Doctor Vikatan: என்னுடைய தோழியின் வீட்டில் தினமும் எல்லோரும் குல்கந்து சாப்பிடும் வழக்கத்தைப் பின்பற்றுகிறார்கள். குல்கந்து எந்த அளவுக்கு ஆரோக்கியமானது… அது எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது… எல்லோரும் எடுத்துக்கொள்ளலாமா? பதில் சொல்கிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த டயட்டீஷியன் கற்பகம் டயட்டீஷியன் கற்பகம் பல வருடங்களாக நம்முடைய உணவுகளில் இடம்பெற்றுத் தொடரும் பாரம்பர்யங்களில் ஒன்று குல்கந்து. இதை தினமுமே சாப்பிடலாம், தவறில்லை. ஆயுர்வேத மருத்துவத்தில் குல்கந்து முக்கியமான மருந்தாகவே பரிந்துரைக்கப்படுகிறது. உடல் சூட்டைத் தணிக்கக்கூடிய தன்மை கொண்டது குல்கந்து. அசிடிட்டி, குடல் தொடர்பான பிரச்னைகள், அஜீரணக் கோளாறுகள், அரிப்பு, … Read more