போலி சாமியார் சொன்னதை நம்பி பரிகாரம் செய்ய காட்டிற்குள் தனியாய் செல்லும் தீபா!

Karthigai Deepam Today’s Episode Update: நடு காட்டுக்குள் நடக்க போகும் பரிகாரம்.‌.மோசமடையும் அபிராமியின் உடல்நிலை – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் 

மக்களவையில் நாளை நீட் முறைகேடு குறித்து விவாதம் நடத்த கோரும் ராகுல் காந்தி

டெல்ல் மக்களவையில்நீட் முறைகேடு குறித்து நாளை விவாதம் நடத்த வேண்டும் என ராகுல் காந்தி மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.   இன்று பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், “நீட் தேர்வு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி இந்தக் கடிதம் எழுதுகிறேன். ஜூன் 28ம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த விவகாரத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியும். இந்த … Read more

Varalaxmi -Nicholai marriage:வரலட்சுமி -நிக்கோலய் திருமணத்தில் ராதிகா போட்ட ஆட்டம்.. என்னா எனர்ஜி!

       சென்னை: நடிகை வரலட்சுமி சரத்குமார் போடா போடி படம் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்து குறுகிய காலத்திலேயே ஏராளமான தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து முடித்துள்ளார். அவர் தனது நீண்ட கால நண்பரான நிக்கோலயை இன்றைய தினம் திருமணம் செய்துள்ளார். மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்வில் ஏராளமான பிரபலங்கள்

உழைக்கும் நாடாக மாற்றுவதற்கு ஒவ்வொரு அமைச்சிலும் குறிப்பிட்ட சில வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன…

உழைக்கும் நாடாக மாற்றுவதற்கு ஒவ்வொரு அமைச்சிலும் சில வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும், கடின உழைப்பே இதற்கான தீர்வாக அமையும் என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுசன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி; பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (02) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஒவ்வொரு நிறுவனத்திலும் பணி புரியக்கூடிய கலாசாரத்தை உருவாக்கும் வகையில், கடினமாக உழைக்க வேண்டும் என்றும், இளைஞர்களுக்கான இளைஞர் … Read more

Ayodhya: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானம் குறித்த ராகுலின் குற்றச்சாட்டு… யோகி ஆதித்யநாத் விளக்கம்!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக தன் முதல் உரையில், பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்களை கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி, “அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானத்துக்காக அப்புறப்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்ல” எனக் குற்றம்சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டை மறுத்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு, அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. ராகுல் காந்தி அதில், “காங்கிரஸ் ஒரு பொய் வலை. அயோத்தி மக்களுக்கு இழப்பீடாக ரூ.1,733 கோடி வழங்கப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை. ராமர் பாதை, பக்தி … Read more

“படிக்கச் சொல்கிறது பாமக… குடிக்கச் சொல்கிறது திமுக!” – விக்கிரவாண்டியில் ராமதாஸ் பிரச்சாரம்

விழுப்புரம்: “நாங்கள் படிக்கச் சொல்கிறோம். திமுக குடிக்கச் சொல்கிறது,” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசினார். விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட சிந்தாமணி கிராமத்தில் பாமக வேட்பாளர் சி. அன்புமணியை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் செவ்வாய்க்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியது: “நாங்க படிங்க, படிங்க என்கிறோம். அவங்க குடிங்க, குடிங்க என்கிறார்கள். அவர்கள் வாக்குக்கு கொடுக்கும் பணம். அதை வாங்கிக் கொண்டு மாம்பழம் சின்னத்துக்கு வாக்களியுங்கள். பெண்கள் … Read more

உத்தரப் பிரதேச ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 107 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் ஹாத்தரஸ் மாவட்டத்தில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 107 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் ஹாத்தரஸ் மாவட்டத்தின் சிக்கந்தராரா-வில் நாராயண் சாகர் விஷ்வ ஹரி போலே பாபா என்பவரின் பிரார்த்தனை கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 2) நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் பக்தர்கள் வெளியேறும்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 107 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது தெரிய வந்துள்ளது. சிக்கந்தராராவின் முகல்கடி எனும் … Read more

நினைத்தேன் வந்தாய்: மனோகரிக்கு வந்த மிரட்டல் போன்.. சுடரை கொல்ல துணிந்த ரவுடிகள்

Ninaithen Vandhai Today’s Episode Update: மனோகரிக்கு வந்த மிரட்டல் போன்.. சுடரை கொல்ல துணிந்த ரவுடிகள் – நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட் 

இறந்து போனவருக்கு பட்டா கொடுத்த அதிகாரி – கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் புகார்!

இறந்து போனவரின் வாரிசு பெயருக்கு பட்டா மாறுதல் கேட்டு விண்ணப்பித்தவருக்கு இறந்து போனவரின் பெயரில் பட்டா வழங்கிய அவலம்.   

நாடாளுமன்றத்தில் நாளை நீட் தேர்வு மோசடி குறித்து விவாதிக்க வேண்டும் பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்…

நீட் தேர்வு மோசடியை அடுத்து தேசிய தேர்வு முகமையின் இயக்குனரை மத்திய அரசு மாற்றியது, 24 லட்சம் மாணவர்களையும் அவர்களது குடும்பங்களையும் பாதித்த இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். நீட் கேள்வித் தாள் கசிந்தது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று ஜூன் 28ம் தேதி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. நீட் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்கு அரசுடன் கலந்து ஆலோசித்து நல்ல முடிவு கூறப்படும் என்று சபாநாயகர் … Read more