சுடரின் உடம்புக்குள் புகுந்த இந்துவின் ஆவி.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், மனோகரி எழிலுடன் ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் நடத்த திட்டம் போட குழந்தைகள் இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என தொடர்ந்து இடையூறு செய்து இருவரும் சேர்ந்து போட்டோ எடுக்க

சுற்றிவளைத்த கும்பல்… கொடூரமாக கொல்லப்பட்ட பிரபல ரௌடி – வேலூர் புறநகரில் பரபரப்பு!

வேலூர் அருகேயுள்ள அரியூர் பாரதியார் நகரைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகன் ராஜா என்கிற எம்.எல்.ஏ ராஜா. சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ கிடையாது. ரௌடிகள் மன்றத்தில் கெத்துக்காக தனக்குத் தானே சூட்டிக்கொண்ட பெயர்தான் ` எம்.எல்.ஏ’ என்ற வார்த்தை. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக… வேலூர் புறநகர்ப் பகுதியில் பிரபல ரௌடியாக வலம் வந்து கொண்டிருந்த ராஜாமீது கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல், பணம் கேட்டு மிரட்டல் என ஏகப்பட்ட குற்ற வழக்குகள் குவிந்துக்கிடக்கின்றன. அரியூர் ராஜா … Read more

அக்.30-ம் தேதி பயணத்துக்கான தீபாவளி டிக்கெட் முன்பதிவு 5 நிமிடத்தில் முடிந்தது: சொந்த ஊர் செல்வோர் ஏமாற்றம்

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்.30-ம் தேதிக்கான ரயில் டிக்கெட்முன்பதிவு தொடங்கிய 5 நிமிடங்களில் முடிந்தது. தீபாவளி பண்டிகை அக்.31-ம்தேதி (வியாழன்) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, பண்டிகைக்கு சில நாட்கள் முன்பாகரயில்களில் சொந்த ஊர்களுக்குபுறப்படுவதற்கு வசதியாக, டிக்கெட் முன்பதிவு சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஜூன் 30, ஜூலை 1 ஆகிய தேதிகளில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிசில நிமிடங்களில் முடிந்தது. இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு ஒருநாள் முன்பாக அக்.30-ம் தேதி சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு … Read more

இந்துக்களுக்கு எதிரான போக்கை கடைபிடிக்கும் காங்கிரஸை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் கடும் விமர்சனம்

புதுடெல்லி: இந்துக்களுக்கு எதிரான போக்கை கடைபிடிக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணியை 140 கோடி மக்களும் மன்னிக்க மாட்டார்கள். 2029 மக்களவை தேர்தலிலும் காங்கிரஸ் எதிர்க்கட்சிகள் வரிசையிலேயே அமரும் என்று மக்களவையில் பிரதமர்மோடி கடுமையாக விமர்சித்தார். கடந்த 27-ம் தேதி நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். இதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம், ஆளும் பாஜக … Read more

ஒரு தமிழ் படம் கூட இல்லை.. லெட்டர்பாக்ஸ்ட் டாப் 25.. முன்னிலையில் லாப்தா லேடீஸ், மஞ்சுமெல் பாய்ஸ்!

சென்னை: உலக அளவில் இந்த ஆண்டு வெளியான படங்களில் முதல் 10 இடத்தில் மூன்று இந்திய படங்கள் அதிலும் இரண்டு மலையாள படங்கள் இடம்பெற்றுள்ளன. ஒட்டுமொத்தமாக 25 சிறந்த படங்களின் பட்டியலை Letterboxd நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆனால், அதில் ஒரு தமிழ் படம் கூட இந்த ஆண்டு இடம் பிடிக்கவில்லை. மலையாள படங்களை தமிழ் சினிமா ரசிகர்கள்

“தமிழகத்தில் பாஜக மிகப் பெரிய அரசியல் சக்தி…” – வானதி சீனிவாசன் கருத்து

கரூர்: “தமிழகத்தில் பாஜக மிகப் பெரிய அரசியல் சக்தி என்பதை இந்த தேர்தல் முடிவு செய்திருக்கிறது” என பாஜக மகளிரணி தேசிய தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் தெரிவித்தார். கரூர் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த பாஜக ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற பாஜக மகளிரணி தேசிய தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசியது: “தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதி வாரியாக ஆய்வுக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. … Read more

“சாதிவாரி கணக்கெடுப்பே சமூக நீதிக்கான ஒரே வழி” – மக்களவையில் சந்திரசேகர் ஆசாத் எம்.பி பேச்சு

புதுடெல்லி: “சமூக நீதியை அடைவதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதே ஒரே வழி” என்று மக்களவையில் ஆசாத் சமாஜ் (கன்ஷிராம்) கட்சி எம்.பி. சந்திரசேர் ஆசாத் வலியுறுத்தினார். மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது செவ்வாய்க்கிழமை உரையாற்றிய சந்திரசேகர் ஆசாத், “சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது மட்டுமே சமூக நீதியை அடைவதற்கான ஒரே வழி. மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும். பாஜகவின் ‘சப்கா சத் சப்கா விகாஸ்’ என்ற … Read more

ராகுல் காந்தி உரையின் பகுதிகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் : சபாநாயகருக்கு ராகுல் கடிதம்

டெல்லி நாடாளுமன்றக் கூட்டத்தில் தாம் பேசியதை அவைக் குரிப்பில் இருந்து நீக்கக் கூடாது என ராகுல் காந்தி சபாநாயகருக்கு கடிதம் எழுதி உள்ளார் நாடாளுமன்ற  எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எனது உரைகள் நீக்கப்பட்டுள்ளது, இது விதி 380-ன் வரம்பிற்குள் வராது. எனது உரையிலிருந்து சில பகுதிகள் நீக்கப்பட்டிருப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிரானது. மக்கள் பிரச்சினைகளை அவையில் எழுப்ப வேண்டியது … Read more

Vijay sethupathi: மீண்டும் இணையும் விஜய் சேதுபதி -நித்யா மேனன் ஜோடி.. ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி!

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த மாதத்தில் வெளியான மகாராஜா படம் மிகப்பெரிய வரவேற்பை அவருக்கு பெற்றுக் கொடுத்துள்ளது. நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 50வது படமான இந்த படம் அவரது கேரியர் பெஸ்ட்டாக அமைந்தது. 100 கோடி ரூபாய் கலெக்ஷனை இந்தப் படம் நெருங்கியுள்ளது. மகாராஜா படத்தில் அப்பா மற்றும் மகள் உறவை

1000 மில். ரூபா செலவில் தெற்கிலுள்ள மீன்பிடித் துறைமுகங்கள் அபிவிருத்தி

பாணந்துறை முதல் கிரிந்த வரையுள்ள 18 கடற்றொழில் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அதற்காக அரசாங்கத்திடமிருந்து 1000 மில்லியன் ரூபாவைப் பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளார். கடந்த 29ம் திகதி தென் மாகாணத்திலுள்ள கடற்றொழில் துறைமுகங்களுக்கு அமைச்சர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டதுடன் அத் துறைமுகங்களில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்தற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார். அதன் பொருட்டு உரிய அமைச்சரவைப் பத்திரத்தைதயாரிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அமைச்சின் … Read more