ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணை சோதனை: எதிரி இலக்குகளை துல்லியமாக தாக்கியதாக விமானப்படை தகவல்

புதுடெல்லி: ‘‘ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்ட எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணைகள், பயிற்சியில் ‘எதிரி’ விமானங்களை துல்லியமாக தாக்கின’’ என விமானப்படை கூறியுள்ளது. ரஷ்யாவிடம் எஸ்-400 என்ற அதி நவீன வான் பாதுகாப்பு ஏவுகணைகள் உள்ளன. இது எதிரி நாட்டு போர் விமானங்களை நடுவானிலே சுட்டு வீழ்த்தும் திறன் படைத்தவை. இந்திய விமானப்படை பயன்பாட்டுக்காக 5 எஸ்-400 படைப்பிரிவுகளை ரூ.35,000 கோடிக்கு வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்தது. இதில் 3 எஸ்-400 படைப்பிரிவுகளை ரஷ்யா இதுவரை விநியோகம் செய்துள்ளது. … Read more

தமிழக அரசு மாஞ்சாலை தொழிலாளர்களுக்கு உதவும் : அமைச்சர் உறுதி

சென்னை தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு அரசு உதவும் என உறுதி அளித்துள்ளார். தமிழக அமைச்சர் தங்கம் தெனரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மாஞ்சோலையிலுள்ள பிபிடிசி தேயிலை நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 99 ஆண்டு காலக்குத்தகை 11-02-2028 அன்று முடிவடைவதைக் கருத்திற்கொண்டு, மேற்படி நிறுவனம் மார்ச், 2024-ல் தனது நிறுவனத்தில் பணிபுரியும் 559 தொழிலாளர்களுக்கான விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்தது. அப்போதே, அரசு சார்பில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரால் சேரன்மகாதேவி சார்-ஆட்சியர் தலைமையில் தொழிலாளர் நலத்துறை, … Read more

Oviya: மதுக்கோப்பையுடன் சைட்டிஷ்ஷை வெட்டு வெட்டிய ஓவியா.. இதுல அட்வைஸ் வேற!

சென்னை: நடிகை ஓவியா தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடித்து வருகிறார். களவாணி படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்த இவர், ஒரு வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் இவருக்கு பட வாய்ப்புகள் குறைவாகவே அமைந்து வருகிறது. ஹோம்லி கேரக்டர்களில் இருந்து அதிரடியாக கவர்ச்சிக்கு மாறியதும் இவருக்கு கைக்கொடுக்கவில்லை. மதயானைக்கூட்டம், கலகலப்பு போன்ற படங்கள் இவருக்கு

Paris Olympics 2024 LIVE Updates: 'முதல் பதக்கத்தோடு வெற்றி மேல் வெற்றி; அசத்தும் இந்தியா!' – 2 ம் நாள் முழு அப்டேட்ஸ்!

பேட்மிண்டனில் வெற்றி! பேட்மிண்டன் தனிநபர் பிரிவின் க்ரூப் சுற்றில் இந்திய வீரர் ஹெச்.எஸ். பிரனாய் ஜெர்மனி வீரர் ஃபேபியனுக்கு எதிரான போட்டியில் 21-18, 21-12 என நேர் செட் கணக்கில் வெற்றி. டேபிள் டென்னிஸில் அசத்தல்! Manika மகளிர் தனிநபர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை மனிகா பத்ரா பிரிட்டன் வீராங்கனையை 4-1 என வீழ்த்தி ரவுண்ட் ஆப் 32 க்கு முன்னேறினார். குத்துச்சண்டையில் வெற்றி! Nikhat குத்துச்சண்டையில் 50 கிலோ எடைப்பிரிவில் ஜெர்மனி … Read more

பழைய ஸ்பிரேயர் மோட்டார் வெடித்து வியாபாரி உயிரிழப்பு: போலீஸார் விசாரணை @ கடவூர் 

கரூர்: கடவூரில் ஸ்பிரேயர் கருவியை சம்மட்டியால் உடைத்த இரும்பு வியாபாரி ஸ்பிரேயர் மோட்டார் வெடித்து சிதறியதில் சம்பவ இடத்திலயே உயிரிழந்தார். கரூர் மாவட்டம் கடவூர் பசும்பொன் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (49). இவர் பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருள் வியாபாரி. பழைய பொருட்களை வாங்கி வந்து வீட்டருகேயுள்ள கொட்டகையில் வைத்து பொருட்களை வகை பிரிப்பார். பயிர்களுக்கு பூச்சி மருந்து அடிக்கும் ஸ்பிரேயர் கருவியை சம்மட்டியால் இன்று (ஜூலை 28) உடைத்துள்ளார். அப்போது திடீரென ஸ்பிரேயர் மோட்டார் வெடித்து … Read more

முன்னாள் முதல்வர் ஜெகன் போராட்டத்துக்கு ஏன் ஆதரவு தெரிவிக்க வேண்டும்? – ஷர்மிளா கேள்வி

கடப்பா: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீரழிந்து விட்டது என்பதை நாடு முழுவதும் அறிய செய்ய வேண்டும் எனும் நோக்கில், 2 நாட்களுக்கு முன்னர் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி டெல்லியில் ஜந்தர்-மந்தர் அருகே போராட்டத்தில் ஈடுபட்டார். இதற்கு இண்டியா கூட்டணியில் இடம்பெற்றிருந்த சில கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும், இண்டியா கூட்டணியில் ஜெகன் இணைய வேண்டும் என அழைப்பு … Read more

இப்போது என்னை தேர்ந்தெடுத்தால் எப்போதும் வாக்களிக்க வேண்டாம் : டிரம்ப்

வாஷிங்டன் அமெரிக்க அதிபர் தேர்தலில் தம்மை இப்போது தேர்வு செய்தால் இனி எப்போதுமே வாக்களிக்க வேண்டாம் என டிரம்ப் கூறியுள்ளார் வரும் நவம்பர் 5 ஆம் தேதி அமெரிக்காவில் நடக்க உள்ள பொதுத்தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபரி டொனால்டு டிரம்ப் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது., தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்து துணை அதிபரும், இந்திய வம்சாவளியுமான கமலா ஹாரிசுக்கு  தனது முழு ஆதரவை அளிப்பதாக ஜோ பைடன் … Read more

Dhaush: தனுஷ் வீட்டின் முன்பு அவரை சுற்றிவளைத்த ஃபேன்ஸ்.. கொண்டாட அடுத்தடுத்த காரணங்கள்!

சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பு மற்றும் இயக்கத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி உள்ளது ராயன். இந்த படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து இரு தினங்களிலேயே 20 கோடி வசூலை தாண்டி வசூலித்துள்ளது. இன்றைய தினமும் வார இறுதி நாளாக அமைந்துள்ளதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய தினம் தனுஷ்

டி.என்.பி.எல்.: சேப்பாக் அணிக்கு 192 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மதுரை

திண்டுக்கல், 8 அணிகள் இடையிலான 8-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் திண்டுக்கல்லை அடுத்த நத்தத்தில் நடந்து வருகிறது. இன்றுடன் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைகிறது. அதன்படி இன்று நடைபெறும் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியுடன் மதுரை பாந்தர்ஸ் அணி மோதுகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சேப்பாக் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து மதுரை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சுரேஷ் லோகேஷ்வர் மற்றும் கேப்டன் ஹரி நிஷாந்த், அந்த அணிக்கு … Read more

பஞ்சாங்கக் குறிப்புகள்: ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 4 வரை #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் Source link