அக்னிவீர் திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் ராஜ்நாத் சிங் முழுமையான தகவலை தராதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது : கர்னல் ரோகித் சவுத்ரி
அக்னிவீர் திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் ராஜ்நாத் சிங் முழுமையான தகவலை தரவில்லை என்று அவரது இந்த செய்கை சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் படைவீரர் பிரிவின் தலைவர் கர்னல் ரோகித் சவுத்ரி கூறியுள்ளார். அக்னிவீர் திட்டம் மூலம் ஒப்பந்த அடைப்படையில் ராணுவத்தில் பணியமர்த்தப்படும் வீரர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படுவதில்லை என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். இதையடுத்து அக்னிவீரர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவத்தின் எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டது. … Read more