மோடி குறித்து கிண்டல், சபாநாயகர் மீது விமர்சனம்: மக்களவையில் ராகுல் காந்தியின் கவனம் ஈர்த்த கருத்துகள்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி முதல்முறையாக பேசினார். பாஜக இந்துக்கள் இல்லை எனக் கூறியதால் ராகுல் பேச்சுக்கு எதிர்ப்புகள் எழுந்தன. எனினும் அவையில் பல விஷயங்களை முன்வைத்தார். சிவன், குருநானக், ஜீசஸ் போன்ற கடவுள்கள் மற்றும் அபய் முத்திரை புகைப்படங்களை காண்பித்து பேசினார் ராகுல். தொடர்ந்து சில விஷயங்களில் பிரதமர் மோடி மற்றும் பாஜகவை கடுமையாக சாடும் வகையில் பேசினார். அவற்றின் தொகுப்பு:. பிரதமர் மோடி குறித்து கிண்டல்: “சத்தியமும், அகிம்சையும் மகாத்மா … Read more

பிரபுதேவா நடிக்கும் புதிய படம் ‘சிங்காநல்லூர் சிக்னல்’! படப்பிடிப்பு துவக்கம்..

Prabhu Deva Singanallur Signal Movie : முத்தமிழ் படைப்பகம் தயாரிப்பில், இயக்குநர் JM ராஜா இயக்கத்தில், பிரபுதேவா நடிக்கும் “சிங்காநல்லூர் சிக்னல்”.   

எதிர்கட்சியோடு சேர்ந்து பதவிகளை ராஜினாமா செய்த ஆளுகட்சி கவுன்சிலர்கள்!

காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த மகாலட்சிமி உள்ள நிலையில் அவர் மீது புகார்களை தெரிவித்து ஆளும் திமுக உட்பட அதிமுக, பாமக, பாஜகவை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் பலர் தொடர்ந்து மேயரை மாற்றிட கோரி போர் கொடி தூக்கியுள்ளனர்.

மெட்ரோ ரயிலில் ஜூன் மாதம் 84.33 லட்சம் பேர் பயணம்

சென்னை கடந்த ஜூன் மாதம் மெட்ரோ ரயிலில் 84.33 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இன்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரெயில்களில் 84,33,837 பயணிகள் பயணம் செய்துள்ளனர். 01.01.2024 முதல் 31.01.2024 வரை மொத்தம் 84,63,384 … Read more

Mammootty: மம்மூட்டி எடுத்த இந்திய புல்புல் பறவை புகைப்படம்.. அட இவ்வளவு விலைக்கு ஏலம் போயிருக்கா?

கொச்சி: நடிகர் மம்மூட்டி மலையாளத்தில் மிகப்பெரிய சூப்பர் ஹிட் ஹீரோவாக கடந்த பல ஆண்டுகளை கடந்து வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருடைய மகன் துல்கர் சல்மானும் மிகப்பெரிய ஹீரோவாக மாறியுள்ள நிலையில் தொடர்ந்து ஹீரோவாகவே தன்னை  நிலைநிறுத்தி வருகிறார் மம்மூட்டி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மம்மூட்டி நடிப்பில் வெளியான பிரம்மயுகம் படம் விமர்சனரீதியாகவும் வசூல்ரீதியாகவும்

இன்று நள்ளிரவு முதல் பஸ் கட்டணம்  5.07% வீதத்தால் குறைக்கப்படும்

இன்று நள்ளிரவு முதல் பஸ் கட்டணம்  5.07% வீதத்தால் குறைக்கப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஷசி வெல்கம தெரிவித்தார்.   இன்று (01) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின் போது இவ்வாறு குறிப்பிட்டார்.   அதன்படி வருடாந்த பஸ் கட்டண திருத்தத்திற்கு இணங்க  2024.07.01 நள்ளிரவில் இருந்து பயணத்தில் ஈடுபடும் அனைத்து பஸ் சேவைகளினதும் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.  நாளை முதல் (02) இலங்கை போக்குவரத்து சபையினால் செலுத்தப்படும் பஸ்கள் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால்/ மாகாண … Read more

மணிப்பூர் `டு' சென்னை போதைப்பொருள் கடத்தல் – புழல் சிறையிலிருந்து மனைவி மூலம் ஆப்ரேட் செய்த கணவன்!

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் காசிலிங்கம். இலங்கை தமிழரான இவர், போதைப்பொருளைக் கடத்திய குற்றத்துக்காக கடந்த 2021-ம் ஆண்டு மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். காசிலிங்கத்தின் மனைவி கிருஷ்ணகுமாரி. காசிலிங்கம், புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும் சிறையிலிருந்தபடியே மனைவியிடம் வீடியோ காலில் அடிக்கடி பேசி வந்தார். அப்போது சில ரகசிய வார்த்தைகளை காசிலிங்கம் பயன்படுத்தியிருக்கிறார். அதுதொடர்பான தகவல் சென்னை மண்டல மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்தது. அதனால் … Read more

மத மோதல்களை உருவாக்குவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை: உயர் நீதிமன்றம் கருத்து

மதுரை: மத மோதல்களை உருவாக்குவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த அகமத் பயாஸ் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ‘ராமநாதபுரம் மாவட்டம் நம்புதலையைச் சேர்ந்த குருஜி. இவர் பாஜக மாநில பொறுப்பில் இருக்கிறார். தொண்டி பகுதியில் இந்து, இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள் சகோதரர்களாக பழகி வரும் சூழலில் அவர்களுக்கிடையே பிரச்சனையை ஏற்படுத்தும் விதமாக குருஜி முகநூல் பதிவுகளை வெளியிட்டு வருகிறார். … Read more

அமலுக்கு வந்த 3 புதிய குற்றவியல் சட்டங்கள்: முக்கிய மாற்றங்கள் என்னென்ன? | HTT Explainer

இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக்‌ஷா 2023 மற்றும் பாரதிய சாக் ஷியா 2023 ஆகிய 3 சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இவை இன்று (ஜூலை 1) முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளன. 1. பாரதிய நியாய சன்ஹிதா, 2023: இந்திய தண்டனைச் சட்டம் 1860-க்கு மாற்றான இந்தப் புதிய … Read more

“இஸ்ரேல் சிறைகளில் பாலஸ்தீன கைதிகள் இரவு, பகலாக சித்ரவதை” – மருத்துவர் தகவல்

டெல் அவில்: பாலஸ்தீன கைதிகள் இஸ்ரேல் சிறைகளில் இரவு, பகல் பாராது சித்திரவதை செய்யப்படுகிறார்கள் என்று அல்-ஷிஃபா மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் முஹம்மது அபு சல்மியா தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் 7 முதல் காசா மீதான இஸ்ரேலின் போரில் 37,900 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 80,060 பேர் காயமடைந்துள்ளனர். ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களால் இஸ்ரேலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,139 என மதிப்பிடப்பட்டுள்ளதுடன் பல மக்கள் காசாவில் இன்னும் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பாலஸ்தீன கைதிகள் இஸ்ரேலின் சிறைகளில் … Read more