்கிக் கொண்டிருந்த சந்தோஷை பாம்பு கடித்திருக்கிறது. பின்னர், தன்னைக் கடித்த பாம்பை திருப்பிக் … Read more

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் மனு 2-வது முறையாக தள்ளுபடி @ கரூர்

கரூர்: கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் மனு 2-வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் அவரது சகோதரர் சேகரின் முன்ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. கரூர் நகர காவல் நிலையத்தில், மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதர் போலி சான்றிதழ் வழங்கி பத்திரப்பதிவு செய்ததாக அளித்த புகாரில் 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் கடந்த மாதம் 9-ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் … Read more

இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி: புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் பிரதமர் மோடி இன்று உரையாடினார். இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்றுள்ளதற்கும், தேர்தலில் தொழிலாளர் கட்சி பெற்ற குறிப்பிடத்தக்க வெற்றிக்கும் பிரதமர் மோடி, அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க உறவுகளை நினைவு கூர்ந்த இரு … Read more

எரிபொருள் சேமிப்பு… கார் அதிக மைலேஜ் கொடுக்க… நீங்கள் கடைபிடிக்க வேண்டியவை…!

இன்றைய கால கட்டத்தில் கார் வாங்க எளிதில் லோன் கிடைத்து விடுவதால், எளிய மக்களும் கார்களை வாங்கும்போக்கு அதிகரித்துள்ளது. ஆனால், கார் வாங்குவது எளிது என்றாலும், பெட்ரோல்-டீசல் விலைகள் வரும் நாட்களில் குறையும் என்ற நம்பிக்கை குறைவாகவே உள்ள நிலையில், வாகன பராமரிப்பு என்பது பட்ஜெட்டுக்கு சவாலான விஷயமாகவே உள்ளது. கார் ஓட்டும் செலவும் பராமரிப்பு செலவும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், சில விஷயங்களை கவனத்தில் கொண்டு பின்பற்றி வந்தால், காரின் மைலேஜ் சிறப்பாக … Read more

ஆம்ஸ்ட்ராங் படுகொலை – சாலை மறியல்: சென்ட்ரல் பகுதிக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்ப்பது நல்லது…

சென்னை:  ஆம்ஸ்ட்ராங் படுகொலை காரணமாக அவரது உடல் சென்ட்ரல் அருகே உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக வைக்கப் பட்டு உள்ள நிலையில், அங்கு அவரது கட்சி தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இதனால், அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இதற்கிடையில், ஒரு தரப்பினர் சாலையில் அமர்ந்து சாலை மறியல் நடத்தி உள்ளனர். இதனால் கடுமையான போக்குவரத்த நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள், சென்ட்ரல், பெரம்பூர், ஓட்டேரி, புளியந்தோப்பு உள்பட வடசென்னை பகுதிகளுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது. … Read more

Actor Dhanush: ராயன் இசை வெளியீட்டில் தனுஷ் மாஸ் என்ட்ரி.. வைப் செய்த ரசிகர்கள்!

சென்னை: நடிகர் தனுஷ், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், துஷாரா விஜயன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள ராயன் படம் வரும் 26ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் பட குழுவினர் ஈடுபட்டு வரும் நிலையில் இன்றைய தினம் சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக படத்தின் இசை நிகழ்ச்சி நடந்து

டி.என்.பி.எல். கிரிக்கெட்: திண்டுக்கல் அணிக்கு எதிராக டாஸ் வென்ற திருச்சி பந்துவீச்சு தேர்வு

சேலம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.என்.பி.எல். கிரிக்கெட் 2016-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. இதுவரை 7 சீசன் நடந்துள்ளது. 8-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி நேற்று சேலத்தில் தொடங்கியது . சேலம், நெல்லை, கோவை, நத்தம் (திண்டுக்கல்), சென்னை ஆகிய 5 நகரங்களில் நடைபெறும் இந்த போட்டியில் 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்நிலையில் இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. மாலை 3.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-திருச்சி கிராண்ட் … Read more