சென்னை – நாகர்கோவிலுக்கு வாரத்தில் 4 நாட்கள் ‘வந்தே பாரத்’ சிறப்பு ரயில் சேவை

சென்னை: ரயில் பயணிகள் வசதிக்கென சென்னை – நாகர்கோவில் இடையே வாரம் நான்கு முறை சேவையாக ‘வந்தே பாரத்’ சிறப்பு ரயில்கள் இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, சென்னை – நாகர்கோவில் ‘வந்தே பாரத்’ சிறப்பு ரயில் (06067) சென்னை எழும்பூரில் இருந்து ஜூலை 11, 12, 13, 14, 18, 19, 20, 21 ஆகிய வியாழன், வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் காலை 5 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.50 மணிக்கு … Read more

அக்னிவீர் சர்ச்சை: ராகுல் குற்றச்சாட்டும், இந்திய ராணுவத்தின் விளக்கமும்!

புதுடெல்லி: அக்னிவீர் திட்டத்தில் உயிர்த் தியாகம் செய்பவர்களின் குடும்பத்துக்கு எந்தவித உதவியும் செய்யப்படுவதில்லை என்று ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுக்கு இந்திய ராணுவம் விளக்கமளித்துள்ளது. கடந்த ஜூலை 1-ம் தேதியன்று குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசின் அக்னிவீர் திட்டம் குறித்த விமர்சனங்களை முன்வைத்தார். இந்த திட்டத்தில் பணியாற்றும் வீரர்களுக்கு மத்திய அரசு எந்தவித ஓய்வூதியமோ அல்லது தியாகி அந்தஸ்தோ வழங்குவதில்லை … Read more

மக்கள் போராட்டமும், அரசின் அடக்குமுறையும்: கென்யாவில் நடப்பது என்ன? | HTT Explainer

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் வரி உயர்வுக்கு, அரசுக்கு எதிராக மக்கள் கடந்த மாதம் முதல் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் இளம் தலைமுறையினர். அவர்களை கட்டுப்படுத்த போலீஸார் பல்வேறு வகையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களில் இதுவரை 39 பேர் உயரிழந்துள்ளனர். 361 பேர் காயமடைந்துள்ளனர். பலர் மாயமாகி உள்ளனர். இதனை கென்ய மனித உரிமைகள் ஆணையம் உறுதி செய்துள்ளது. இந்த சூழலில் வரி உயர்வு தொடர்பான மசோதாவை அதிபர் வில்லியம் … Read more

ஜார்கண்ட் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் சம்பை சோரன்… புதிய முதல்வராக ஹேமந்த் சோரன் மீண்டும் பதவியேற்பார்…

ஜார்கண்ட் முதல்வர் சம்பை சோரன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ஜனவரி மாதம் அமலாக்கத்துறையால் அப்போதைய முதல்வரும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார், அதைத் தொடர்ந்து சம்பை சோரன் முதல்வராக பதவியேற்றார். இந்த நிலையில் ஹேமந்த் சோரன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. 5 மாத சிறைவாசத்துக்கு பிறகு ராஞ்சி சிறையில் … Read more

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு மீண்டும் உடல்நலக்குறைவு.. அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

டெல்லி: பாஜக மூத்த தலைவர் எல் கே அத்வானி உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். பாஜகவின் மூத்த தலைவரும், நாட்டின் முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு 96 வயதாகிறது. வயோதிகம் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக பாதிக்கப்பட்ட எல்.கே.அத்வானிக்கு அவரது வீட்டிலேயே மருத்துவ Source Link

ஏறுனா ஃப்ளைட்டு.. இறங்குனா காரு.. இப்போது 200 ரூபாய்க்கு நடிப்பு.. ஃபேமஸ் நடிகர் எமோஷனல்

சென்னை: நடிகர் டிஎஸ்ஆர் தர்மராஜை நிறைய படங்களில் பார்த்திருக்கலாம். விக்ரம் வேதாவில் விசாரணை கமிஷன் தலைவராக வந்தது, சர்தார் படத்தில் அதிகாரியாக வந்தது என பல படங்களில் நடித்திருக்கிறார். முக்க்கியமாக அயலி வெப் சீரிஸில் கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார். இந்தச் சூழலில் பட விழா ஒன்றில் கலந்துகொண்ட அவர் தனது திரையுலக பயணம் குறித்து எமோஷனலாக

வடக்கு மாகாண கௌரவ ஆளுனரால் மூன்று புதிய நியமனங்கள் இன்று வழங்கி வைப்பு.

வடக்கு மாகாணத்திற்கான இரண்டு திணைக்களங்களின் ஆணையாளர் பதவிக்கும், மாகாண பிரதி பிரதம செயலாளர் பதவிக்கும், புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான நியமனக் கடிதங்களை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் இன்று (03/07/2024) வழங்கிவைத்தார். வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் ஆணையாளராக திருமதி சி.சுஜீவா அவர்களும், வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளராக திருமதி கு.காஞ்சனா அவர்களும், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக (நிர்வாகம்) திருமதி.அ.யோ.எழிலரசி அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான … Read more

சென்னை: `நீங்க போலீஸ்… நான் அக்யூஸ்ட்'- போலீஸுக்கு சவால் விட்ட ரௌடிக்கு மாவுகட்டு – என்ன நடந்தது?

சென்னை காசிமேடு புதுமனைக்குப்பத்தைச் சேர்ந்தவர் ரிஷி கண்ணன் (21). பிரபல ரௌடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்பட 16-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த மாதம் திருவொற்றியூரைச் சேர்ந்த ஆகாஷ் என்பவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 5,000 ரூபாயை ரிஷிகண்ணன் பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான புகார் அடிப்படையில் திருவொற்றியூர் போலீஸார், ரௌடி ரிஷிகண்ணனைத் தேடி வந்தனர். ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார். இந்தநிலையில் ரிஷிகண்ணன், மிஸ்டர் ப்ரொபஷனல் ரௌடி என்ற சமூக வலைதள … Read more

தமிழகத்தில் புரட்சிகர திட்டங்களை அறிமுகம் செய்தவர் முதல்வர் ஸ்டாலின்: செல்வப்பெருந்தகை பாராட்டு

விழுப்புரம்: மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம், ஆண்களுக்கு தமிழ் புதல்வன் திட்டம் உள்ளிட்ட புரட்சிகர திட்டங்களை அறிமுகம் செய்தவர் முதல்வர் ஸ்டாலின் என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பாராட்டியுள்ளார். விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட ஆரியூர், வெங்கந்தூர், வாழப்பட்டு, சித்தாமூர் ஆகிய கிராமங்களில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை சிறப்புரையாற்றினார். அமைச்சர்கள் கே என் நேரு, ராஜ கண்ணப்பன், எம்பிக்கள் விஷ்ணு பிரசாத், செல்வகணபதி , சுதா மாநிலத்துணைத்தலைவர்கள் குலாம் மொய்தீன், ரங்க … Read more