‘நீங்கள் நலமா’ திட்டத்தின்கீழ் பயனாளிகளுடன் முதல்வர் காணொலியில் பேச்சு

சென்னை: தமிழகத்தில் அரசு திட்டங்களின் பயன்கள் உடனுக்குடன் மக்களை சென்று சேர்வதை, முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பயனாளிகளிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறியும் ‘நீங்கள் நலமா’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் 6-ம் தேதி தொடங்கிவைத்தார். தமிழகத்தில் மகளிர் உரிமை, விடியல் பயணம், காலை உணவு உட்பட பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், திட்ட பயனாளிகளை ‘நீங்கள்நலமா’ திட்டத்தின் கீழ் முதல்வர் ஸ்டாலின் நேற்று காணொலி மூலம் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். அம்பேத்கர் … Read more

வாக்கு இயந்திரத்தை உடைத்ததில் என்ன தவறு? – ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன் கேள்வி

நெல்லூர்: ஆந்திர மாநிலத்தில் அனந்தபூர் மாவட்டம், மாசர்லா சட்டமன்ற தொகுதியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் வேட்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான பின்னெல்லி ராமகிருஷ்ணா ரெட்டி தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து மே 13-ம் தேதி தேர்தல் நாளன்று பாலய்யகேட் வாக்கு சாவடிக்குள் புகுந்து, அங்கிருந்த வாக்கு இயந்திரத்தை தரையில் போட்டு உடைத்தார். இதனை தடுக்க வந்த தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். மறுநாள் இவரும், இவரது ஆதரவாளர்களும் காரம்பூடி எனும் இடத்தில் பயங்கர கலவரத்தில் ஈடுபட்டனர். இவர்களை … Read more

பிரிட்டன் பொதுத் தேர்தல்: எதிர்க்கட்சிக்கு சாதகமாக கருத்துக்கணிப்பு; வாக்கு எண்ணிக்கை உடனடியாக தொடங்கியது

லண்டன்: பிரிட்டனில் நேற்று நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் வாக்களித்தனர். வாக்குப் பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை உடனடியாக தொடங்கியது. பிரிட்டனில் கடந்த 14 ஆண்டுகளாக கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. எனினும், இந்த காலகட்டத்தில் பிரதமர்கள் மாறிக் கொண்டே வந்துள்ளனர். இப்போது 5-வது நபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் (44) பிரதமராக பதவி வகிக்கிறார். இந்நிலையில், அங்கு மொத்தம் உள்ள 650 நாடாளுமன்ற … Read more

என்னுடைய படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு மிரட்டல் – ரஞ்சித் பரபரப்பு புகார்!

தன்னுடைய திரைப்படம் வெளியிடும் தியேட்டர்களுக்கு மிரட்டல் வருகிறது என்று மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் ரஞ்சித் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

'15 வருடத்தில் ரோஹித்தை இப்படி பார்த்ததே இல்லை…' கண்ணீர் கதையை பகிர்ந்த விராட் கோலி

Team India Felicitation Ceremony: நடந்து முடிந்து 9ஆவது ஐசிசி டி20 உலகக் கோப்பையை (ICC T20 World Cup 2024) வென்று ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நேற்று காலை நாடு திரும்பியது. டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்ற பார்படாஸ் நகரில் திடீரென ஏற்பட்ட புயல் பாதிப்பால் விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. இதனால், இந்திய அணி நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. ஞாயிற்றுக்கிழமை புறப்பட வேண்டிய இந்திய அணி அங்கிருந்து … Read more

வார ராசிபலன்: 05.07.2024  முதல் 11.07.2024 வரை! வேதா கோபாலன்

மேஷம் ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். ஆயுதங்கள் கையாளும் போதும் வாகனங்களை ஓட்டும்போதும் கேர்ஃபுல்லா இருங்க. தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பிசினஸ் செய்யறவங்க வாடிக்கையாளர்களின் கருத்துக்களுக்கு மதிப்புக் கொடுக்கறீங்க. இது நன்மை தரும். குடியிருக்கவோ.. பிசினஸ் செய்யவோ, புதியதாக இடம் வாங்குவீங்க.  உத்யோகத்துல  மேலதிகாரிகளிடம் உங்களது கருத்துக்களை தெரிவிச்சு பாராட்டு வாங்குவீங்க.பணி நிமித்தமாக பயணங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரிச்சுக்கிட்டுப் போறீங்க. வெரி … Read more

அம்மாவா நடிக்கவும் அட்ஜெஸ்ட்மெண்ட்.. பிக்கப் டிராப் முதல் இத்தனை வசதிகள்.. நடிகை மாலதி பகீர்!

சென்னை: தன்னுடைய மகளுக்கு இருக்கும் டிமாண்டை விட தனக்குத்தான் சினிமா உலகில் டிமாண்ட் அதிகம் என நடிகை மாலதி பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனவுத் தொழிற்சாலையான சினிமா உலகில் காலடி எடுத்து வைத்து ஸ்டாராக ஆண்களும் பெண்களும் ஒவ்வொரு நாளும் கோடம்பாக்கத்திற்கு வந்துக் கொண்டு தான் இருக்கின்றனர். தமிழ் சினிமாவில் மட்டுமின்றி காஸ்டிங் கோச் எனும் படுக்கைக்கு

நட்சத்திரப் பலன்கள்: ஜூலை 5 முதல் 11 வரை #VikatanPhotoCards

அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி Source link

விவசாயிகளை வீட்டுக் காவலில் சிறை வைப்பதை எதிர்த்து வழக்கு: திருச்சி காவல் ஆணையர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை: போராட்டங்களில் பங்கேற்கவிடாமல் விவசாயிகளை வீட்டுக் காவலில் வைக்கும் நடவடிக்கையை கைவிடக் கோரிய வழக்கில் திருச்சி மாநகர் காவல் ஆணையர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாகண்ணு, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘விவசாயிகளின் நலனுக்காக மத்திய – மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்க பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வருகிறோம். ஆனால், இப்போராட்டங்களில் பங்கேற்கவிடாமல் போலீஸார் என்னை வீட்டுக்காவலில் … Read more

முதல்வர், துணை முதல்வர் போட்டியால் கர்நாடக அரசுக்கு அவப்பெயர்: கார்கேவிடம் முறையிட்ட டி.கே.சிவகுமார்

பெங்களூரு: கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் டி.கே.சிவகுமார் துணை முதல்வராக பதவி வகிக்கிறார். இந்நிலையில் உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா, பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜண்ணா ஆகியோர் தங்களுக்கும் துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என போர்க்கொடி தூக்கினர். இதேபோல ஒக்கலிகா பிரிவை சேர்ந்த எம்எல்ஏக்கள் சிலர் டி.கே.சிவகுமாருக்கு முதல்வர் பதவியை வழங்க வேண்டும் என ஊடகங்களில் வெளிப்படையாக பேசினர். இதற்கு சித்தராமையாவின ஆதரவாளர்களான அமைச்சர்கள் லட்சுமி ஹெப்பல்கர், பைரதி … Read more