“நல்ல ஸ்டாண்ட்-அப் காமெடி” – ராகுல் காந்தியின் மக்களவை பேச்சு குறித்து கங்கனா கிண்டல்!

புதுடெல்லி: இந்து மதத்தை இழிவுபடுத்திய ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பாஜக எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரனாவத் வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மக்களவையில் ராகுல் காந்தி செய்தது ஒரு நல்ல ஸ்டாண்ட்-அப் காமெடி. காரணம் அவர் நமது எல்லா கடவுள்களையும் காங்கிரஸ் கட்சியின் விளம்பரத் தூதுவர்களாக ஆக்கிவிட்டார். சிவனின் உயர்த்தப்பட்ட கைகள், காங்கிரஸ் கட்சியின் ‘கை’ சின்னம் என்று சொல்கிறார். அல்லாஹ்வுக்காக உயர்த்தப்படும் கைகள் காங்கிரஸின் ‘கை’ என்று கூறுகிறார். … Read more

தமிழகத்தில் முக்கிய ஐ ஏ எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

சென்னை இன்று தமிழக அரசு முக்கிஅ ஐ ஏ எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்துள்ளது. இன்று அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழக அரசின் மருத்துவத் துறை செயலாளராக இருந்த ககன் தீப் சிங் ஊரக வளர்ச்சித் துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வனத்துறை செயலாளராக இருந்த சுப்ரியா சாகு மருத்துவத் துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் உயர்கல்வித் துறைக்கு மாற்றம் … Read more

Dhanush: எல்லாத்துக்கும் அவருதான் காரணம்.. தனுஷை நோக்கி கையை நீட்டிய நடிகை.. அதுதான் விஷயமா?

சென்னை: மலையாள சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் நடிகை மஞ்சு வாரியர். சில காரணங்களால் சினிமாவில் இருந்து கொஞ்சகாலம் ஓய்வில் இருந்த மஞ்சு வாரியர் அதன் பின்னர் ஹவ் ஓல்ட் ஆர் யூ படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். அதன் பின்னர் அழுத்தம் திருத்தமான படங்களில் மட்டும் நடிக்க முடிவெடுத்து நடித்து வருகின்றார். இவருக்கு தமிழ்நாட்டிலும் ரசிகர்கள்

Rahul Gandhi: `என் சகோதரர் ஒருபோதும் இந்துக்களுக்கு எதிராகப் பேசமாட்டார்' – பிரியாங்கா காந்தி

பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றப் பிறகு, 18-வது நாடாளுமன்றக் கூட்டம் நடந்து வருகிறது. கூட்டத்தின் 6-வது நாளான இன்று, `ஜெய் சம்விதான் (அரசியலமைப்புச் சட்டம்)’ எனக் கூறி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சிவன், குருநானக், இயேசு கிறிஸ்து ஆகியோரின் உருவப்படங்களை காட்சிப்படுத்தி, “நம்முடைய முன்னோர்கள் அனைவரும் அகிம்சையை வலியுறுத்தி, இந்து, முஸ்லிம், சீக்கியர் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் அகிம்சையால் பயத்தைப் போக்கியிருக்கிறார்கள். ராகுல் காந்தி ஆனால் தற்போது தங்களை … Read more

புதிய குற்றவியல் சட்டத்தில் சென்னையில் முதல் வழக்குப் பதிவு: தமிழகம் முழுவதும் 100 வழக்கு

சென்னை: புதிய குற்றவியல் சட்டங்கள் தமிழகத்திலும் இன்று அமலுக்கு வந்தது. தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் முதல் வழக்குப் பதியப்பட்டுள்ளது. அதாவது அப்தாப் அலி என்பவரிடமிருந்து, இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் செல்போனை பறித்து தப்பியதாக ஆயிரம் விளக்குப் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புதிதாக இன்று அமலுக்கு வந்துள்ள சட்டப்பிரிவு 304(2) என்ற பிரிவின் கீழ் இந்த வழக்கை போலீஸார் பதிவு செய்துள்ளனர். இதேபோல் சென்னை நந்தம்பாக்கம், மடிப்பாக்கம், துரைப்பாக்கம், கோட்டூர்புரம் … Read more

சாலையோர வியாபாரி மீது முதல் வழக்கா? – காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு ரயில்வே அமைச்சகம் பதிலடி

புதுடெல்லி: புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ டெல்லியில் சாலையோர வியாபாரி மீது முதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டிய நிலையில், ரயில்வே அமைச்சகம் அதனை மறுத்துள்ளது. இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக் ஷா 2023 மற்றும் பாரதிய சாக் ஷியா 2023 ஆகிய 3 சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இவை … Read more

தமிழக முதல்வர் தொடங்கி வைத்த 5 அதிநவீன சொகுசு பேருந்து சேவை

சென்னை இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலி 5 அதிநவீன சொகுசு பேருந்து சேவையை தொடங்கி வைத்துள்ளார். இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”ஏராளமான உள்ளூர் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துதல், அன்னியச் செலாவணியினை ஈட்டுதல் ஆகியவற்றில் சுற்றுலாத்துறை முக்கிய பங்காற்றுகிறது. இந்தியாவில் சிறப்பான சுற்றுலாத்தலங்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகம் முக்கிய இடத்தில் உள்ளது. தமிழகத்தில் நாட்டில் பல்வகையான சுற்றுலா தலங்கள், பழம்பெரும் திருக்கோவில்கள், இயற்கை எழில் கொஞ்சும் மலை மற்றும் வனப்பகுதிகள், அழகிய கடற்கரைகள் … Read more

Vengal Rao: பணம் கொடுத்தவங்களுக்கு நன்றி.. வெங்கல் ராவ் நெகிழ்ச்சி வீடியோ!

சென்னை: ஸ்டண்ட் கலைஞராக தன்னுடைய பயணத்தை கோலிவுட்டில் துவங்கிய வெங்கல் ராவ் தொடர்ந்து வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் காமெடி கலாட்டா செய்தவர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தன்னுடைய உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும் தன்னுடைய ஒரு கை மற்றும் ஒரு கால் செயலிழந்து விட்டதாகவும் தன்னால் சரியாக பேச முடியவில்லை என்றும் வெங்கல் ராவ் வீடியோ ஒன்றை

ஸ்பீடு 400, ஸ்கிராம்பளர் 400X மாடல்களுக்கு ரூ.10,000 விலை தள்ளுபடியை அறிவித்த டிரையம்ப்

50க்கு மேற்பட்ட நாடுகளில் 50,000க்கு அதிகமான டிரையம்ப் ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்பளர் 400X பைக்குகளின் விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ள நிலையில், இதனை கொண்டாடும் வகையில் ரூ.10,000 வரை சிறப்பு தள்ளுபடியை ஜூலை 31,2024 வரை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 2023ல் விற்பனைக்கு வந்த பஜாஜ் மற்றும் டிரையம்ப் கூட்டணியில் உருவான முதல் ஸ்பீடு 400, ஸ்கிராம்பளர் 400X என இரு மாடல்களும் இந்தியா, இங்கிலாந்து, ஐரோப்பா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா உட்பட மலேசியா … Read more

இ.பெ.கூ இன் எரிபொருளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன

நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இ.பெ.கூ இன் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. புதிய விலை திருத்தத்திற்கு அமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீற்றறின் விலை 11 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதண் புதிய விலை 344 ரூபாவாகும். ஒக்டேன் 95 ரக பெட்ரோல் ஒரு லீற்றறின் விலை 41 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதண் புதிய விலை 379 ரூபாவாகும். மேலும், சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 22 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், … Read more