தமிழர்களுக்காக குரல் கொடுத்து வந்த.. இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் இரா.சம்பந்தன் காலமானார்

கொழும்பு: நமது அண்டை நாடான இலங்கையில் பல லட்சம் தமிழர்கள் வாழ்ந்து வருவது அனைவருக்கும் தெரியும். அவர்களின் உரிமைகள் மறுக்கப்படும் நிலையில், அதற்காகத் தொடர்ந்து போராடி வந்தவர் இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் இரா.சம்பந்தன் இன்று காலமானர். அண்டை நாடான இலங்கையில் பல லட்சம் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் உரிமைகள் பல காலமாகத் தொடர்ந்து Source Link

Prabhas: ரூ. 500 கோடிகளை அசால்ட்டாக அள்ளும் பிரபாஸ்.. பாக்ஸ் ஆஃபீஸில் கலக்கிய பிரபாஸ் படங்கள்!

சென்னை: இந்திய சினிமாவில் ஒரு படம் வெளியாகும்போதே அதனை சினிமாட்டிக் யுனிவர்ஸ் என டைட்டில் கார்டில் குறிப்பிடப்பட்டு வெளியான முதல் படம் கல்கி 2898 ஏ.டி படம்தான். இந்த படத்திற்கான அறிவிப்பு வந்ததில் இருந்தே படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு ஏற்றப்பட்டது. குறிப்பாக படத்தில் பாக்ஸ் ஆஃபீஸ் நாயகன் என பெயர் பெற்ற பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கின்றார்

இளம்பெண், இளைஞர் மீது கொடூர தாக்குதல் நடத்திய நபர்; வேடிக்கை பார்த்த மக்கள் – வீடியோ வைரல்

கொல்கத்தா, மேற்கு வங்காளத்தின் உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தின் சோப்ரா நகரில் சாலையின் நடுவே மக்கள் பலர் கூடியிருந்தபோது, இளைஞர் மற்றும் இளம்பெண் என இருவரை, நபர் ஒருவர் கம்புகளை திரட்டி வைத்து கொண்டு கடுமையாக அடித்து, தாக்கினார். ஆனால், அதனை தடுக்க ஒருவரும் முன்வரவில்லை. அந்த இளம்பெண், வலியால் அலறி துடித்தபோதும், பொதுமக்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தபடியே இருந்தனர். ஒரு சிலர், அந்நபரின் கையில் இருந்த குச்சிகளை வாங்கி, அவரை அடிக்க விடாமல் தடுக்க முயன்றனர். … Read more

நான் அதிகம் தவறவிடும் நபராக அவர் இருப்பார் – டிராவிட் உருக்கம்

புதுடெல்லி, வெஸ்ட் இண்டீசின் பிரிட்ஜ்டவுனில் நடந்த பரபரப்பான 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 7 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி 2-வது முறையாக கோப்பையை வென்றது. இந்த தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறுகையில்,’ வீரராக நான் செய்ய முடியாததை பயிற்சியாளராக பரிகாரம் தேடிக் கொண்டதாக … Read more

நைஜீரியா: குழந்தையை சுமந்தபடி தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்திய பெண்; 18 பேர் பலி

போர்னோ, நைஜீரியா நாட்டில் விடுமுறை நாளான ஞாயிறன்று, அடுத்தடுத்து 3 இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்து உள்ளன. இதில் சிக்கி பலர் பலியாகி உள்ளனர். அந்நாட்டின் வடகிழக்கே அமைந்த போர்னோ மாகாணத்தில் முதலில், திருமண நிகழ்ச்சியில் குண்டுவெடிப்பு நடந்தது. இதனை தொடர்ந்து, குவோஜா நகரில் உள்ள பொது மருத்துவமனையில் மற்றொரு குண்டுவெடிப்பு நடந்தது. இதன்பின்னர் இறுதி சடங்கு நிகழ்ச்சி ஒன்றில் குண்டுவெடிப்பு நடந்தது. அந்நாட்டின் போர்னோ மாகாண அவசரகால மேலாண் கழகத்தின் இயக்குநர் ஜெனரல் பர்கிந்தோ முகமது … Read more

Tamil News Live Today: நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள்..!

அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள்..! இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் மூன்று குற்றவியல் சட்டங்களுக்குப் பதிலாக, புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய பா.ஜ.க அரசு உருவாக்கியிருந்தது.. அந்த மூன்று சட்டங்களும் வரும் ஜூலை 1-ம் தேதி, அதாவது நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. 2019-ம் ஆண்டு, இரண்டாவது முறையாக மோடி தலைமையில் பா.ஜ.க அரசு அமைந்த பிறகு, இந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்தது.  குற்றவியல் சட்டங்கள் முன்னதாக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் … Read more

சளி, ரத்த அழுத்த பாதிப்புக்கான 52 மருந்துகள் தரமற்றவை

சென்னை: சளி, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கான 52 மருந்துகள் தரமற்று இருந்தது மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரிய ஆய்வில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகை மருந்து, மாத்திரைகளையும் மத்திய, மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றன. அதன்படி, கடந்த மே மாதத்தில் மட்டும் 1,000-க்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், சளி, ஜீரண மண்டல பாதிப்பு, கிருமி தொற்று, உயர் … Read more

ஒரே பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள் தரைப்படை, கடற்படை தளபதிகளாக நியமனம்

புதுடெல்லி: ஒரே பள்ளியில் ஒன்றாக படித்தஇருவர் தரைப்படை மற்றும் கடற்படைத் தளபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய ராணுவ வரலாற்றில், ஒரே பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள் தளபதிகளாக நியமிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும். லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி இந்திய தரைப் படைத் தளபதியாகவும், அட்மிரல் தினேஷ் திரிபாதி இந்திய கடற்படைத் தளபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். உபேந்திர திவேதியும், தினேஷ் திரிபாதியும் 1970-ம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் உள்ள ரிவா சைனிக் பள்ளியில் 5-வது வகுப்பு முதல் ஒன்றாக படித்தவர்கள். ஆரம்ப முதலே … Read more

தமிழக மீனவர்கள் 25 பேருடன் 4 படகுகளையும் பறிமுதல் செய்தது இலங்கை கடற்படை! மீனவர்கள் அதிர்ச்சி…

சென்னை:  வங்கக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 25 பேரையும், அவர்களுடைய 4 படகுகளையும் இலங்ககை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியம் தமிழக மீனவர்களிடையே பேரதிர்ச்சியை எற்படுத்தி உள்ளது. கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து வருவது வாடிக்கையாகி வருகிறது. இதை தடுக்க பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படாத நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை … Read more

மழை பிடிக்காத மனிதன் படத்தில் விஜய்காந்த்.. இயக்குநர் கொடுத்த சர்ப்ரைஸ்!

சென்னை: விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவாகி உள்ள மழை பிடிக்காத மனிதன் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பேசிய இயக்குர் விஜய் மில்டன், இந்த படத்தில் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் இடம்பெற்றுள்ளார், இப்போதைக்கு இதைத்தான் நான் சொல்ல முடியும் மற்றவற்றை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்றார். இந்த செய்தி தான்