மதுபான கொள்கை ஊழல்: டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. டெல்லி யூனியன் பிரதேசத்தில் ஆம் ஆத்மி ஆட்சி நடத்தி வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டில் புதிய மதுபான கொள்கையை ஆம் ஆத்மி அரசு அமல்படுத்தியது. இதன்படி, 849 தனியார் நிறுவனங்களுக்கு மதுக்கடை உரிமங்கள் வழங்கப்பட்டன. இதில் ரூ.2,800 கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. … Read more

கொலை குற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும் – சபாநாயகர் அப்பாவு!

தமிழ்நாட்டில் எந்த குற்றங்கள் நடந்தாலும் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எடுக்காமல் இருந்தால் தான் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்க வேண்டும் – சபாநாயகர் அப்பாவு பேட்டி.  

அஸ்வினுக்கே ஆப்பு வைக்கப் பார்த்த வீரர்… ஜஸ்ட் மிஸ்ஸில் எஸ்கேப் – டிஎன்பிஎல் சுவாரஸ்ய வீடியோ!

Mankad Against Ravichandran Ashwin: டிஎன்பிஎல் (TNPL) என்றழைக்கப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் கடந்த ஜூலை 5ஆம் தேதி அன்று சேலம் நகரில் கோலாகலமாக தொடங்கியது. சென்னை, கோவை, திருப்பூர், சேலம், மதுரை, திண்டுக்கல், நெல்லை, திருச்சி ஆகிய 8 அணிகள் இதில் பங்கேற்றுள்ளன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணிகளும் மற்ற 7 அணிகளுடன் தலா 1 போட்டியில் மோதும்.  அதன்படி, லீக் சுற்றின் முடிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகளில் முதலிரண்டு அணிகள் … Read more

கூவத்தூர் சம்பவம்: காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது. கவுன்சிலர்கள் அனைவரும் தனியார் விடுதியில் சிறை வைக்கப் பட்டதால், நம்பிக்கையில்லா தீர்மானத்தின்மீது யாரும் கலந்துகொள்ள முடியாத நிலையில், தீர்மானம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம், மொத்தமுள்ள 51 கவுன்சிலர்களில் யாரும் பங்கேற்காததால் தோல்வியில் முடிந்தது. திமுகவினரின் இந்த நடவடிக்கை, கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற கூவத்தூர் சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். காஞ்சிபுரம் மேயராக … Read more

ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமாரின் ஜேடியூ போட்டி- செம்ம கடுப்பில் பாஜக!

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் 11 இடங்களில் போட்டியிட இருப்பதாக பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) அறிவித்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ்- ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு வலுவான மாற்று கட்சியாக பாஜக இருக்கும் நிலையில் ஐக்கிய ஜனதா தளமும் அம்மாநிலத்தில் கால் பதிக்க முயற்சிப்பதை பாஜக தலைவர்களால் ஏற்க முடியவில்லையாம். ஆனாலும் Source Link

உனக்கு பிடிச்சது, எனக்கும் பிடிக்கும்.. கார்த்திக் தீபாவின் லவ் ட்ராக்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில், தீபா முதல் முறை நடந்த திருமணம் யாருக்கும் தெரியாமல், சீக்கிரத்தில் நடந்து முடிந்துவிட்டதால், இரண்டாவதாக கார்த்திக்கை திருமணம் செய்வதாவது பிரம்மாண்டமாக நடக்க வேண்டும் என்று ஆசைப்படுவதால், அதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகிறது. மேலும், தீபா,

ஆசிய கிண்ணத்தை வென்ற இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி ரணில் வாழ்த்து

ஆசிய கிண்ணத்தை வென்ற சமரி அதபத்து உள்ளிட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துத் தெரிவித்தார். “உங்களுடைய தோல்வியற்ற பயணத்திற்கு உங்கள் திறமை, அர்ப்பணிப்பு மற்றும் கூட்டு செயற்பாடு சான்றாக அமைகிறது. நீங்கள் எமது நாட்டை கௌரவப்படுத்தியுள்ளீர்கள் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க     

மேட்டூர் அணை நீர் திறப்பு 20,000 கன அடியாக அதிகரிப்பு: 11 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை

மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்டுள்ள நீரின் அளவு 20 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, எந்த நேரத்திலும் உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்படலாம் என்பதால் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள கபினி, கேஆர்எஸ் அணைகள் நிரம்பி உள்ளன. அந்த அணைகளின் பாதுகாப்பு கருதி, உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் காவிரில் கடந்த 2 வாரங்களாக வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. இதன் … Read more

3 மாணவர்கள் உயிரிழப்பு எதிரொலி: டெல்லியில் மேலும் 13 பயிற்சி மையங்களுக்கு மாநகராட்சி சீல்

புதுடெல்லி: திடீர் வெள்ளத்தில் சிக்கி டெல்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக டெல்லி பழைய ராஜேந்திரா நகர் பகுதியில் உள்ள மேலும் 13 பயிற்சி மையங்களுக்கு சட்டவிரோதமாக இயங்கியதாகக் கூறி மாநகராட்சி சீல் வைத்துள்ளது. முன்னதாக, நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக டெல்லியில் உள்ள ராவ் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் தரைதளத்துக்குள் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்தது. அங்குதான் பயிற்சி மையத்தின் நூலகம் செயல்பட்டு வந்துள்ளது. இதனால், அங்கு குறிப்பெடுத்துக் கொண்டிருந்த … Read more