டெல்லியில் கனமழை: நாடாளுமன்ற வளாகத்துக்குள் புகுந்த மழைநீர்

புதுடெல்லி: டெல்லியில் இன்று பெய்த கனமழையால் நாடாளுமன்ற வளாகத்தில் தண்ணீர் புகுந்தது. மேலும் மூன்று மாணவர்கள் உயிரிழந்த பழைய ராஜிந்தர் நகர் பகுதியிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. டெல்லியில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி நொய்டா எக்ஸ்பிரஸ் சாலை, மதுரா சாலை உள்ளிட்ட பல முக்கிய சாலைகளில் தண்ணீர் முட்டியளவு தேங்கி நிற்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு மணி நேரத்தில் மட்டும் மத்திய டெல்லியில் 112.5 மி.மீ … Read more

வயநாடு மக்களுக்கு உதவ மத்திய அரசை வலியுருத்தும் ராகுல் காந்தி

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாடு மக்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் எனக் கூறியுள்ளார். கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்ப்ட்டுள்ள கடும் நிலச்சரிவால் சுமார் 200க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர்.  தொடர்ந்து மீட்புபணிகள் நடந்து வருகின்றன  இந்த நிலச்சரிவால் பலர் காணாமல் போய் உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இன்று மக்களவையில் ராகுல் காந்தி, “வயநாட்டில் நிகழ்ந்திருப்பது மிகப்பெரிய சோகம். மீட்பு பணி மேற்கொண்டு வரும் ராணுவ வீரர்களுக்கு … Read more

Wayanad: வயநாடு நிலச்சரிவு.. 270 பேர் பரிதாப பலி.. நெஞ்சே பதறுதே.. சூர்யா என்ன சொன்னார் தெரியுமா?

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள வயநாட்டில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக இதுவரை 270 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். வயநாடு நிலச்சரிவு சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியிருக்கிறது. 2வது நாளாக இன்றும் பல கிராமங்களில் மீட்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நடிகரும் தவெக தலைவருமான விஜய் நேற்று

நிலச்சரிவில் சிக்கி இதுவரை 1,592 பேர் மீட்பு : பினராயி விஜயன் பேட்டி

திருவனந்தபுரம், கேரள மாநிலம், வயநாட்டில் பெய்த அதிகனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. நிலச்சரிவால், அட்டமலை, முண்டக்கை, சூரல்மலை ஆகிய பகுதிகள் முற்றிலும் உருகுலைந்து போயுள்ளன. அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த பகுதிகள் முற்றிலும் சேறும், சகதியுமாகவும், இடிபாடுகள் நிறைந்ததாகவும் காணப்படுகிறது. இந்தநிலையில், வயநாடு நிலச்சரிவு பாதிப்பு தொடர்பாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: இதற்கு முன் … Read more

19வது ஓவரை ரிங்கு சிங் வீச இதுதான் காரணம் – விளக்கம் அளித்த சூர்யகுமார் யாதவ்

பல்லகெலே, இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலன 3வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து பேட்டிங் ஆடிய இலங்கை 15.2 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 117 ரன்கள் எடுத்து வெற்றி பெறும் நிலையில் இருந்தது. ஆனால், அதன் பின் சிறப்பாக பந்துவீசிய இந்திய வீரர்கள் இலங்கையின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தினர். இதனால் … Read more

ஹமாஸ் தலைவர் படுகொலை; இஸ்ரேலை பழிவாங்குவோம் – ஈரான் சபதம்

தெஹ்ரான், காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்திச் சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 100-க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளது. மேலும், காசாவில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் … Read more

ஒன்பது வளைவு பாலம் மற்றும் தெம்மோதரை புகையிரத தண்டவாளத்தை பாதுகாப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஒன்பது வளைவு பாலத்தை சுற்றியுள்ள பிரதேசத்தில் சுற்றுலா முகாமைத்தவ வேலைத்திட்டம் தொடர்பில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் மத்திய கலாச்சார நிதியம் ஆகியவற்றிற்கிடையிலான புரிந்துர்ணர்வு ஒப்பந்தம் பிரதமர் தினேஷ் குனவர்தன தலைமையில் (29) பிரதமர் அலுவலகத்தில் கைச்சாத்தடப்பட்டது. இலங்கையில் முதன்முறையாக தேசிய பாரம்பரிய தளத்துடன் இணைந்து ஆம்புலன்ஸ் சேவையொன்று இங்கு ஆரம்பிக்கப்படவுள்ளது. இவ்வேலைத் திட்டத்தின் இரண்டாவது கட்டமாக தெம்மோதரை புகையிரத நிலையத்தை அண்டியதாக சுற்றுலா முகாமைத்துவ வேலைத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கும் … Read more

வயநாடு நிலச்சரிவு: அதிமுக ரூ.1 கோடி நிவாரண நிதி – இபிஎஸ் அறிவிப்பு

சென்னை: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் மழைப் பொழிவு மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்வதற்காக, அதிமுக சார்பில், நிவாரண நிதியாக 1 கோடி ரூபாய் வழங்கப்படும். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களும் அனுப்பி வைக்கப்படும், என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரள மாநிலம், வயநாடு பகுதியில் கடுமையான மழைப் பொழிவின் காரணமாக ஏற்பட்டுள்ள நிலச் சரிவில் … Read more

பூஜா கேத்கரின் ஐஏஎஸ் தேர்வு வெற்றியை ரத்து செய்தது யுபிஎஸ்சி

புதுடெல்லி: பூஜா கேத்கர் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றதை ரத்து செய்துள்ள மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி), வரும் காலங்களில் தேர்வு எழுதுவதற்கும் தடை விதித்துள்ளது. சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுதியதில் முறைகேடுகளில் ஈடுபட்டது கண்டறியப்பட்டதை அடுத்து, பூஜா கேத்கரின் தேர்வு வெற்றி ரத்து செய்யப்படுவதாக மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. மேலும், எதிர்காலத்திலும் அவர் சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுத தடை விதிப்பதாகவும் அறிவித்தள்ளது. 2022-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று பயிற்சி … Read more