வெம்பக்கோட்டையில் நாயக்கர் கால செப்புக்காசு கண்டெடுப்பு

விருதுநகர் விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டையில் நடைபெறும் அகழாய்வில் நாயக்கர் கால செப்புக்காசு கண்டெடுக்கப்பட்டுப்ள்ளது. தற்போது விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே விஜய கரிசல்குளத்தில் கடந்த 5 ஆயிரம் ஆண்டு நுண் கற்காலத்தை அறியும் வகையில் வைப்பாற்றின் வடகரையில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறன. இங்கு ஏற்கனவே நடைபெற்ற இரண்டு கட்ட அகழாய்வில் 7914 தொல்லியல் பொருட்கள் கிடைத்தன. மூன்றாம் கட்ட அகழாய்வு பணியை கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் காணொளி … Read more

சோகத்தில் மூழ்கிய பா. ரஞ்சித்.. ஆம்ஸ்ட்ராங்கால் பட்டைதீட்டப்பட்ட இயக்குநர் என உங்களுக்குத் தெரியுமா?

சென்னை: தமிழ்நாடே தற்போது மிகவும் பரபரப்பாக பேசி வருவது பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாகத்தான். தமிழ்நாட்டின் தலைநகரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பகுஜன் சமாஜ் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபர்களால் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் இருந்த

தமிழ்நாட்டில் பஜாஜ் ஃப்ரீடம் சிஎன்ஜி பைக்கின் அறிமுகம் எப்பொழுது..!

உலகின் முதல் சிஎன்ஜி பைக்கினை வெளியிட்டுள்ள பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஃப்ரீடம் 125 மாடலை 330 கிமீ ரேஞ்சை பெட்ரோல் மற்றும் சிஎன்ஜியில் வெளிப்படுத்தும் நிலையில் தமழ்நாட்டில் விற்பனைக்கு எப்பொழுது அறிமுகம் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  முதற்கட்டமாக மஹாராஷ்டிரா, குஜராத் என இரு மாநிலங்களில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. ஃப்ரீடம் 125 சிஎன்ஜி மாடலில் உள்ள 125சிசி என்ஜின் அதிகபட்சமாக 9.7PS பவர் மற்றும் 9.5 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. … Read more

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 38 பேர் கடற்படையினரால் கைது

திருகோணமலை இரணைகேணி, நிலாவெளி, முல்லைத்தீவின் கொக்கிளாய், வெத்தலகேணியின் சளை, ஏறக்கண்டி மற்றும் திருகோணமலை எலிசபெத் முனை ஆகிய கடற்பரப்புகளில் 2024 ஜூன் 30 முதல் ஜூலை 03 வரை மேற்கொள்ளப்பட்ட தொடர் தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோத வலைகள் மற்றும் மின் விளக்குகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 38 பேருடன் 07 டிங்கி படகுகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத மீன்பிடி சாதனங்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி … Read more

சென்னை: மெரினாவில் பைக் டாக்ஸி டிரைவரை மிரட்டி பணம் பறிப்பு; `போலி' போலீஸ்காரர் சிக்கியது எப்படி?

சென்னை கொட்டிவாக்கம் வேம்புலி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் குமரவேல் (43). இவர், பைக் கால் டாக்ஸி டிரைவராக இருந்து வருகிறார். கடந்த 21.6.2024-ம் தேதி இரவு சென்ட்ரலுக்கு ஒரு கஸ்டமரை டிராப் செய்ய குமரவேல் பைக்கில் சென்றார். பின்னர் வீடு திரும்பி வந்துக் கொண்டிருந்தபோது குமரவேலுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் பகுதியின் பின்புறத்தில் பைக்கை நிறுத்திய குமரவேல் அங்கேயே ஓய்வெடுத்தார். அப்போது அவர், தூங்கிவிட்டார். இரவு 12 மணியளவில் போலீஸ் … Read more

அவல நிலையில் சட்டம் – ஒழுங்கு: ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு இபிஎஸ் கண்டனம்

சென்னை: “ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ளவர் படுகொலை செய்யப்படுகிறார் எனில், இதற்கு மேல் இந்த திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கை என்னவென்று சொல்லி விமர்சிப்பது? கொலை செய்வதற்கான தைரியம் குற்றவாளிகளுக்கு எப்படி வருகிறது? காவல் துறை, அரசு, சட்டம் என எதன் மீதும் அச்சமற்ற நிலையில் தொடர்ச்சியாக குற்றங்கள் நடைபெறும் அளவுக்கு அவல நிலைக்கு சட்டம் – ஒழுங்கைத் தள்ளிய திமுக முதல்வருக்கு எனது கடும் கண்டனம்,” என்று பகுஜன் சமாஜ் கட்சியின் … Read more

ஆகஸ்ட் 11-ல் முதுநிலை ‘நீட்’ தேர்வு நடைபெறும் – தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு

புதுடெல்லி: முதுநிலை நீட் தேர்வு ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெறும் என்று தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. இளநிலை நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், 2 முறை முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. எம்.டி, எம்.எஸ் உள்ளிட்ட மருத்துவ முதுநிலை படிப்பில் சேர, மருத்துவ மாணவர்கள் நீட் முதுநிலை தேர்வை எழுதுகின்றனர். குறிப்பாக இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ நிறுவனங்களில் எம்டி, எம்எஸ் மற்றும் முதுநிலை டிப்ளமோ படிப்புகளில் சேர … Read more

மீண்டும் இணையும் ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி! யாரால் தெரியுமா?

GV Prakash Kumar Saindhavi : சில நாட்களுக்கு முன்னர் விவாகரத்து பெற்ற சைந்தவியும், ஜி.வி.பிரகாஷும் மீண்டும் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.   

பிஎஸ்பி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை – தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.  

ஜியோ, ஏர்டெல் சிம் கார்டுகளை ஆக்டிவாக வைதிருக்க பேஸிக் பிளான்கள்..!

ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா (Vi) உட்பட இந்தியாவின் அனைத்து முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்களும் சமீபத்தில் தங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தியிருக்கின்றன. போஸ்ட்பெய்டு மற்றும் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை இப்போது தோராயமாக 22 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் விலை உயர்வுக்குப் பிறகான புதிய கட்டணங்கள் ஜூலை 3 முதல் அமலுக்கு வந்திருக்கிறது, வோடபோன் ஐடியாவின் புதிய கட்டணங்கள் ஜூலை 4 முதல் நடைமுறைக்கு வந்திருக்கின்றன. இந்த … Read more