Gaganachari: "ராம் படத்துல நடிக்கிறேன்; ஹெச்.வினோத்கிட்ட வாய்ப்பு கேட்டுருக்கேன்" – அஜு வர்கீஸ்

அஜு வர்கீஸ்… மலையாள சினிமாவில் மிகவும் பரிச்சயமான பெயர். 120 படங்களுக்கு மேல் நடித்தவர். குணச்சித்திரக் கதாபாத்திரங்கள், நகைச்சுவை கதாபாத்திரங்கள், முதன்மை கதாபாத்திரம் என தன்னை ஒரு ஜோனுக்குள் நிறுத்திக்கொள்ளாமல் இயங்கும் பன்முக கலைஞன். தயாரிப்பாளரும் கூட. அண்மையில் அவர் நடிப்பில் மலையாலத்தில்  வெளியான ‘ககனசாரி’ திரைப்படம் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இப்போது தமிழில் வெளியாகியிருக்கிறது. அதன் ப்ரமோஷனுக்காக சென்னை வந்திருந்த அஜு வர்கீஸிடம் நிகழ்ந்த உரையாடலில் இருந்து… ‘ககனசாரி’ படத்தை இப்போ தமிழ்ல ரிலீஸ் பண்றீங்க. இதுல ‘மாக்குமென்ட்ரி’னு புது விஷயத்தை … Read more

புதுச்சேரி ரவுடி ‘பாம்’ ரவி கொலை வழக்கில் ஒருவருக்கு 7 ஆண்டு சிறை; 28 பேர் விடுதலை

புதுச்சேரி: புதுச்சேரியில் பிரபல ரவுடி ‘பாம்’ ரவி உள்பட இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 29 பேரில் 28 பேர் விடுவிக்கப்பட்டனர். ஒருவருக்கு மட்டும் ஆயுதத்தடைச் சட்டத்தில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்து புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. புதுச்சேரி வாணரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாம் ரவி. இவர் மீது கொலை உள்ளிட்ட பல வழக்குகள் இருந்தன. இவரது நண்பர் அந்தோணி. இருவரும் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபரில் அதே பகுதியில் உள்ள … Read more

“இந்தியா ஒரு பிரகாசமான நட்சத்திரமாக மின்னி வருகிறது” – குடியரசுத் துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர்

திருவனந்தபுரம்: கடந்த பத்து ஆண்டுகளில் தொற்றுநோய் பாதிப்பு உள்பட பல்வேறு சர்வதேச சவால்கள் இருந்த போதிலும், இந்தியா ஒரு பிரகாசமான நட்சத்திரமாக மின்னி வருகிறது என்று குடியரசுத் துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் 12-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் உரையாற்றினார். அப்போது அவர், “இது மறக்க முடியாத தருணம் என்பதை நான் அறிவேன். உங்கள் அனைவருக்கும் நான் வாழ்த்துகளைத் … Read more

இஸ்ரேல் கடும் தாக்குதல்: காசாவில் 5 ஊடகவியலாளர்கள் உட்பட 29 பேர் பலி

டெல் அவில்: காசா மீதான இஸ்ரேல் தாக்குதலில், கடந்த 24 மணி நேரத்தில் 29 பேர் கொல்லப்பட்டதாக காசாவின் சுகாதார அமைச்சகம் கூறியிருக்கும் நிலையில், கொல்லப்பட்டவர்களில் ஐந்து பாலஸ்தீன ஊடகவியலாளர்களும் அடங்குவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. காசா மருத்துவமனைகளில் எரிபொருள் நெருக்கடி நிலவி வரும்நிலையில், மருத்துவமனைகளுக்குள் பல துறைகளில் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக சிக்கன நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஜூன் 27 அன்று வெளியிடப்பட்ட இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கை மற்றும் வெளியேற்ற உத்தரவைத் தொடர்ந்து … Read more

