“திராவிட கட்சிகள் ஆட்சி செய்தும் குடிசைகள் மாறவில்லை” – சவுமியா அன்புமணி

விழுப்புரம்: விக்கிரவாண்டியில் பசுமை தாயக தலைவர் சவுமியா அன்புமணி , அவரது மகள் சங்கமித்ரா அன்புமணி ஆகியோர் பாமக வேட்பாளர் அன்புமணிக்கு ஆதரவு கேட்டு துண்டு பிரசுரம் வழங்கினர். அப்போது செய்தியாளர்களிடம் சவுமியா அன்புமணி கூறியது: “விக்கிரவாண்டி அதிக அளவு குடிசைகள் நிறைந்த பகுதியாக உள்ளது. இத்தனை ஆண்டு காலம் திராவிட கட்சிகள் ஆட்சி செய்தும் குடிசைகள், கட்டடங்களாக மாறவில்லை. தொகுதியில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் தொழிற்சாலை இல்லை. கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு செல்ல சரியான … Read more

“3-வது முறை ஆட்சியில் மும்மடங்கு வேகம் காட்டுவோம்!” – நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பதிலுரை

புதுடெல்லி: ஊழலுக்கு எதிரான கொள்கை காரணமாகத்தான் நாடு தங்களை மீண்டும் ஆசீர்வதித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். மேலும், “எங்களின் 3-வது முறை ஆட்சி என்பது 3 மடங்கு வேகத்தில் வேலை செய்வோம்” என்று அவர் உறுதியளித்தார். குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி ஆற்றிய பதிலுரை: “குடியரசுத் தலைவரின் உரைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது குடியரசுத் தலைவர் தனது உரையில் வளர்ந்த இந்தியாவின் தீர்மானத்தை … Read more

மீனவர்களையும் படகுகளையும் மீட்க கோரி தமிழக முதல்வர் கடிதம்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 25 மினவர்களையும் அவர்களது படகுகளை மீட்க கோரி மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார் . தமிழகத்தை சேர்ந்த 25 மீனவர்களையும் அவர்களது படகுகளையும் இலங்கை கடற்படை சிறபிடித்ததது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  தமிழகம் எங்கும் இலங்கை கடற்படையின் அக்கிரமத்துக்கு எதிராக கடும் கண்டனங்கல் எழுந்து வருகின்றன. இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மத்திய உள்த்றை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதிய கடித்தத்தில்,, “சமீப வாரங்களில் … Read more

Aiswarya rajini: ஜூன் மாதத்தின் அழகான தருணங்கள்..ஐஸ்வர்யா ரஜினி வெளியிட்ட பதிவு!

       சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினி தனுஷுடனான பிரிவிற்குப் பிறகு வீடியோ ஆல்பம் மற்றும் லால் சலாம் படம் என அடுத்தடுத்து இயக்கி முடித்துள்ளார். கடந்த பிப்ரவரியில் இவர் இயக்கத்தில் லால்ல் சலாம் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. கிரிக்கெட்டை மையமாக கொண்டு உருவாகியிருந்த இந்த

மடுமாதாவின் திருச்சொரூபத்திற்கு மணிமுடி சூடிய நூற்றாண்டு விழா : நினைவு தபால் முத்திரை வெளியீடு

மன்னார் மடுமாதாவின் திருச்சொரூபத்திற்கு மணிமுடி சூடிய நூற்றாண்டு விழாவையொட்டி நினைவு தபால் முத்திரை நேற்று (01.07.2024) வெளியீடு செய்யப்பட்டது. மடு அன்னையின் திரு உருவம் பொறிக்கப்பட்ட முத்திரை இவ்வாறு வெளியீடு செய்யப்பட்டது. மன்னார் மடு அன்னையின் ஆடி மாதம் திருவிழா இன்று (02) கொண்டாடப்படவுள்ள நிலையில் மடு அன்னை அரசியாக முடி சூட்டப் பட்டதன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மடு அன்னையின் திரு உருவம் பொறிக்கப்பட்ட முத்திரை மடு திருத்தலத்தில் வைத்து வௌியிட்டு வைக்கப்பட்டுள்ளது. மடு திருத்தலத்தின் … Read more

சிபிஎஸ்இ, ஐசிஎஸ் பள்ளிகள் ‘கட்டாயக் கல்வி சட்ட இடஒதுக்கீடு’ வரையறைக்குள் வராது: தமிழக அரசு @ ஐகோர்ட்

