நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கு – குஜராத்தில் பள்ளி உரிமையாளர் கைது

கோத்ரா, இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் தேர்வில் ஏராளமான முறைகேடுகள் நடந்தது நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சி.பி.ஐ. தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் சுமார் 6 வழக்குகள் பதிவு செய்துள்ள சி.பி.ஐ. அதிகாரிகள், குஜராத், ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் சோதனை, விசாரணை என தங்கள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். குஜராத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரித்து வரும் அதிகாரிகள், அங்கு தேர்வு நடந்த பள்ளிகளில் சோதனை நடத்தினர். அப்போது … Read more

வட கொரியாவில் கே-பாப் இசையை கேட்ட வாலிபருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

சியோல்: சர்வாதிகார ஆட்சி நடைபெறும் வட கொரியாவில் அரசுக்கு எதிராகவோ, அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன்னுக்கு எதிராகவோ யாரும் எதுவும் பேச முடியாது. அந்த அளவுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மேற்கத்திய கலாச்சாரங்கள் கொண்ட பொழுதுபோக்கு, உடை உள்ளிட்ட விஷயங்களில் கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த கட்டுப்பாடுகளை மீறினால் கொடூர தண்டனைகளும் விதிக்கப்படுகின்றன. வட கொரியா மீது மனித உரிமை மீறல் தொடர்பாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இந்நிலையில், அரசின் கட்டுப்பாடுகளை மீறி, தென் கொரியாவின் … Read more

தமிழகத்தில் 10 இடங்களில் என்ஐஏ சோதனை: தஞ்சை மாவட்டத்தில் 2 பேர் கைது; செல்போன், லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல்

சென்னை: தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்துக்கு ஆள்சேர்த்த விவகாரம் தொடர்பாக சென்னை, திருச்சி, தஞ்சை உட்பட தமிழகத்தில் 10 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனைநடத்தினர். 2 பேர் கைது செய்யப்பட்டனர். சமீபத்தில் ஒரு யூ-டியூப் சேனலில், தடை செய்யப்பட்ட ஹிஸ்ப்-உத்-தஹ்ரிர் இயக்கத்துக்கு ஆதரவான கருத்துகள் இருந்ததைசென்னை போலீஸார் கண்டறிந்தனர். இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர்க்ரைம் போலீஸார் துப்பு துலக்கினர். இதில், சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த ஹமீது உசேன் என்பவர், ‘டாக்டர் ஹமீது உசேன் டாக்ஸ்’ … Read more

தாமதமானாலும் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸை நாசா பூமிக்கு அழைத்து வரும்: இஸ்ரோ தலைவர் கருத்து

புதுடெல்லி: சர்வதேச விண்வெளி மையத்துக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப, கேப்சூல் வகை விண்கலம் தயாரிக்கும் பொறுப்பை போயிங்நிறுவனத்திடம் அமெரிக்க விண்வெளி நிறுவனம் நாசா வழங்கியது. இதன் வடிவமைப்பாளர்களில் ஒருவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ். இவர்சர்வதேச விண்வெளி மையத்துக்கு பல முறை சென்று திரும்பிய அனுபவம் மிக்கவர். போயிங் நிறுவனம் தயாரித்த ஸ்டார்லைனர் விண்கலம் பரிசோதனை முயற்சியாக, கடந்த மாதம் 5-ம் தேதி, அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து அட்லஸ்-5 ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. இதில் … Read more

இன்று முதல் புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்… சில முக்கிய அம்சங்கள் விபரம்..!!

நீதியை எட்டுவதற்கான சாமானிய மக்களின் பாதையில் எளிமையை ஏற்படுத்தும் நோக்கில் பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய மூன்று புதிய சட்டங்களில் பல்வேறு புதுமைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் சென்னை, தஞ்சை உள்பட 12 இடங்களில் என்ஐஏ சோதனை! 2 பேர் கைது

சென்னை: தமிழ்நாட்டில் சென்னை, தஞ்சை உள்பட 12 இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தப்பட்டு இதையடுத்து, தஞ்சாவூரில்  2 பேர் கைது செய்யப்பட்ட உள்ளனர். தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புகளுடன் பலர் தொடர்பு கொள்வது அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக ஏற்கனவே என்ஐஏ பலமுறை சோதனை நடத்தி சிலரை கைது செய்துள்ள நிலையில், நேற்று ( 30/06/24)  அன்று சென்னை, திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், புதுக்கோட்டை , ஈரோடு உள்பட பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. தஞ்சாவூரில் 5 … Read more

மனைவி மஞ்சிமாவுக்கே டஃப் கொடுக்கிறாரே.. கெளதம் கார்த்திக்கின் புதிய லுக்கை பார்த்தீங்களா?

சென்னை: பழம்பெரும் நடிகர் முத்துராமனின் பேரனும் நடிகர் கார்த்திக்கின் மகனும் நடிகருமான கௌதம் கார்த்திக் தனது மனைவி மஞ்சிமா மோகனுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கடந்த 2013-ம் ஆண்டு அறிமுகமானவர் தான் கௌதம் கார்த்திக். முதல் படம் அவருக்கு சிறப்பாக

இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக உபேந்திர திவேதி பொறுப்பேற்பு

புதுடெல்லி, இந்திய ராணுவத்தின் தளபதியாக இருந்து வந்த மனோஜ் பாண்டேவின் பதவிக் காலம் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதனையடுத்து, புதிய ராணுவ தளபதியாக உபேந்திர திவேதி நேற்று பொறுப்பேற்றார். இவர் இந்திய ராணுவத்தின் 30-வது தளபதி ஆவார். மத்திய பிரதேசத்தை பூர்விகமாகக் கொண்ட உபேந்திர திவேதி ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர். குறிப்பாக இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றியவர். கடந்த 1984-ல் ஜம்மு-காஷ்மீர் காலாட்படையின் 18-வது … Read more