ரஜினியுடன் இணைந்து நடிக்கும் ஸ்ருதி ஹாசன்! எந்த படத்தில் தெரியுமா?

Actress Shruti Haasan Rajinikanth Movie : நடிகை ஸ்ருதி ஹாசன், நடிகர் ரஜினிகாந்திற்கு மகளாக ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அது என்ன படம் தெரியுமா?   

திருச்சியில் என்கவுண்டர்! பிரபல ரவுடியை காலில் சுட்டு பிடித்த போலீசார்

திருச்சி லால்குடியில் காவல்துறை தேடியபோது மறைவாக இருந்த பிரபல ரவுடியை காலில் சுட்டு போலீசார் பிடித்துள்ளனர்.

ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதுலை நீட் தேர்வு நடைபெறும்

டெல்லி தேசிய மருத்துவக் கல்வி வாரியம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி அன்று முதுகலை நீட் தேர்வு நடைபெறும் என அறிவித்துள்ளது. கடந்த மாதம் 23 ஆம் தேதி முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு, நடக்க இருந்தது. திடீரென அதற்கு முந்தைய நாள் இரவு, அத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி 3-வது முறையாக முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. முதுநிலை நீட் தேர்வு நடத்துவதற்கான தயார்நிலை குறித்து கடந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சகமும், சுகாதாரத்துறை … Read more

கள்ளக்குறிச்சி தெய்வானை.. ஆண் நண்பர் கிட்ட பேசிட்டே இருந்தாரு.. டக்கென \"கட்டையை\" எடுத்த கணவர்.. ஏன்?

கள்ளக்குறிச்சி: அண்ணன் – தம்பி இருவரையும் கைது செய்து உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள். என்ன காரணம்? கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது அ.குறும்பூர் என்ற கிராமம்.. இங்கு வசித்து வருகிறார் வீரமணி.. கூலித்தொழிலாளியான இவருக்கு 33 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் தெய்வானை.. 28 வயதாகிறது. திருமணம்: கடலூா் மாவட்டம் விருத்தாசலம் Source Link

கல்யாணம் தேவையா? எழிலிடம் சண்டை போடும் சுடர்… நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில் சுடருக்கு விசா வந்துவிட அதை சாமி முன்வைத்து பூஜை செய்கிறாள். மறுபக்க்ம வீட்டிற்கு வரும் அய்யர் எழில், மனோகரிக்கு பொருத்தம் நல்லா இருக்கு. கல்யாண பத்திரிகையை எழுதி கொடுத்து, போட்டோ

தமிழகத்திற்கு மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை – இந்திய வானிலை ஆய்வு மையம்

புதுடெல்லி, தமிழகத்திற்கு மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி , தமிழகத்தில் இன்று தரைக்காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக 40 கி.மீ. வேகத் தரைக்காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அருணாச்சல பிரதேசம் , அசாம் , மேகாலயா மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.உத்தரப்பிரதேசம் , இமாச்சல பிரதேசம் , சிக்கிம் , பீகார் மாநிலங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது … Read more

அதற்காக ரோகித் சர்மாவுக்கு நன்றி – ராகுல் டிராவிட் பேட்டி

மும்பை, ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வீரர்கள் மும்பையில் திறந்த பஸ்சில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர். பிரமாண்டமான பேரணி முடிந்ததும் இந்திய வீரர்களுக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் பாராட்டு விழா நடந்தது. இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் உலகக்கோப்பையை வென்றதற்காக ரூ.125 கோடியை ஊக்கத்தொகையாக வழங்கினர். இந்த நிகழ்வில் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் பேசினார்கள். … Read more

பிரிட்டனின் புதிய பிரதமராகிறார் கீர் ஸ்டார்மர்

லண்டன், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 650 தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி, பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி, லிபரெல் டெமோகிராட்ஸ் கட்சி ஆகியவை வேட்பாளர்களை நிறுத்தி இருந்தன. கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி கடுமையான தோல்வியை சந்திக்கும் எனவும், பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனவும் கூறப்பட்டு இருந்தது. பிரிட்டன் நேரப்படி இரவு 10 மணிக்கு … Read more

"குழந்தைகள் உண்ட மிச்சத்தை சாப்பிடுகிறேன்" அம்மா கரீனா கபூர் பெருமிதம்!

தன் குழந்தைகள் உண்ட உணவின் மிச்சத்தை ஓர் அம்மாவாக தான் சாப்பிடுவது குறித்து, நடிகை கரீனா கபூர் பூரிப்புடன் பகிர்ந்துள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பதிவு, பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. தாய்மை என்பது பெண்களுக்கே உரித்தான அன்பின் வெளிப்பாடு. தாய்மை அடைந்தது முதல், குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவது வரை, தன் நலன்களை மறந்து குழந்தைகளை பற்றியே அந்தத் தாய் சிந்திக்கிறார். அதேநேரம், குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோர் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால், அவர்களைச் சாப்பிட வைப்பது தான். `இரு மகன்களை … Read more

கோவை மாநகரில் உயிர் பலி வாங்கும் கனரக வாகனங்கள்!

கோவை: கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண மேம்பாலங்கள் கட்டுதல், சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நெரிசல் அதிகமுள்ள இடங்களில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு, விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கின்றனர். இருப்பினும் வாகன ஓட்டிகளின் விதிமீறல் தொடர்கிறது. குறிப்பாக, மாநகரில் நிலவும் நெரிசலுக்கு லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் பிரதான காரணமாக உள்ளன. இதுகுறித்து சமூக செயல்பாட்டாளர்கள் கூறும்போது, ‘‘சமீபத்தில் உக்கடத்தில் பள்ளி ஆசிரியை டிப்பர் லாரி … Read more