சென்னை: சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ் பாடத்திட்ட பள்ளிகள் கட்டாயக்கல்வி சட்ட இடஒதுக்கீடு வரையறைக்குள் வராது என்பதால் 25 சதவீத ஒதுக்கீடு வழங்கும்படி கோர முடியாது என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் போது பள்ளியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வசிக்கவில்லை எனக்கூறி பள்ளி நிர்வாகங்கள் விண்ணப்பங்களை … Read more

அன்று காவலர், இன்று ஆன்மிக குரு… – பக்தர்களைக் குவித்த ‘போலே பாபா’ யார்? | உ.பி நெரிசல் சம்பவம்

புதுடெல்லி: உத்தரப் பிரதேசம் ஹாத்தரஸின் நெரிசல் சம்பவத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது. இந்தக் கூட்டத்துக்கு காரணமான ‘போலே பாபா’ என்று அழைக்கப்படும் ஆன்மிக குரு, 18 வருடங்களுக்கு முன் உத்தரப் பிரதேச காவல் துறையின் கான்ஸ்டபிளாக இருந்துள்ளார். லட்சக்கணக்கான பக்தர்களைக் கொண்ட இவரது பின்னணி இது… உத்தரப் பிரதேசத்தின் மேற்கு பகுதியிலுள்ள காஸ்கன்சின் பட்டியாலி கிராமத்தை சேர்ந்தவர் சூரஜ் பால். காவல் துறையில் சாதாரணக் கான்ஸ்டபிளாக இருந்தவருக்கு ஆன்மிகப் பிரச்சாரம் செய்வதில் அதிக ஆர்வம் … Read more

இன்று தமிழில் 100 சட்டப்புத்தகங்களை வெளியிட்ட முதல்வர் .

சென்னை இன்று தமிழ் மொழியில் 100 சட்டப்புத்தகங்களை முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். தமிழக அரசு கலைஞர் நூற்றாண்டு விழா நிறைவை முன்னிட்டு, தமிழ்நாடு மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையத்தால் 100 சட்டங்களை புத்தக வடிவில் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 37 மத்திய சட்டங்கள் மற்றும் 63 தமிழ்நாடு சட்டங்களில், 43 மறுமதிப்பு செய்யப்பட்ட சட்டங்கள், 20 புதிய பதிப்பு செய்யப்பட்ட சட்டங்கள் என மொத்தம் 100 சட்டப் புத்தகங்கள் பதிப்பிக்கப்பட்டன. இன்று … Read more

உனக்கும் ஒரு நாள் இதே நிலைமை வரும்.. பெண் போட்டியாளர்களுக்கு இடையே வெடித்த மோதல்.. என்ன ஆச்சு?

MTV Splitsvilla X5: ExSqueeze Me Please-ன் லேட்டஸ்ட் எபிசோடில், அக்ரிதியின் திடீர் துரோகத்தால் அனிக்காவின் மனவேதனை வில்லா முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. “நான் இப்போ எப்படி கஷ்டப்படுகிறேனோ அதே கஷ்டத்தை கூடிய சீக்கிரமே நீ அனுபவிப்பாய்” என சாபம் விடாத குறையாக அனிக்கா சிவெட்டை தன்னிடம் இருந்து பிரித்த அக்ரிதியை பார்த்து பொங்கிவிட்டார். இப்படி

கொழும்பிலிருந்து கண்டி வரை செல்லும் புகையிரதத்தின் சாரதியின் கவனயீனம் தொடர்பாக முறையான விசாரணை

கொழும்பிலிருந்து கண்டி வரை செல்லும் 1019 புகையிரதத்தில் புகையிரத சாரதியின் கவனயீனத்தால் தற்போது அவரின் வேலை தடைசெய்து, திணைக்கள மட்டத்தில் முறையான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத சேவை அறிவித்துள்ளது. இப் புகையிரதத்தின் சாரதி சுதுகும்பொல பிரதேசத்தில் புகையிரதத்தை நிறுத்தி அதிலிருந்து இறங்கியுள்ளார். அதன்போது பயணிகள் அவரை கயிறொன்றினால் கட்டி மீண்டும் புகையிரதத்தில் ஏற்றியதன் பின்னர் புகையிரதம் கண்டி நோக்கிச் செல்வதற்குப் புகையிரத உதவி சாரதியினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு புகையிரதம் கண்டியை சென்றடைந்தமை குறிப்பிடத்தக்கது.