கர்நாடகாவில் டெங்கு பரவல் நாளுக்கு நாள் அதிகரிப்பு

பெங்களூரு, கர்நாடகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க சுகாதார துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். எனினும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. கர்நாடகத்தில் 93 ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டது. அவர்களுக்கு சோதனை நடத்தப்பட்டதில் பெங்களூருவில் மட்டும் 310 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பதும், பெங்களூரு புறநகர் மாவட்டத்தில் 467 பேருக்கும் டெங்கு காய்ச்சல் உறுதியாகி உள்ளது. பெங்களூருவில் ஏற்கனவே 80 வயது மூதாட்டி உள்பட 2 … Read more

டி20 உலகக்கோப்பை: விராட், பும்ரா அல்ல..அவர்தான் வெற்றிக்கு காரணம் – கிரெக் சேப்பல்

சிட்னி, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் தோல்வியே சந்திக்காமல் வெற்றி நடை போட்ட இந்தியா இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றதுது. அதனால் 17 வருடங்கள் கழித்து இந்தியா டி20 உலகக்கோப்பையை வென்றது. இந்த வெற்றிக்கு தொடர் முழுவதும் அதிரடியாக விளையாட வேண்டும் என்ற எண்ணத்தை இந்திய அணியில் கொண்டு வந்து அதை செய்தும் காட்டிய ரோகித் சர்மா பலராலும் பாராட்டப்பட்டு வருகிறார். அதேபோல தொடர் முழுவதும் … Read more

பாகிஸ்தானில் தொடர் கனமழை: 8 பேர் பலி; 24 பேர் காயம்

பலூசிஸ்தான், பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதில், சிக்கி 8 பேர் பலியானார்கள். 24 பேர் காயம் அடைந்து உள்ளனர். 300-க்கும் மேற்பட்ட மண் வீடுகள் சேதமடைந்து உள்ளன. இதேபோன்று ஷெரானி மாவட்டத்தில் தனசார் மற்றும் தேரா இஸ்மாயில் கான் பகுதிகளுக்கு இடையே நில சரிவு ஏற்பட்டது. இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. குவெட்டா மற்றும் இஸ்லாமாபாத் நகரங்களை இணைக்கும் தேசிய … Read more

நாட்டின் பல பிரதேசங்களில்; பல தடவைகள் சிறிதளவு மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஜூலை 02ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஜூன் 02ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ … Read more

“மல்டி வைட்டமின் மாத்திரைகள் ஆயுளை நீட்டிக்காது" – ஆய்வு முடிவும் மருத்துவர் அறிவுரையும்..!

‘தினமும் மல்டி வைட்டமின் மாத்திரைகளை உட்கொள்வதால் எந்த பயனும் இல்லை’ என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில், வயதானவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் வாரத்திற்கு ஒரு முறை அல்லது அதற்கு மேல் மல்டி வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக் கொள்கின்றனர். ‘இந்த மாத்திரை நீண்ட நாள்கள் வாழ உதவும்’ என்று அவர்கள் நம்புவதுதான் இதற்கு முக்கியக் காரணம். மேலும், உலக அளவில் சந்தை மதிப்பிலும் மல்டி வைட்டமின் மாத்திரைகளின் விற்பனை வளர்ச்சி அடைந்து வருகிறது. பொதுநல மருத்துவர் … Read more

சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு முடிவுகள்: நாடு முழுவதும் 14,627 பட்டதாரிகள் தேர்ச்சி; தமிழகத்தில் 650 பேர் தேர்வு

சென்னை: சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வில் நாடு முழுவதும் 14,627 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நம்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட 24 விதமான உயர் பதவிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் குடிமைப் பணி தேர்வுகள் (சிவில் சர்வீஸ்) நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக முதல்நிலை, முதன்மை, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக தேர்வுகள் நடைபெறும். இதில் பட்டதாரிகள் பெறும் மதிப்பெண்களை வைத்து இறுதி முடிவுகள் வெளியிடப்படும். அதன்படி நடப்பாண்டு 1,056 பணியிடங்களை … Read more

அசாம் வெள்ளம்: 19 மாவட்டங்களில் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு – முதல்வர் வேதனை

குவஹாதி: பிரம்மபுத்திரா அதன் கிளை ஆறுகள் என 8 ஆறுகளில் வெள்ள நீர் அபாய அளவைத் தாண்டி பாய்வதால் அசாம் மாநிலத்தின் 19 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 6 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தவித்துவருவதாக அசாம் அரசு தெரிவித்துள்ளது. மாநிலத்தில் வெள்ள நிலவரம் மிகவும் மோசமடைந்து இருப்பதாக முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா வேதனை தெரிவித்துள்ளார். இருப்பினும் மத்திய அரசு உதவியுடன் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். காம்ரூப், கோலாகட், மஞ்ஜுலி, லக்கிம்பூர், கரீம்கஞ்ச், சச்சார், … Read more

மாநில கல்விக்கொள்கை அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது முன்னாள் நீதிபதி முருகேசன் குழு

சென்னை: தமிழ்நாடு அரசு அமைத்த  மாநிலக் கல்வி கொள்கை தயாரிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் த. முருகேசன் தலைமையில்  குழு தனது அறிக்கையை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. தமிழகத்திற்கென பிரத்யேக கல்வி கொள்கை உருவாக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022-ம் ஆண்டு அறிவித்தார். இதற்கென டெல்லி உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழு கல்வியாளர்கள், ஆசிரியர்கள்‌, மாணவர்கள் என பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனைகளை பெற்றது. இதனைத் … Read more

Kalki box office: வசூல் மழையில் கல்கி 2898 கிபி … ஐந்தாம் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை: இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான ‘கல்கி 2898 கிபி’ வசூலில் மாஸ் காட்டி வருகிறது. ஜூன் 27ந் தேதி வெளியான இத்திரைப்படம் நான்கு நாட்களில் ரூ.555 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்த நிலையில், ஐந்தாம் நாளான நேற்று படத்தின் வசூல் எவ்வளவு என்பதை பார்க்கலாம். நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள

சிறை கைதியான என்ஜினீயர் ரஷீத் எம்.பி.யாக பதவியேற்க என்.ஐ.ஏ. அனுமதி

ஜம்மு, ஜம்மு மற்றும் காஷ்மீரின் பாராமுல்லா மக்களவை தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அப்துல் ரஷீத் ஷேக். என்ஜினீயர் ரஷீத் என்றும் பரவலாக அறியப்படுகிறார். பயங்கரவாதத்திற்கு நிதி அளித்த குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்ட இவர், 2019-ம் ஆண்டு ஆகஸ்டு 9-ந்தேதி முதல் திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில் அவர், எம்.பி.யாக பதவியேற்க இடைக்கால ஜாமீன் அல்லது பரோல் வழங்க வேண்டும் என கோரி சிறப்பு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நேற்று … Read more