இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எம்.பி.யுமான இரா.சம்பந்தன் காலமானார்

கொழும்பு, இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக செயல்பட்டவர் இரா. சம்பந்தன் (வயது 91). இவர் இலங்கை அரசில் எம்.பி.யாக செயல்பட்டுள்ளார். இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண பல்வேறு முயற்சிகளை இரா. சம்பந்தன் மேற்கொண்டார். இதனிடையே, வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக இரா. சம்பந்தன் கொழும்புவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இரா. சம்பந்தன் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். இரா. சம்பந்தன் … Read more

இரட்டை சிலிண்டர் சிஎன்ஜி நுட்பத்தை கொண்டு வரும் ஹூண்டாய்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ட்வீன் சிலிண்டர் நுட்பத்தை கொண்ட சிஎன்ஜி மாடலை போலவே, இரட்டை சிலிண்டர் கொண்டதாக இயங்கும் நுட்பத்திற்கு ‘Hy-CNG Duo’ என்ற பெயரில் காப்புரிமை பெற்றுள்ளதால் அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வெளிவரக்கூடும். ஹூண்டாய் ‘Hy-CNG Duo’ இந்தியாவில் மாருதி சுசூகி, டாடா மற்றும் ஹூண்டாய் என மூன்று நிறுவனங்களும் சிஎன்ஜி எரிபொருளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் நிலையில், சிஎன்ஜி கார்களில் மிகப்பெரிய குறைபாடாக கருதப்படுவது பின்புறத்தில் சிஎன்ஜி கலனை கொடுப்பதனால் பூட்ஸ்பேஸ் குறைந்து … Read more

முதலாம் மரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது

2025ஆம் ஆண்டு தரம் 1இற்கு புதிய மாணவர்களை பாடசாலைகளுக்கு உள்வாங்குவதற்கான உரிய சுற்று நிருபம் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய ஜூன் மாதம் 30ஆம் திகதி முதல் அதற்கான விண்ணப்பங்களை உரிய பாடசாலைகளுக்கு ஒப்கடைக்க முடியும். மேலும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி ஜூலை மாதம் 31 ஆம் திகதி என்றும்; கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

T20 World Cup 2024: புதிய சிக்கல்; நாடு திரும்ப முடியாத இந்திய வீரர்கள்; காரணம் என்ன?

உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்கள் நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. நடந்து முடிந்த 9வது டி20 உலகக்கோப்பை தொடரை ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா அணி வென்றிருக்கிறது. தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியிருக்கிறது. இந்தத் தொடரின் சூப்பர் 8 சுற்று தொடங்கி, அரையிறுதி, இறுதிப் போட்டி வரை மேற்கிந்தியத் தீவுகளில்தான் நடைபெற்றது. தற்போது அங்குத் தங்கியிருக்கும் இந்திய வீரர்கள் நாடு திரும்புவது தாமதமாகி உள்ளது. இந்திய அணி … Read more

இரா.சம்பந்தன் மறைவு: முதல்வர் ஸ்டாலின், ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

சென்னை: இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எம்.பி.யுமான இரா.சம்பந்தன் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின்: இலங்கைத் தமிழர்களின் முதுபெரும் அரசியல் தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மறைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். தமிழர்கள் மட்டுமல்லாது இலங்கை மக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் மரியாதையைப் பெற்ற அரும்பெரும் தலைவராகத் … Read more

நீட் முறைகேடு குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் போராட்டம்

புதுடெல்லி: நீட் முறைகேடு குறித்தும், மத்திய ஏஜென்சிகள் கட்டுப்பாடுகள் குறித்தும் மக்களவையில் விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்ட சபாநாயகர் முடிவை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எம்பிக்கள் போராட்டம் நடத்தினர் 18-வது மக்களவை கூட்டத்தொடர் இரண்டு நாட்கள் விடுமுறையைத் தொடர்ந்து இன்று (ஜூலை 1) கூடியது. அப்போது உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு அவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் … Read more

சென்னைஸ் அமிர்தா குழுமத்தின் பிராண்ட் அம்பாசிடரானார் நடிகை ஸ்ரீலீலா

நடிகை ஸ்ரீலீலாவை சென்னைஸ் அமிர்தா குழும தலைவர் பூமிநாதன் பிராண்ட் அம்பாசிடராக அறிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பு

தேமுதிக சார்பாக கழகத்தில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கோயம்புத்தூருக்கு வந்திருந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பு

தொடர்ந்து 107 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 107 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. சென்னையில் தொடர்ந்து 107 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல், விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் ரூ.92.34-க்கும் … Read more

Ajith vs Vijay: விஜய் ரசிகர்களை வம்புக்கு இழுக்கும் அஜித் ரசிகர்கள்.. மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்!

சென்னை: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக உள்ள நடிகர்கள் என எடுத்துக் கொண்டால் அதில் விஜய் மற்றும் அஜித் பெயர் கட்டாயம் இருக்கும். இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் தங்களது சினிமா வாழ்க்கையைத் தொடங்கியவர்கள். ஒரு காலத்தில் இருவருமே தீபாவளி, பொங்கல் என படங்களை ஒருவருக்கு எதிராக மற்றொருவர் படங்களை ரிலீஸ் செய்து வந்தனர். இதுமட்டும்