சோதனையின்போது திடீரென சீறிப் பாய்ந்து மலையில் மோதிய ராக்கெட்

பீஜிங்: ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்குடன் ஒப்பிடும் வகையில் சீனா தனது செயற்கைக்கோள் தொகுப்பை விண்ணில் நிறுத்துவதற்காக, மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டுகளை பயன்படுத்த உள்ளது. இந்த ராக்கெட்டுகளை உருவாக்கும் பணிகளில் பல தனியார் விண்வெளி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதில், ஸ்பேஸ் பயோனீர் என்ற நிறுவனம் மிகவும் சக்திவாய்ந்த தியான்லாங்-3 என்ற ராக்கெட்டை உருவாக்கி வருகிறது. இந்த ராக்கெட்டின் பல்வேறு நிலைகள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. அவ்வகையில், நேற்று ஹெனான் மாகாணத்தின் காங்யி கவுண்டியில் உள்ள ஏவுதளத்தில், தியான்லாங்-3 ராக்கெட்டின் … Read more

சென்னை: சிறுவன் உயிரிழப்புக்கு கழிவுநீர் கலந்த குடிநீர் காரணமா?! சந்தேகமும் விளக்கமும் | Spot Report

பிழைக்க வந்த பீகார் குடும்பம் பீகாரிலிருந்து பிழைப்பு தேடி சென்னைக்கு வந்த குடும்பத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ஒருவன், கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்ததில் உடல் நலக்குறைபாடு ஏற்பாடு பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளியானது. சிறுவன் உயிரிழந்த நிலையில், அவனின் சகோதரியும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். சிறுவனின் மரணத்துக்குக் குடிநீர் தான் காரணம் என்று சொல்லிவிட முடியாது என்று அரசு தரப்பு நழுவப்பார்க்கிறது. ஏற்கனவே சென்னையில் பல பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்து … Read more

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 விரைவு ரயில்களில் 2 நிமிடங்களில் முடிந்த டிக்கெட் முன்பதிவு

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக, ரயில் டிக்கெட் முன்பதிவு நேற்று காலை தொடங்கிய நிலையில், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு புறப்படும் விரைவுரயில்களில் டிக்கெட் முன்பதிவு சில நிமிடங்களிலேயே முடிந்தன. குறிப்பாக, பாண்டியன், நெல்லை, பொதிகை ஆகிய 3 ரயில்களில் 2 நிமிடங்களில் முன்பதிவு முடிந்து, காத்திருப்போர் பட்டியலை காட்டியது. நிகழாண்டில் தீபாவளி பண்டிகை அக். 31-ம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. ரயில் டிக்கெட் முன்பதிவை பொருத்தவரை 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு … Read more

ஆந்திராவில் முதியோர் மாத உதவித் தொகை: ரூ.4,000 வழங்கிய சந்திரபாபு

மங்களகிரி: ஆந்திர முதல்வர் சந்திரபாபு தேர்தலுக்கு முன் அளித்த வாக்குறுதியின்படி முதியோர் ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரமாக உயர்த்தியுள்ளார். மேலும் விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர், கள் இறக்கும் தொழிலாளர்கள், மீனவர்கள், நலிந்த நெசவுத் தொழிலாளர்கள், திருநங்கைகள், எச்ஐவி நோயாளிகளுக்கு மாதம் ரூ.4000 உதவி பணம் வழங்கும் திட்டத்தை நேற்று தொடங்கி வைத்தார். மாற்று திறனாளிகளுக்கு கடந்த அரசு வழங்கி வந்த மாத உதவித் தொகை ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.6 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. தீவிர நோயாளிகள், … Read more

இன்று முதல் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

ராமேஸ்வரம் இன்று முதல் மீன்வர்கள் தங்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்குகின்றனர். ராமேஸ்வரம்,  பாம்பன், தங்கச்சிமடம், தொண்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற நிலையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் 25 மீனவர்களை கைது செய்து அவர்களது 4 நாட்டுப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். இலங்கை கடற்படையை கண்டித்தும், கைதான மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக்கோரியும், பாம்பன் வடக்கு கடல் பகுதியில் … Read more

Dushara Vijayan: வேட்டையன் படத்துல வெயிட்டான ரோல்தான்.. ரஜினியோட எனர்ஜி இருக்கே.. துஷாரா விஜயன் ஓபன்!

