புதுச்சேரி சாராயக்கடையில் தமிழக போலீஸார் சோதனை: உரிமையாளர்கள் எதிர்ப்பு; முதல்வரிடம் மனு அளிக்க முடிவு

புதுச்சேரி: புதுச்சேரி சாராயக்கடையில் தமிழக போலீஸார் சோதனையிட்டதற்கு சாராயக்கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து இன்று கூட்டம் நடத்தினர். பொய் வழக்கு போடுவதாக முதல்வரிடம் மனு அளிக்க உள்ளனர். கள்ளக்குறிச்சி எரிசாராயம் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக போலீஸார் புதுச்சேரி எல்லை பகுதிகளில் சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். விழுப்புரம் அடுத்த கெங்கராம்பாளையத்தில் தமிழக போலீஸார் நடத்திய வாகன சோதனையில், சாராய பாக்கெட்டுகள் கொண்டு சென்ற நபர் பிடிபட்டார். அதன் அடிப்படையில் தமிழக போலீஸார் தமிழக எல்லையிலுள்ள புதுச்சேரி திருபுவனை அருகேயுள்ள ஆண்டியார்பாளையம் … Read more

டெல்லியில் திடீர் வெள்ளத்தில் சிக்கி 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரம்: ஐஏஎஸ் பயிற்சி மைய உரிமையாளர் கைது

புதுடெல்லி: டெல்லியில் உள்ள தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் தரைதளத்தில் வெள்ளம் புகுந்ததில், நீரில் மூழ்கி 2 மாணவிகள், ஒரு மாணவர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை கண்டித்து மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது. மாணவர்களின் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்ததாக, பயிற்சி மையத்தின் உரிமையாளர் அபிஷேக் குப்தா, ஒருங்கிணைப்பாளர் தேஷ்பால் சிங் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கு டெல்லி பகுதியில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப்பணிகளுக்கான பயிற்சிமையங்கள் ஏராளமாக செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில்,ராவ் ஐஏஎஸ் பயிற்சி மையம் … Read more

மாநjநர பேருந்துகளில் மக்கள் கூட்டம் : மின்சார ரயில்கள் ரத்து எதிரொலி

சென்னை சென்னையில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மாநகர பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. சென்னையில் சென்ட்ரல், எழும்பூருக்கு அடுத்ததாக பயணிகள் அதிக அளவில் பயன்படுத்தும் தாம்பரம் ரயில் நிலையத்தை 3-வது முனையமாக மாற்றுவதற்காக விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே இன்று   காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை இயக்கப்படும் பெரும்பாலான ரெயில்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. இவ்வாறு ரயில்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளதால் ரயில் பயணம் மேற்கொள்ள வந்த பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். ரயில்கள் … Read more

Baakiyalakshmi serial: வீட்டிற்கு அழைத்த கோபி.. கையை தட்டிவிட்ட இனியா!

       சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்துவரும் பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வார ப்ரமோ வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களாக இனியா தன்னுடைய நண்பர்களுடன் பப்பிற்கு சென்றது மற்றும் அதன் எதிரொலியாக வீட்டில் வெடித்த பிரச்சினைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இனியாவின் பிரச்சினையால் சமையல் போட்டியின் இறுதிச் சுற்றிலிருந்து பாக்கியா வெளியேறிய

மேட்டூர் அணை வேகமாக நிரம்புவதால் வெள்ள கட்டுப்பாட்டு மையம் திறப்பு

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110 அடியாக உயர்ந்துள்ள நிலையில், நாளை முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், 45 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் அணை நிலவரம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கபினி, கேஆர்எஸ் அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் காவிரில் கடந்த 2 வாரங்களாக நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக, மேட்டூர் … Read more

அக்னி வீரர்களுக்கு அரசுப் பணியில் இடஒதுக்கீடு: குஜராத், ஒடிசா உள்ளிட்ட 6 மாநிலங்கள் அறிவிப்பு

புதுடெல்லி: ஓய்வுபெறும் அக்னி வீரர்களுக்கு தங்கள் மாநிலங்களில் அரசு பணியில் இடஒதுக்கீடு வழங்கப்படும் என குஜராத், ஒடிசா உள்ளிட்ட 6 மாநிலங்கள் அறிவித்துள்ளன. கார்கில் போரில் பாகிஸ்தானை இந்தியா வென்றதன் 25-வது ஆண்டு விழாவில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ராணுவத்தின் முப்படைகளிலும் இளைஞர்களை சேர்க்கும் அக்னி பாதை திட்டம் கடந்த 2022-ல் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் அக்னி வீரர்களாக பணியில் சேரும் இளைஞர்கள், 4 ஆண்டுகள் பணியில் இருப்பார்கள் என்றும், பிறகு அவர்களில் 75% பேர் … Read more

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக நீர் திறப்பு

மேட்டூர் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக காவிரி நீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கர்நாடக மாநிலம் குடகு மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளன. அணையின் பாதுகாப்பு கருதி கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து 1 லட்சத்து 66 ஆயிரத்து 234 கனஅடி … Read more

என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்.. ராயன் பட நடிகையின் நெகிழ்ச்சி பதிவு!

சென்னை: இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான திரைப்படங்களில் தனுஷின் 50வது படமான ராயன் மிகவும் முக்கியமான படமாகும். தனுஷ் எழுதி இயக்கி நடித்த இப்படம் வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படத்தில் முக்கியமான ரோலில் நடித்த நடிகை தனது இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை ஷேர் செய்துள்ளார். ஒரு கிராமத்தில்

தமிழகத்தை வஞ்சிக்கும் பட்ஜெட்டை கண்டித்து இடதுசாரிக் கட்சிகள் ஆக.1-ல் மறியல் போராட்டம்: மதுரை எம்பி

மதுரை: மதுரையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மகபூப்பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் மதுரை எம்பி சு.வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இந்திய மக்களுக்கு, கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக மத்திய பாஜக அரசு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. இதனை கண்டித்து இடதுசாரிக்கட்சிகள் சார்பில் மாபெரும் போராட்டம் ஆக.1-ம் தேதி அன்று நடைபெறும். நாடாளுமன்றத் தேர்தலுக்குப்பின் முதன்முறையாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. Source link