’உலகின் 8வது அதிசயமே’ ஜஸ்பிரித் பும்ராவுக்கு விராட் கோலி கொடுத்த மிகப்பெரிய புகழாரம்

இந்திய அணி டி20 உலகக்கோப்பை வென்றதையொட்டி மும்பை வான்கடே மைதானத்தில் வீரர்களுக்கான வரவேற்பும் பாராட்டு விழாவும் நடந்தது. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்றனர். அப்போது டி20 உலகக்கோப்பையில் வெற்றி பெற்றது குறித்து பேசிய விராட் கோலி, இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா உலகின் எட்டாவது அதிசயம் என தெரிவித்தார். பும்ராவை இந்தியாவின் பொக்கிஷம் என அறிவிப்பீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், அந்த பேப்பரை உடனே கொடுங்கள் முதல் … Read more

Nivetha Thomas: `இது தான் என் கணவர், இவர்கள் தான் என் 2 மகன்கள்!' – மேடையில் அதிரவைத்த நிவேதா தாமஸ்

திருமணம் குறித்து பரவிய செய்திகளுக்கு நடிகை நிவேதா தாமஸ் விளக்கமளித்திருக்கிறார். சமுத்திரகனி இயக்கிய ‘போராளி’ படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் நிவேதா தாமஸ். அதன் பிறகு நவீன சரஸ்வதி சபதம் படத்தில் நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான ‘ஜில்லா’ படத்தில் நடித்து பிரபலமானார். அதனைத்தொடர்ந்து கமல்ஹாசனுடன் ‘பாபநாசம்’ மற்றும் ரஜினியுடன் ‘தர்பார்’ படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என தொடர்ந்து நடித்து வருகிறார். அந்தவகையில் தற்போது ’35 Chinna Katha Kaadu’ என்ற … Read more

நம்பிக்கை துரோகி, கரையான், 2026 சட்டமன்ற தேர்தலையும் புறக்கணிப்பாரா? எடப்பாடியை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை

சென்னை: விக்கிரவாண்டியை போல 2026 சட்டமன்ற தேர்தலையும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி புறக்கணிப்பாரா? என்றும் எடப்பாடி ஒரு நம்பிக்கை துரோகி என்றும் எனவும், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்தார். அதிமுக பாஜக இடையே முட்டல் மோதல் தீவிரமடைந்து வருகிறது. இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் வசை பாடி வருகின்றனர். நடைபெற்ற முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக பல இடங்களில் இரண்டாவது இடித்து பிடித்துள்ளதை சுட்டிக்காட்டி, அதிமுகவை அண்ணாமலை மட்டம் தட்டி … Read more

மகன் பலியாகி 6 மாதம் ஆச்சு.. இன்னும் மத்திய அரசு இழப்பீடு தரல.. அக்னி வீரரின் தந்தை குற்றச்சாட்டு

சண்டிகர்: நாட்டை காக்கும் பணியில் உயிரிழந்த அக்னி வீரர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு கிடைப்பதில்லை என்று மக்களவையில் ராகுல் காந்தி விமர்சனங்களை எழுப்பியிருந்தார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், உயிரிழந்த அக்னி வீரரின் குடும்பத்தினர், தங்களுக்கு இதுவரை ராணுவத்திலிருந்தோ, மத்திய அரசிடமிருந்தோ இழப்பீட்டு தொகை கிடைக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளனர். லோக்சபா தேர்தல் முடிவடைந்த Source Link

பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமை! தேவையில்லாத ஆணிகள்தான் தீர்வா? திருந்துங்க தமிழ் சினிமா

சென்னை: பெண்ணின் மீது நடத்தப்படும் பாலியல் வன்புணர்வு, பாலியல் வன்கொடுமை என்பது, பெண்ணிற்கும் அந்த பெண்ணின் குடும்பத்திற்கும் பெருத்த அவமானத்தை ஏற்படுத்தக் கூடியது என பல தமிழ் படங்கள் கூறி வருகின்றது. பெண்ணின் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமையை மைய்யமாகக் கொண்ட திரைப்படமோ அல்லது படத்தின் எதாவது ஒரு காட்சியோ, அந்த படத்தின் மூலம் அல்லது அந்த

நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது – சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு

புதுடெல்லி, இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு கடந்த மே 5-ந்தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டது. சுமார் 24 லட்சம் மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதினர். இந்த தேர்வில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் மோசடிகள் நடந்திருப்பது அம்பலமாகி இருக்கிறது. ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் என பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. எனவே இந்த முறைகேடுகள் தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் சோதனை, கைது நடவடிக்கை போன்ற அதிரடிகள் … Read more

மீண்டும் லண்டன் புறப்பட்ட விராட் கோலி…காரணம் என்ன தெரியுமா..?

மும்பை, 17 ஆண்டுகள் கழித்து டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்று வரலாறு படைத்துள்ளது. இந்தியாவின் இந்த வெற்றிக்கு இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். இதன் காரணமாக ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், இந்த போட்டியுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனையடுத்து டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய வீரர்களுக்கான பாராட்டு விழா பி.சி.சி.ஐ. சார்பில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி வீரர்கள் திறந்தவெளி பேருந்தில் … Read more

ஓய்வின்றி அதிக வேலை… தற்கொலை செய்து கொண்ட ரோபோ – வினோத சம்பவம்

சியோல், உலகம் முழுவதும் ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி பெற்று வருகிறது. இது ஒரு புறமிருக்க மனிதர்களுக்கு மாற்றாக ரோபோக்களை வேலைக்கு அமர்த்தும் நடவடிக்கையும் பரவலாக பெருகி வருகிறது. மனிதர்களை விட துரிதமாகவும், கச்சிதமாகவும் வேலையை முடிப்பதால் பல்வேறு துறைகளிலும் ரோபோக்கள் பணியமர்த்தப்படுகின்றன. ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளில் மக்கள் தொகை குறைவு உள்ளிட்ட காரணங்களால் ரோபோ பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தென் கொரியாவின் தலைநகர் சியோலில் அரசு அலுவலகத்தில் … Read more

கிளி. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

கிளிநொச்சி மாவட்டத்தின் ஜீலை மாத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடற்றொழில் அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் நேற்று (04) நடைபெற்றுள்ளது. கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில், கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அறிமுக உரையுடன் ஆரம்பமாகியது. கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன. வேரவில் கிராம அலுவலர் பிரிவில் காற்றாளை மின் உற்பத்தி திட்டம், புலோப்பளை காற்றாளை நிர்மாணத்திற்கான திட்டம், கோவில் … Read more

கூடங்குளம் அணு உலை பணிக்கு வந்த நேபாள தொழிலாளர்கள் – உள்ளூர் மக்களின் எதிர்ப்பும் போராட்டமும்!

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரு உலைகள் செயல்பட்டு வருகின்றன. 3 மற்றும் 4-வது அணு உலையின் கட்டுமானப் பணிகள் 80 சதவிகிதம் முடிவடைந்து விட்டன. 5 மற்றும் 6-வது அணு உலைக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கூடங்குளம் அணு உலை பணிகளில் பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வட மாநிலத் தொழிலாளர்கள் 4000-க்கும் அதிகமானோர் பணியாற்றி வருகிறார்கள். கூடங்குளம் அணு உலை அணு உலைக்கான நிலம் கையகப்படுத்தப்பட்ட போது, உள்ளூர் … Read more