சென்னை: நடிகை துஷாரா விஜயனுக்கு தமிழில் மிகப் பெரிய அறிமுகத்தை கொடுத்த படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தை தொடர்ந்து பா ரஞ்சித் இயக்கத்திலேயே நட்சத்திரம் நகர்கிறது என்ற அடுத்த படத்தில் நடித்திருந்தார். இந்த படங்களை தொடர்ந்து தற்போது தனுசுடன் ராயன், ரஜினிகாந்துடன் வேட்டையன் மற்றும் விக்ரமுடன் வீர தீர சூரன் என அடுத்தடுத்த படங்களில் கமிட்

வங்கிக்குள் துப்பாக்கிகளுடன் புகுந்து ரூ.25 லட்சம் கொள்ளை.. அதிர்ச்சி சம்பவம்

பாட்னா, பீகாரில் பட்டப்பகலில் வங்கிக்குள் ஆயுதங்களுடன் புகுந்து ரூ.25 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடிவருகிறார்கள். இந்த துணிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- பீகார் மாநிலம் ஷேக்புரா மாவட்டம் பார்பிகா போலீஸ் நிலைய சரகத்துக்கு உட்பட்ட பார்பிகா-ஹதியா சவுக் பகுதியில் ஆக்சிஸ் வங்கி கிளை செயல்படுகிறது. நேற்று காலை வழக்கம்போல் வங்கி திறக்கப்பட்டு, செயல்பட்டுக்கொண்டு இருந்தது. நேற்று மாதத்தின் முதல் தேதி என்பதால், வங்கியில் ஏராளமானோர் பணம் செலுத்துவதற்கும், எடுப்பதற்கும் வந்திருந்தனர். அப்போது … Read more

இந்த வார ராசிபலன்: ஜூலை 2 முதல் 7 வரை #VikatanPhotoCards

வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் முருகன் மகரம் கும்பம் மீனம் Source link

இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூத்த தலைவர் இரா.சம்பந்தன் மறைவுக்கு பிரதமர், முதல்வர் இரங்கல்

ராமேசுவரம்: இலங்கை தமிழ் தேசிய கூட்ட மைப்பின் மூத்த தலைவரான இரா.சம்பந்தன் கொழும்புவில் காலமானார். அவருக்கு வயது 91. இலங்கை திரிகோணமலையில் கடந்த 1933-ல் பிறந்த இரா.சம்பந்தன், யாழ்ப்பாணத்தில் சம்பத்தரிசியார் பள்ளி, மொரட்டுவை புனித செபஸ்தியான் பள்ளியில் கல்வி பயின்ற பிறகு, இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார். லீலாதேவி என்பவரை திருமணம் செய்த அவருக்கு சஞ்சீவன், செந்தூரன், கிரிசாந்தினி என 3 பிள்ளைகள் உள்ளனர். 1956-ம் ஆண்டு இலங்கை தமிழ்அரசுக் கட்சியில் இரா.சம்பந்தன் … Read more

உலகின் மிக சக்திவாய்ந்த வெடிகுண்டு தயாரிப்பு: இந்தியா புதிய சாதனை

புதுடெல்லி: உலகின் மிக சக்திவாய்ந்த புதியவெடிகுண்டை இந்தியா தயாரித்திருக்கிறது. இது டிஎன்டி வெடிகுண்டை விட 2.01 மடங்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும். முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின்போது நாசகார வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. தற்போது உலக நாடுகளின் ராணுவங்களில் டிஎன்டி, ஆர்டிஎக்ஸ், டைனமைட் உள்ளிட்ட வகைகளை சேர்ந்த வெடிகுண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த சூழலில் மகாராஷ்டிராவின் நாக்பூரை சேர்ந்த ‘எகானமிக் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் லிமிடெட்’ பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து செபெக்ஸ் 2 என்ற புதிய வெடிகுண்டை தயாரித்து உள்ளது. … Read more