Views-க்காக செல்போன் டவரில் ஏறி சிக்கிக்கொண்ட யூடியூபர்; 5 மணி நேரம் போராடி மீட்ட போலீஸ்!

உத்திரப்பிரதேசத்தின் நொய்டா பகுதியைச் சேர்ந்தவர் நீலேஷ்வர் பாண்டே (22). இவர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது யூடியூப் பக்கத்தை 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனர்கள் பின் தொடர்கின்றனர். தனது சேனலில் அதிகமான சப்ஸ்கிரைபர்களை ஈர்க்கவும், பர்வையாளர்களை‌ அதிகரிக்கவும் விரும்பிய நீலேஷ்வர், நொய்டாவின் பழைய ஹைபத்பூர் பகுதியில் உள்ள 30 அடி உயர செல்போன் டவரில் ஏறி சாகச முயற்சியை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறார். காவல்துறை அதற்காக நேற்று தனது நண்பர் ஒருவரை அழைத்துக் கொண்டு, டவர் … Read more

“பாமக வென்றால் ஒரே மாதத்தில் 10.5% இடஒதுக்கீட்டுக்கு முதல்வர் உத்தரவிடுவார்” – அன்புமணி உறுதி

விழுப்புரம்: “பாமக வெற்றி பெற்றால் அடுத்த மாதமே 10.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும். மேலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் உத்தரவிடுவார். முதல்வருக்கு நம்மை கண்டு பயம் வரவேண்டும். இத்தேர்தலில் மனசாட்சியோடு நடந்து கொள்ளாதீர்கள். பணம் வாங்கிவிட்டோமே, என்று பிரித்து வாக்களிக்காதீர்கள். திமுகவுக்கு ஒரு வாக்குக்கூட விழக் கூடாது” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் சி அன்புமணியை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாணிமேடு … Read more

இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

சென்னை: இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எம்.பி.யுமான இரா.சம்பந்தன் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் (ஞாயிற்று கிழமை) நேற்று இரவு 11 மணியளவில் காலமானார். உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இலங்கையில் தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுத்த முதுபெரும் தலைவராகவும் இவர் திகழ்ந்து வந்தவர். இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராகவும் செயல்பட்டுள்ளார். கடந்த … Read more

Thalapathy 69 : தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி கன்ஃபார்ம் ‘இவர்தான்’! யார் தெரியுமா?

Latest News Thalapathy 69 : நடிகர் விஜய்யின் கடைசி படமான தளபதி 69-ல், அவருக்கு ஜோடி யார் என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.   

மக்களவையை 2 மணி நேரம் அலற விட்ட ராகுல் காந்தி

டெல்லி இன்றைய நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளால் மக்களவையே அலறி உள்ளது. இன்று மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ராகுல் காந்தி பங்கேற்று மத்திய அரசிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தார். அக்னிவீரர் திட்டம், பாஜகவின் வெறுப்பு அரசியல், அரசின் விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகள் மிரட்டப்படுவது என பல்வேறு விவகாரங்களை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் இன்று மக்களவையில் எழுப்பினார். மேலும் நீட் விவகாரம் குறித்து ராகுல் காந்தி … Read more

Garudan: ஜூலை 3ம் தேதி ஓடிடியில் வெளியாகும் கருடன்.. மிரட்டல் அனுபவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!

சென்னை: நடிகர் சூரி அடுத்தடுத்து நாயகனாக களம் இறங்கி வருகிறார். கடந்த ஆண்டில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்திருந்த விடுதலைப் படம் வெளியாகி அவருக்கு மிகப்பெரிய ஹீரோ இமேஜை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்நிலையில் கடந்து சில வாரங்களுக்கு முன்பு சூரியின் நடிப்பில் வெளியான கருடன் படமும் அவருக்கு மிகச் சிறப்பாக கை கொடுத்துள்ளது. இந்த படத்தில்

ராயல் என்ஃபீல்டு கொரில்லாவின் புதிய படங்கள் வெளியானது

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் கொரில்லா 450 மாடல் ஜூலை 17 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் சில உற்பத்தி நிலை படங்கள் முதன்முறையாக வெளியாகியுள்ளது. குறிப்பாக பைக்கின் டாப் வியூ மூலம் கிளஸ்ட்டர் மற்றும் நிறங்களும் தெரிய வந்துள்ளது. புதிய கொரில்லா பைக்கில் 452 செர்பா என்ஜின் ஆனது ஹிமாலயன் 450 பைக்கிலும் இடம்பெற்றிருக்கின்றது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 40hp மற்றும் 40 Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் இதில் 6 வேக கியர்பாக்ஸ் … Read more

முதலாம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது

2025ஆம் ஆண்டு தரம் 1இற்கு புதிய மாணவர்களை பாடசாலைகளுக்கு உள்வாங்குவதற்கான உரிய சுற்று நிருபம் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய ஜூன் மாதம் 30ஆம் திகதி முதல் அதற்கான விண்ணப்பங்களை உரிய பாடசாலைகளுக்கு ஒப்கடைக்க முடியும். மேலும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி ஜூலை மாதம் 31 ஆம் திகதி என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Mahua Moitra: `என்னை வெளியேற்றியதற்கு 63 MP-க்களை விலையாக கொடுத்திருக்கிறது பாஜக!' – மஹுவா மொய்த்ரா

2023 டிசம்பர் மாதம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி மஹுவா மொய்த்ரா, நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டார். அது தொடர்பான விசாரணை நடந்துகொண்டிருக்கும்போது நாடாளுமன்றத்திலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில்தான் மேற்கு வங்கத்தின் கிருஷ்ணா நகரில் மீண்டும் வேட்பாளராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜியால் அறிவிக்கப்பட்டார். அவையிலிருந்து வெளியேறும் பிரதமர் மோடி அதைத் தொடர்ந்து நடந்த தேர்தலிலும் வெற்றிப்பெற்று, மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறார். இந்த நிலையில், மஹுவா … Read more

கள்ளக்குறிச்சி பள்ளி கலவர வழக்கு: மாணவியின் தாயாரிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மர்மமாக உயிரிழந்த நிலையில், ஏற்பட்ட கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிறப்பு புலனாய்வுக் குழு இன்று (ஜூலை 1) மாணவியின் தாய் செல்வியிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தை அடுத்த கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த 2022 ஜூலை 13-ம் தேதி மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவி மர்ம மரணத்தைத் தொடர்ந்து, பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க … Read more