‘குற்றவாளிகள் மீது நடவடிக்கை அவசியம்’ – ஹாத்ரஸ் சம்பவத்தில் மவுனம் கலைத்த போலே பாபா

புதுடெல்லி: ஹாத்ரஸ் சம்பவத்துக்கு காரணமான நாராயண் சாக்கா விஷ்வ ஹரி போலே பாபா எனும் சூரஜ்பால் ஜாத்தவ் முதன்முறையான ஊடகத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை அவசியம் எனத் தெரிவித்துள்ளார். இது குறித்து ஒரு செய்தி நிறுவனத்துக்கு போலே பாபா அளித்த பேட்டியில் கூறியதாவது: ஜுலை 2 சம்பவத்துக்கு பின் நாம் மிகவும் கவலையுடன் இருக்கிறோம். இந்த சங்கடத்திலிருந்து மீண்டுவர பிரபு நமக்கு சக்தி அளிக்க வேண்டும். அனைத்தையும் விசாரித்து வரும் … Read more

பயணிகளுக்கு குட் நியூஸ்… தமிழகத்தின் இந்த மூன்று வழித்தடங்களில் நியூகோ EV பேருந்துகள்

NeuGo EV Buses: சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத தனியார் மின்சார பேருந்தான நியூகோ, தற்போது தமிழ்நாட்டின் மூன்று முக்கிய வழித்தடங்களில் புதிதாக இயக்கப்பட உள்ளது.

இனி இந்திய அணியின் சரவெடி ஓப்பனர் இவர் தான்… ரகசியத்தை உடைத்தார் சுப்மான் கில்!

IND vs ZIM Match Updates: கடந்த வாரம் சனிக்கிழமை இந்திய அணி ஐசிசி டி20 உலகக் கோப்பையை 17 ஆண்டுகளுக்கு பின்னர் கைப்பற்றியது. தொடர்ந்து நாடு இந்திய அணியை கொண்டாடி வரும் இந்த சூழலில், இந்திய இளம் அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இன்று விளையாட உள்ளது. ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா உள்ளிட்டோர் சர்வதேச டி20 அரங்கில் இருந்து ஓய்வை அறிவித்திருந்தனர். சீனியர்களுக்கும் இந்த தொடரில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளதால் … Read more

மதுபான கொள்கையில் இளைஞர்கள் நலனை உறுதி செய்யுங்கள்! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை…

மதுரை: இளைஞர்களின் வாழ்க்கையை மனதில் வைத்துக்கொண்டு மதுபான கொள்கைளில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை தமிழக அரசுக்கு ஆலோசனை கூறியுள்ளது. நாளைய சமுதாயத்தின் தூண்களாக விளங்கும் இளைய தலைமுறையினரின் நலனை உறுதி செய்யும் வகையில், மதுபானக் கொள்கையை மாநில அரசு மறுபரிசீலனை செய்து, உணர்வு பூர்வமான முடிவுகளை எடுக்க வேண்டிய தருணம் இது  என குறிப்பிட்டுள்ளது. திருச்சியை சேர்ந்த டி.பிரபு என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில்,  திருச்சி வொரையூரில் குழுமணி மெயின் … Read more

இந்தியன் 2.. 5 விஷயத்தை உடனே மாத்துங்க.. சென்சார் போர்டு போட்ட கண்டிஷன்!

சென்னை : சென்னை: கமலின் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான இந்தியன் 2, வரும் 12ந் தேதி வெளியாக உள்ள நிலையில், ஊழல் சந்தை என்ற லேபிளை அகற்ற வேண்டும், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கடுமையான வார்த்தைகளை மாற்றப்பட்டுள்ளன என படத்தில் 5 முக்கிய மாற்றம் செய்ய வேண்டும் என தணிக்கை குழு படக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.

உ.பி:பள்ளியின் பெண் முதல்வரை கட்டாயப்படுத்தி இருக்கையிலிருந்து அகற்றிய பிஷப் தரப்பு – வீடியோ சர்ச்சை

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயக்ராஜ் என்ற இடத்தில் செயல்படும் பிஷப் ஜான்சன் பெண்கள் பள்ளியில் பாருல் பல்தேவ் என்ற பெண் முதல்வராக இருந்து வந்தார். அவருக்கு சில ஆசிரியர்கள் மற்றும் லக்னோ மறைமாவட்ட தரப்பில் எதிர்ப்பு இருந்ததாக தெரிகிறது. ஆனால் பாருல் பல்தேவ், முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய மறுத்து தொடர்ந்து பணியில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று, திடீரென லக்னோ பிஷப் மோரீஸ், முதல்வர் அறை கதவை திறந்துகொண்டு அத்துமீறி உள்ளே நுழைந்தார். அவருடன் சில … Read more

வழக்கறிஞர் முதல் அரசியல் தலைவர் வரை: யார் இந்த ஆம்ஸ்ட்ராங்? | HTT Explainer

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது சென்னையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது பின்புலம் இதுதான்… சென்னை பெரம்பூர் வேணுகோபால சுவாமி கோயில் தெருவில் வசித்து வந்தவர் ஆம்ஸ்ட்ராங். சட்டக் கல்வியை முடித்து வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். 2000-ம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கிய அவர், பூவை மூர்த்தியின் தலைமையை ஏற்று, புரட்சி பாரதம் கட்சியில் இணைந்தார். பூவை மூர்த்தி மறைவுக்கு பிறகு, அக்கட்சியில் இருந்து விலகி … Read more

இளநிலை மருத்துவ நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு

புதுடெல்லி: எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்டஇளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வு நடைபெறுவதற்கு ஒருநாள் முன்னதாக பிஹார் தலைநகர் பாட்னாவில் வினாத்தாள் கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் ஜார்க்கண்ட், குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உ.பி. உள்ளிட்ட மாநிலங்களிலும் முறைகேடுகள் நடைபெற்றன. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. தேர்வு எழுத தாமதமான 1,563 மாணவ, மாணவிகளுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. அந்த மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டன. 1,563 பேரில் … Read more

ஆம்ஸ்ட்ராங் கொலை பழிக்குப் பழி சம்பவமா…? பின்னணி என்ன? – வெளியான பரபரப்பு தகவல்கள்

Armstrong Murder Latest News Update: சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில், போலீசார் இதுவரை 8 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த கொலைக்கான பின்னணி என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆடி மாத பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வரும் 15-ந் தேதி திறப்பு!

திருவனந்தபுரம்: ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் வரும்  15-ந் தேதி திறக்கப்படும் என தேவசம் போர்டு அறிவித்து உள்ளது.  மேலும்,  ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது. புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில்  மாதந்தோறும் மாதப்பிறப்பை ஒட்டி, பூஜைகள் நடைபெறுவது வழக்கம். மேலும்,  ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. அதேபோல ஒவ்வொரு தமிழ் மாதத்தின் (மலையாள … Read more