Rakul preeth: கமல்ஹாசனோட சாச்சி 420 படத்தை 50 முறை பார்த்திருக்கேன்.. அப்போ ரொம்ப சின்னப் பொண்ணு!

       மும்பை: நடிகர் கமல்ஹாசன், ரகுல் பிரீத் சிங், எஸ்ஜே சூர்யா, சித்தார்த் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள இந்தியன் 2 படம் வரும் 12ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ள நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன்கள் மிகப்பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. படத்தின் இசை வெளியீடு கடந்த மாதம் 1ம் தேதி சென்னையில்

இசிப்பத்தன கல்லூரியின் விளையாட்டு செயற்பாடுகளுக்காக ஹென்றி பெட்ரிஸ் விளையாட்டு மைதானத்தை ஒப்படைத்தல்

கொழும்பு மாநகர சபைக்குச் சொந்தமான ஹென்றி பெட்ரிஸ் ( Henry Pedris Ground ) விளையாட்டு மைதானத்தை இசிப்பத்தன கல்லூரிக்கு ஒப்படைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஹென்றி பெட்ரிஸ் விளையாட்டு மைதானத்தை இசிப்பத்தன கல்லூரிக்கு ஒப்படைப்பதன் மூலம் அதனை சரியான வகையில் மேம்படுத்திப் பேணிச் செல்வதுடன், அதன்மூலம் குறித்த கல்லூரி மற்றும் ஏனைய சுற்றியுள்ள பாடசாலைகளிலுள்ள மாணவர்கள் மற்றும் அப்பிரதேசத்திலுள்ள மக்கள் தமது விளையாட்டுக்களுக்குப் பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்கும் வாய்ப்புக் கிட்டுகின்றது. இது தொடர்பாக 01.07.2024 அன்று … Read more

சென்னை: சாலையில் பற்றியெரிந்த அரசு ஏ.சி பேருந்தால் பரபரப்பு… விளக்கமளித்த அரசு!

சென்னை பிராட்வேயிலிருந்து கேளம்பாக்கத்துக்கு இன்று காலை அரசு மாநகர ஏ.சி பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அடையாறு, எல்.பி சாலையில் அந்தப் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, பேருந்து திடீரென தீபற்றி எரிந்தது. உடனே பதறிப்போன ஓட்டுநர், நடத்துனர் ஆகிய இருவரும் பயணிகளை உடனடியாக பேருந்திலிருந்து வெளியேற்றி பெரும் அசம்பாவிதத்தைத் தவிர்த்தனர். அதையடுத்து தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர், துரிதமாகச் செயல்பட்டு தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். பேருந்து சாலையில் பற்றியெரிந்த வீடியோ, … Read more

“தமிழகத்தில் தேர்தல் தோல்வியால் பாஜகவினர் துவள வேண்டாம்” – நயினார் நாகேந்திரன்

திண்டுக்கல்: “தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் தோல்வியைக் கண்டு பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் துவண்டுவிட வேண்டாம். அடுத்து வர உள்ள உள்ளாட்சி தேர்தல், சட்டசபை தேர்தலில் மக்களின் மனங்களை கவர்ந்து முனைப்புடன் செயல்பட்டு வெற்றி இலக்கை அடைய வேண்டும்” என நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ பேசினார். திண்டுக்கல்லில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்களவை தொகுதி பாஜக நிர்வாகிகள் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் தனபாலன் தலைமை வகித்தார். திண்டுக்கல் மேற்கு … Read more

பாம்பன் ரயில்வே பணிகளை துரிதப்படுத்த ரயில்வே அமைச்சரிடம் நவாஸ்கனி எம்.பி கோரிக்கை

புதுடெல்லி: ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி, ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை டெல்லியில் சந்தித்தார். அப்போது, ராமநாதபுரம் தொகுதி தொடர்பான பல்வேறு ரயில்வே கோரிக்கைகளுக்காக மனு அளித்தார். ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் துணைத் தலைவரும், எம்பியுமான கே.நவாஸ்கனி அளித்த கடிதத்தின் விவரம்: பாம்பனில் புதிய ரயில்வே மேம்பாலம் பணிகள் நிறைவடையவில்லை. அது, இன்னும் திறக்கப்படாமல் இருப்பதினால் ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் மண்டபம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்படுகின்றன. இதனால், ராமேஸ்வரம் … Read more

கென்யாவில் வரி உயர்வுக்கு எதிரான மக்கள் போராட்டம்: 39 பேர் பலி, 360 பேர் காயம்

நைரோபி: ஆப்பிரிக்க நாடான கென்யாவில் புதிய வரி உயர்வை எதிர்த்து மக்கள் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டத்தை தடுக்கும் வகையில் அந்த நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தப் போராட்டத்தில் 39 பேர் இதுவரை உயிரிழந்தனர். மேலும், 360-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதனை கென்யாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உறுதி செய்துள்ளது. திங்கட்கிழமை நிலவரப்படி, மக்கள் போராட்டம் காரணமாக உயிரிழந்தவர்கள் குறித்து அரசு வெளியிட்ட எண்ணிக்கையை காட்டிலும் இரு மடங்கு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. … Read more

விடாமுயற்சி ஷூட்டிங் ஓவர்! அஜர்பைஜானில் இருந்து சென்னை திரும்பிய அஜித்..

Actor Ajith Kumar Returns To Chennai : அஜர்பைஜானில் நடைபெற்ற விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார். 

அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்!

சிதம்பரம் அருகே அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு மயக்கம் அடைந்ததால் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Suriya 44: அந்தமானில் அனல் பறக்கும் சண்டைக் காட்சி; ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் அறிவிப்பு எப்போது?

சூர்யாவின் பிறந்த நாள் இம்மாதம் வருகிறது. இதனையொட்டி அவரது ரசிகர்களுக்கு ஆச்சரியங்கள் காத்திருக்கன்றன. கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘சூர்யா 44’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகவிருக்கிறது. தவிர விக்ரமிற்கு ‘தங்கலான்’ மேக்கிங் வீடியோ வெளியானதை போன்று சூர்யாவிற்கு ‘கங்குவா’ மேக்கிங் வீடியோவும் வெளிவரக் காத்திருக்கிறது. சூர்யா – கார்த்திக் சுப்புராஜ் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தின் ஷூட்டிங், அந்தமானில் கடந்த ஜூன் மாதம் 2ம் தேதி முதல் … Read more

வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பிரேசிலில் 179 பேர் உயிரிழப்பு

ரியோ கிராண்டி டு கல் கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பிரேசிலில் 179 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த மே மாதம் முதல் பிரேசில் நாட்டில் பருவமழை மிகவும் கடுமையாக பெய்து  வருகிறது. அந்நாட்டின் தெற்கு மாகாணமான ரியோ கிராண்டி டு சுல் நகரில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் … Read more