அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதல் – 2 பேர் பலி

வாஷிங்டன், அமெரிக்காவில் நாளுக்குநாள் துப்பாக்கி சூடு, கத்திக்குத்து தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனிடையே அந்நாட்டு சுதந்திர தினம் நேற்று முன் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவின் ஹண்டிங்டவுன் கடற்கரை அருகே நேற்று முன் தினம் இரவு கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. இந்த கத்திக்குத்து தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், தாக்குதலில் … Read more

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிறையில் கிடைத்த நட்பு… கைதானவர்களின் `பகீர்’ பின்னணி!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கூலிப்படைத் தலைவன் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு (39), பெரம்பூரைச் சேர்ந்த திருமலை (45), திருவள்ளூர் ஆர்.கே.பேட்டையைச் சேர்ந்த மணிவண்ணன் (26), குன்றத்தூரைச் சேர்ந்த திருவேங்கடம் (33), திருநின்றவூரைச் சேர்ந்த ராமு என்கிற வினோத் (38), ராணிப்பேட்டை, காட்பாடியைச் சேர்ந்த சந்தோஷ் (22), திருநின்றவூரைச் சேர்ந்த அருள் (33), செல்வராஜ் (48) ஆகிய எட்டுபேரை செம்பியம் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு … Read more

“பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் பாரம்பரிய தற்காப்புக் கலை” – தமிழக அரசுக்கு ஆளுநர் ரவி யோசனை

சென்னை: பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் சிலம்பம், களரி உள்ளிட்ட பாரம்பரிய, தற்காப்புக் கலைகளை இடம்பெறச் வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி யோசனை தெரிவித்துள்ளார். ‘எண்ணி துணிக’ என்ற தலைப்பில் பாரம்பரிய தற்காப்புக்கலை ஆசான்களுடனான ஆளுநரின் கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை பாரதியார் அரங்கில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இதில், வாள்வீச்சு, மான்கொம்பு, சிலம்பம், குத்துவரிசை, களரி ஆகிய தமிழக பாரம்பரிய மற்றும் தற்காப்புக்கலை கலைஞர்கள் 50 பேருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி … Read more

‘ஹாத்ரஸ் சம்பவத்தில் சிறு கைதுகள் மூலம் தோல்வியை மறைக்க உ.பி. அரசு முயற்சி’ – அகிலேஷ் யாதவ்

போபால்: “உத்தரப் பிரதேச மாநிலத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலியான ஹாத்ரஸ் சம்பவத்தில் சிறிய கைது நடவடிக்கை மூலம் தனது தோல்வியை மறைக்க அரசு முயற்சிக்கிறது” என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.மேலும் அவர், நெரிசல் சம்பவத்துக்கு வழிவகுத்த செயல்களில் இருந்து மாநில அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பதால், எதிர்காலத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடரலாம் எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ள பதிவில், … Read more

மூன்று மனிதர்கள், ஒரு பன்றி: உலகின் பழமையான குகை ஓவியம்

இந்தோனேசியாவில் குகை ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப் பழமையான ஓவியங்கள் பண்டைய மனிதர்களின் சிந்தனை, வாழ்க்கை முறையை இன்றைய தலைமுறை அறிந்துகொள்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன. இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசியின் மரோஸ் பாங்கெப் பகுதியில் உள்ள லியாங் கரம்புவாங்கின் சுண்ணாம்புக் குகையில் 51,200 ஆண்டுப் பழமையான ஓவியங்களை ஆஸ்திரேலியா, இந்தோனேசியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது, இதற்கு முன்னர் கண்டறியப்பட்ட பழமையான குகை ஓவியதைவிட 5,000 ஆண்டுகள் பழமையானது. இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள தேசிய ஆராய்ச்சி … Read more

’மிசன் குஜராத்’ ஆட்டத்தை இன்றே தொடங்கிய ராகுல் காந்தி…! பிரதமர் மோடியை தோற்கடிப்பேன் என சபதம்

Rahul Gandhi, Mission Gujarat : அகமதாபாத் சென்றிருக்கும் ராகுல்காந்தி தொண்டர்களிடம் பேசும்போது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர்களை குஜராத்தில் காங்கிரஸ் தோற்கடிக்கும் என தெரிவித்தார்.

Bajaj Freedom 125: உலகின் முதல் CNG பைக் அறிமுகம்… எரிபொருள் செலவு 50% குறையும்

Bajaj Freedom 125 CNG Bike: உலகில் இன்று வரை யாரும் முயற்சி செய்யாததை நாட்டின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பஜாஜ் ஆட்டோ சாதித்துள்ளது. பஜாஜ் ஆட்டோ, உலகின் முதல் CNG பைக்கான பஜாஜ் ஃப்ரீடம் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. மத்திய சாலை மற்றும் போக்குவரத்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, CNG பைக் அறிமுக விழாவில் கலந்து கொண்ட நிலையில், சந்தையில், ஃப்ரீடம் பைக் ஒரு கேம் சேஞ்சராக இருக்கும் என பாராட்டினார். … Read more

கள்ளச்சாராயம் குடித்து பலியானோருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு உத்தரவை ரத்து செய்ய வேண்டும்! உயர்நீதி மன்றம்

சென்னை: கள்ளச்சாராயம் குடித்து பலியானோருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு எப்படி வழங்க முடியும்? என கேள்வி எழுப்பி உள்ள சென்னை உயர்நீதிமன்றம்,  இழப்பீடு வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அறிவுறுத்தி வழக்கை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர். கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 69 பேர் பலியாகியுள்ளனர். பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீட்டை தமிழ்நாடு அரசு அறிவித்து, உடடினயாகவும் வழங்கி வருகிறது. இது … Read more

சண்முகத்தை பிரியும் பரணி? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இதில் நேற்றைய எபிசோடில், சௌந்தரபாண்டி, பாண்டி அம்மாள் மீது திருட்டுப்பழியை போட்டு தப்பித்துக்கொண்டதால், ஆத்திரம் அடைந்த ஷண்முகம், ஆவேசமாக சௌந்தரபாண்டியை குத்த போக வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் தடுத்தும் முடியாமல் போக, ஒரு கட்டத்தில் சௌந்தரபாண்டியை

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைசி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் அசோக் குமார். இவர் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி அதேபகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார். மேலும், வன்கொடுமை சம்பவத்தை யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவோன் என மிரட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயாரிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை பாலியல் … Read more