பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக சிங்கப்பூரில் போராடிய கேரள பெண்ணுக்கு சொந்த ஊர் செல்ல ஜாமீன்

சிங்கப்பூர்: கேரளாவைச் சேர்ந்தவர் அண்ணாமலை கோகிலா பார்வதி (35). இவர் சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். இவர் அண்மையில் சிங்கப்பூர் நகரின் இஸ்தானா என்ற பகுதியில் வேறு 2 பெண்களுடன் சேர்ந்து கொண்டு பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக குரல் எழுப்பி போராட்டம் நடத்தியுள்ளார். இந்த ஊர்வலத்தில் 70-க்கும்மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர். போலீஸாரின் முன் அனுமதி பெறாமல் இந்த போராட்டத்தை அவர் நடத்தியுள்ளார். முன் அனுமதியின்றி சிங்கப்பூரில் போராட்டம் நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். … Read more

Indian : கமலுக்கு வந்த சோதனை.. இந்தியன் படத்தில் சிக்கல்! நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்த நடிகை!

சென்னை: தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் என்றால் அது உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 படம்தான். லைகா புரெடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தினை ஷங்கர் இயக்கியுள்ளார். இந்த படம் வரும் ஜூலை 12ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படம் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின்

“இந்துக்களை வன்முறையாளர்கள் என்ற ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்” – அண்ணாமலை

சென்னை: “இந்துக்களை வன்முறையாளர்கள் என்று கூறிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனத்துடன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “எப்போதும்போல, தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி தனது உண்மையான நிலை என்னவென்பதை அம்பலப்படுத்தி வருகிறது. கடந்த வாரம் செங்கோல் என்றால், இன்று சிறுபான்மையினரை திருப்திபடுத்தும் வழிகளை இண்டியா கூட்டணி கையாண்டுள்ளது. இன்று மக்களவையில் இந்துக்களை வன்முறையாளர்கள் என்று கூறியதற்கு ராகுல் காந்தி … Read more

அம்மாவின் பெயரில் மரக்கன்று நடுங்கள்: ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அழைப்பு

புதுடெல்லி: நாட்டு மக்கள் அனைவரும் தங்களது அம்மா பெயரில் ஒரு மரக்கன்றை கட்டாயம் நடவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 2014 மே மாதம் முதல்முறையாக பிரதமராக பதவியேற்ற மோடி, அதே ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி அகில இந்திய வானொலி, தூர்தர்ஷனில் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் உரையாற்றினார். அதுமுதல் ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிறும் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். மக்களவை தேர்தல் காரணமாக. சில … Read more

மணக்கோலத்தில் சுடர்.. கனவில் வந்தது யார்? நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், எழில் , மனோகரியின் திருமணத்தை நிறுத்த சுடர், ராமையா இருவரும் பிளான் போடுகின்றனர். இதையடுத்து,சாமியாராக வேஷம் போட்ட, ராமையா மனோகரியை தலைக்கு மேல் கையை தூக்கிக்கொண்டு கும்பிடு போட்டு கொண்டு

கல்வராயன் மலை பழங்குடியினர் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு

சென்னை: கல்வராயன் மலை பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையிலும் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமீபத்தில் கள்ளச் சாராயம் குடித்து 65 பேர் பலியாகினர். கள்ளச் சாராயம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலைப்பகுதியில் காய்ச்சப்படுவதாக தகவல் வெளியான நிலையில், இந்தச் சம்பவம் குறித்து சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞரான தமிழ்மணி சில தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளித்து இருந்தார். அதில், கல்வராயன் மலைப்பகுதியில் வசிக்கும் … Read more

மும்பை சோகம்: 4 குழந்தைகள் உட்பட 5 பேர் அணையில் மூழ்கி உயிரிழப்பு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் லோனாவாலா பகுதியில் அமைந்துள்ள பூஷி அணைக்கு அருகில் அமைந்துள்ள நீர் நிலை ஒன்றில் ஒரு பெண் மற்றும் நான்கு குழந்தைகள் என ஐந்து பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை அன்று பகல் நேரத்தில் நடைபெற்றுள்ளது. இதில் புனேவைச் சேர்ந்த குடும்பத்தினர் உயிரிழந்துள்ளனர். இயற்கை எழில் கொஞ்சும் பூஷி அணைக்கு பார்வையாளர்கள் வருவது வழக்கம். அந்தப் பகுதியில் தற்போது மழை காலம் … Read more

தமிழகத்தில் புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து வழக்கறிஞர்கள் போராட்டம்

சென்னை தமிழகம் முழுவதும் புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி),  குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி), இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய சட்டங்களுக்கு மாற்றாக புதிய சட்டங்களை பிரதமர் மோடியின் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதாவது பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்),  பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் … Read more

வெறித்தனமான ட்ரெய்லர் விரைவில்.. தங்கலான் பற்றி சிலாகித்துப்போன ஜிவி பிரகாஷ்

சென்னை: நடிகர் விக்ரம் தற்போது தங்கலான் படத்தில் நடித்திருக்கிறார். பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் அந்தப் படம் முதலில் ஜனவரி மாதம் ரிலீஸாகவிருந்தது. ஆனால் சில காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போயிருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படம் விக்ரமுக்கு ஒரு மெகா ஹிட் படமாக அமையும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆகஸ்ட் 15ஆம் தேதி படம் ரிலீஸாகவிருக்கும் சூழலில்; தங்கலான் குறித்து

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும்: நீதிபதிகள் கருத்து

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றம் சாட்டப்பட்டுள்ள அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து எடுத்த வழக்கு பின்னர் முடித்து வைக்கப்பட்டது. இதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலரான வழக்கறிஞர் ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என். செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் … Read more