ஜிம்னி எஸ்யூவிக்கு ரூ.2.75 லட்சம் வரை சலுகையை அறிவித்த மாருதி சுசூகி

ரூ.12.74 லட்சத்தில் துவங்குகின்ற ஜிம்னி எஸ்யூவி மாடலுக்கு போதிய வரவேற்பின்மையால் தொடர்ந்து அறிமுகம் முதலே சலுகைகளை அறிவித்து வருகின்ற மாருதி சுசூகி தற்பொழுது ரூ.2.75 லட்சம் வரை சலுகை அறிவித்துள்ளது. இருப்பில் உள்ள ஜிம்னி மாடல்களின் எண்ணிக்கையை பொறுத்து சலுகை வழங்கப்படுகின்றது. ஒரு சில டீலர்களில் அதிகபட்ச விலை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.1,00,000 ரொக்க தள்ளுபடி, சில ஆக்செரீஸ் வாங்குகையில் தள்ளுபடி மற்றும் போனஸ் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் எதிர்பார்ப்புகளுடன் அறிமுகம் செய்யப்பட்ட 5 டோர் ஜிம்னி … Read more

இஸ்ரேலுக்குச் சென்ற இலங்கைத் தொழிலாளர்களால் ஏற்பட்ட நெருக்கடிகள் குறித்து அமைச்சரின் அறிக்கை

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவிற்கும் இலங்கைக்கான இஸ்ரேலிய தூதுவர் நவோர் கிலோனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (04) தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் இடம்பெற்றது. இலங்கையர்களுக்கான இஸ்ரேலின் வேலை வாய்ப்புகள் மற்றும் தற்போது இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்களின் நிலைமை குறித்து கலந்துரையாடப்பட்டது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் இஸ்ரேலில் ஏற்பட்ட அசாதாரண நிலை காரணமாக இலங்கையில் இருந்து பயிற்சியற்ற தொழிலாளர்கள் கூட கோரப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டது. எனினும் இஸ்ரேலுக்குச் சென்ற சில இலங்கையர்களின் நடத்தை மற்றும் … Read more

'நல்ல தலைவர்கள் டு நீட் எதிர்ப்பு வரை..!’ விஜய்-ன் பேச்சுக்களில் கூடுகிறதா தெளிவு?!

தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கியிருக்கும் நடிகர் விஜய், வரும் சட்டப்பேரவை தேர்தலை சந்திப்பேன் என்றிருக்கிறார். இந்த சூழலில்தான் த.வெ.க சார்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. அப்படி கடந்த 27-ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய், “தமிழ்நாட்டில் உலகத்தரத்திலான மருத்துவர்கள், பொறியாளர்கள் அதிகமாக இருக்கிறார்கள். ஆனால், இங்கே எது அதிகமாகத் தேவைப்படுகிறதென்றால், நல்ல தலைவர்கள்தான். நான் அரசியல் தலைவர்களை மட்டும் சொல்லவில்லை. எல்லாத் துறைகளிலும் சொல்கிறேன். எதிர்காலத்தில் … Read more

சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்கள் யார்? – ‘10 பாயின்ட்ஸ்’ பட்டியலிட்டு முதல்வருக்கு அன்புமணி பதிலடி

சென்னை: ‘சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்கள் யார்? என்பதை என்பதை மக்கள் புரிந்து கொள்ள சில உண்மைகள்..’ என 10 கருத்துகளை முன்வைத்து தமிழக முதல்வர் ஸ்டாலினின் சமூகவலைதளப் பதிவுக்கு பதிலடி கொடுத்துள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். அவருடைய சமூகவலைதளப் பதிவு வருமாறு: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டிருக்கிறார். அதையே நானும் சொல்கிறேன்….விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு தக்க பாடம் … Read more

பிஹாரில் பாலங்களை ஆய்வு செய்ய கோரி வழக்கு

புதுடெல்லி: பிஹாரில் 15 நாட்களில் 10 பாலங்கள் இடிந்து விழுந்துள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பாலங்களின் உறுதித் தன்மையை ஆராய உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. பிஹாரில் சிவான், சரண், மதுபானி, அராரியா, கிழக்கு சம்பரன்,கிஷன்கஞ்ச் ஆகிய மாவட்டங்களில் கடந்த 15 நாட்களில் 10 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன. பிஹாரில் கடந்த இரு வாரங்களாக பெய்துவரும் கனமழை காரணமாகவே பாலங்கள் பலமிழந்து இடிந்து விழுந்ததாக கூறப்பட்டாலும், பாலங்களை குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை பிஹார் … Read more

வழக்கறிஞர் டு பிரிட்டன் பிரதமர்: யார் இந்த கீர் ஸ்டார்மர்?

லண்டன்: பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் லேபர் கட்சி வேட்பாளர் கீர் ஸ்டார்மர் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், பிரிட்டனின் அடுத்த பிரதமராக அவர் விரைவில் பதவியேற்கிறார். பிரிட்டன் தேர்தலில் பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. பிரிட்டனில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு லேபர் கட்சி ஆட்சியைப் பிடித்திருக்கிறது. பிரிட்டன் தேர்தல் வரலாற்றில் மோசமான ஒரு தோல்வியை கன்சர்வேடிவ் கட்சி சந்தித்திருக்கிறது. அதே வேளையில், லேபர் கட்சி வேட்பாளர் கீர் ஸ்டார்மர் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருக்கும் … Read more

எல்பிஜி மானியம் தொடர்பாக முக்கிய முடிவை எடுக்கும் மத்திய அரசு?

2024-25 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மொத்த எரிபொருள் மானியம் ரூ.11,925 கோடியாக இருக்கும் என்று தெரிவித்து இருந்தார்.

கிசுகிசு : பூ கட்சியில் சில்லு வண்டுகளின் மோப்பம்: மலர்களின் குமுறல்

கிசுகிசு : பூ கட்சியில் சில்லு வண்டுகளின் மோப்பம் மலர்களை குமுற செய்ய, மூத்த வண்டுகள் டீலிங், கமிஷன் விஷயங்களையும் கசியவிடத் தயாராக உள்ளன. 

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ”சமூக நீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள்”! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: விக்கிவாரண்டி இடைத்தேர்தலில்,  ”சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  திமுக அரசு என்றாலே சமூகநீதி அரசு  என்றும்   பெருமையுடன் தெரிவித்துள்ளார். அறிவாலயத்தின் வேட்பாளராக விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் அன்னியூர் சிவாவை உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங் கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று (05-07-2024), திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும்,  தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் … Read more

விஜய் வீடு இடிக்கப்படுமா? மிரட்டும் விஷமிகள்.. அந்தணன் சொல்வது என்ன!

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2வது ஆண்டாக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழாவில் விஜய், நீட் தேர்வால் ஏழை, கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இத்தேர்வு மாநில அரசுகளின் உரிமைகளுக்கு எதிரானது எனவே நீட் தேர்வு தேவையில்லை என பேசி இருந்தார். இவரின் இந்த அதிரடியான பேச்சு குறித்து வலைபேச்சு அந்தணன் என்ன