ரோகித் சர்மாவை ஸ்பெஷலாக கவனித்த அம்பானி – கூட இருந்த அந்த 2 பேருக்கும் ஜாக்பாட்

மும்பையில் நீட்டா அம்பானி கலாச்சார மையத்தில் நடைபெற்ற ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட்திருமண விழாவில் இந்தியா முழுவதும் இருக்கும் ஏ பிளஸ் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக்பாண்டியா, எம்எஸ் தோனி,  இஷான் கிஷன் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்களும், சல்மான் கான், அட்லி, ரன்வீர் சிங் உள்ளிட்ட பாலிவுட் திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டனர். சுருக்கமாக சொல்லப்போனால் ஒட்டுமொத்த இந்திய திரையுலக பிரபலங்களும், கிரிக்கெட் பிரபலங்களும் இந்த விழாவில் கலந்து … Read more

Indian 2: "கதாபாத்திரங்களை ஆழமாகப் பதிய வைக்க தகாத வார்த்தைகள் பயன்படும்!" – கமல் ஹாசன் விளக்கம்

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கிற ‘இந்தியன் 2’ திரைப்படம் வருகிற ஜூலை 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இதற்கான புரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் தற்போது பரபரப்பாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் கமல் ஹாசன், நடிகர் சித்தார்த், இயக்குநர் ஷங்கர் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த நடிகர் கமல் ஹாசன், “ஒரு விஷயத்திற்குப் புறப்படும்போது நிறைய தடங்கல்கள் வரும். அதே மாதிரி இந்தப் … Read more

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சாவு: கேரளாவில் பதுங்கி இருந்த கள்ளசாராய வியாபாரி கைது

சென்னை: 65 பேரை பலிகொண்ட கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுக்கு காரணமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்த கள்ளச்சாராய வியாபாரி கேரளாவில் பதுங்கி இருந்த நிலையில், அவரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த மாதம் 18-ந் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்த 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இதில் 65 பேர் உயிரிழந்த நிலையில், 15 பேர் கண் பாதிக்கப்பட்டது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றனர்.  இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. … Read more

இந்தியன் 2 படம் முதல்ல ஷங்கருக்காக ஜெயிக்கனும்.. சித்தார்த் சிலிர்ப்பு.. அட இப்படி ஒன்னு இருக்கா!

சென்னை: நடிகர் கமல்ஹாசன் -இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தியன் 2 படம் இன்னும் ஆறு நாட்களில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்த படம் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ள நிலையில் இதற்காக படக்குழுவினரும் சர்வதேச அளவில் படத்தின் பிரமோஷன்களை மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் இந்தியன் 2 படத்தின் பிரமோஷன்கள் துபாய், மலேசியா போன்ற இடங்களிலும் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

ஹத்ராஸ் சம்பவம் வேதனை அளிக்கிறது: வீடியோ வெளியிட்ட சாமியார் போலே பாபா

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் அருகே புல்ராய் கிராமத்தில் கடந்த 2-ந் தேதி சாமியார் போலே பாபாவின் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. அதில் நெரிசலில் சிக்கி 121 பேர் பலியானார்கள்.இந்த சம்பவம் தொடர்பாக சிக்கந்திரா ராவ் போலீசார் பாரதீய நியாய சன்ஹிதா சட்டத்தின் 105 (மரணம் விளைவித்தல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த 2 பெண் உள்பட 6 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். ஆனால், ஆன்மிக சொற்பொழிவுக்கு தலைமை ஒருங்கிணைப்பாளராக … Read more

கோபா அமெரிக்க கால்பந்து தொடர்: வெனிசுலாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய கனடா அணி

டெக்சாஸ், உலகக் கோப்பை, யூரோ கோப்பை கால்பந்து தொடருக்கு அடுத்து புகழ்பெற்ற கோபா அமெரிக்க கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் கடந்த 1916-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடர் வரும் ஜூலை 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் தற்போது காலிறுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் டெக்சாஸில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் கனடா – வெனிசுலா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் முதல் … Read more