சென்னையின் அனைத்து சாலைகளிலும் கழிவுகளை அகற்றும் பணி செப்டம்பருக்குள் நிறைவு: மாநகராட்சி ஆணையர் உறுதி

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளிலும் கழிவுகளை அகற்றும் தீவிர தூய்மைப் பணிகளை வரும் செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்க திட்டமிட்டிருப்பதாக மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சியில் 418 கிமீ நீளத்துக்கு 488 பேருந்து சாலைகள் உள்ளன. இவற்றில் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சீராக செல்வதற்கும், நடைபாதைகளில் மக்கள் சிரமமின்றி செல்வதற்கும் ஏற்ப 22-ம் தேதி இரவு முதல் மாநகராட்சி சார்பில் தீவிர தூய்மைப் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாநகராட்சி … Read more

பழங்குடி மொழிகளை கற்க உதவும் 25 அடிப்படை நூல்கள்: டெல்லியில் நாளை வெளியிடுகிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி: இந்திய பழங்குடி மொழிகளை கற்க உதவும் 25 அடிப்படை நூல்களை பிரதமர் நரேந்திர மோடி நாளை டெல்லியில் வெளியிட உள்ளார். தமிழ் மொழி வளர்ச்சிக்காக மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் ‘யாழ் டிவி’ எனும் கல்வித் தொலைக்காட்சி நாளை தொடங்கப்பட உள்ளது. டெல்லி மானெக்‌ஷா அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இதனை தொடங்கி வைக்கிறார். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானும் இதில் கலந்து கொள்கிறார். இதே நிகழ்ச்சியில் இந்திய பழங்குடி மொழிகளை … Read more

வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் ரீஷேர் அம்சம் விரைவில் அறிமுகம்!

சென்னை: வாட்ஸ்அப்பில் பயனர்கள் அப்டேட் செய்த ஸ்டேட்டஸை மற்ற பயனர்கள் எளிதில் ரீஷேர் செய்யும் வகையிலான அம்சம் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல். இது குறித்து பார்ப்போம். வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் … Read more

இந்திய அணி கிளாஸான பந்துவீச்சு, சீட்டுக்கட்டுகள் போல் சரிந்த இலங்கை விக்கெட்டுகள்..!

இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி இன்று இரண்டாவது போட்டியில் விளையாடியது. பல்லக்கேலே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் பந்துவீச்சை தேர்வு செய்ய, இலங்கை அணி பேட்டிங் ஆடியது. அந்த அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியில் சிறப்பாக ஆடிய நிஷானகா 32 ரன்களில் ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடிய குஷல் பெரேரா … Read more

மேலும் மூவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது

சென்னை பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 5 ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்  ஆறு பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். செம்பியம் காவல் நிலையத்தில் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி, … Read more

மறைந்த அம்மாவின் கண்ணாடி, வளையல், செயின்.. சரத்குமார் செய்த மாஸான செயல்.. ஹோம் டூர் வெளியீடு!

சென்னை: நடிகர் சரத்குமார் தமிழ் சினிமாவில் வில்லனாக என்ட்ரி கொடுத்து தொடர்ந்து ஹீரோவாக பல வெற்றி படங்களை கொடுத்தவர். சூரியவம்சம் உள்ளிட்ட பல படங்களில் இவரது இயல்பான நடிப்பு அந்த படத்தை வெற்றிப்படமாக்கியது. முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார் சரத்குமார். தற்போது போர் தொழில் உள்ளிட்ட பல படங்களில் இளம் ஹீரோக்களுடன் இணைந்து

பாரீஸ் ஒலிம்பிக்: டேபிள் டென்னிஸ் முதல் சுற்றில் ஸ்ரீஜா அகுலா வெற்றி

பாரீஸ், 33-வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று முன்தினம் இரவு கோலாகலமாக தொடங்கியது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்களும் அடங்குவர். இந்நிலையில் டேபிள் டென்னிஸ் பிரிவின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா, ஸ்வீடன் வீராங்கனை கிறிஸ்டினாவுடன் மோதினார். பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் 11-4, 11- 19, 11-7, 11-8 என்ற கணக்கில் ஸ்ரீஜா அகுலா … Read more

என்னை தேர்ந்தெடுத்தால்… நீங்கள் இனி எப்போதும் வாக்களிக்க வேண்டியதில்லை – டிரம்ப் பரபரப்பு பிரசாரம்

வாஷிங்டன், அமெரிக்காவில் வருகிற நவம்பர் 5-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் (வயது 78) போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. அதே சமயம், தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். மேலும் துணை ஜனாதிபதியும், இந்திய வம்சாவளியுமான கமலா ஹாரிசுக்கு (59) தனது முழு ஆதரவை அளிப்பதாக ஜோ பைடன் தெரிவித்தார். இந்த சூழலில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக கமலா ஹாரிஸ் … Read more

Manu Bhaker: "நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது!" – பதக்கம் வென்ற மனு பாக்கர் நெகிழ்ச்சி

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை வென்றிருக்கிறார் மனு பாக்கர். 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வெண்கலம் வென்றிருக்கிறார். ஒலிம்பிக்ஸ் வரலாற்றில் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா சார்பில் பதக்கம் வெல்லும் முதல் வீராங்கனை எனும் பெருமையை மனு பாக்கர் பெற்றிருக்கிறார். மனு பாக்கர் பதக்கத்தை வென்ற பிறகு ஆனந்த கண்ணீரோடு பேசிய மனு பாக்கர், “வார்த்தைகளில் விவரிக்க முடியாத அளவுக்கு மகிழ்ச்சியில் இருக்கிறேன். என்னுடைய சக்தி முழுவதையும் செலுத்தி இதற்காக கடுமையாகப் போராடியிருக்கிறேன். இந்த … Read more

பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ஒரு பைசா கூட ஒதுக்காமல் மத்திய அரசு வஞ்சித்துவிட்டது: ஆர்.பி.உதயகுமார்

மதுரை: பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்காமல் மத்திய அரசு வஞ்சித்துள்ளது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக மற்றும் அம்மா பேரவை சார்பில் கள்ளிக்குடி ஒன்றியம் சிவரக்கோட்டையில் பொதுமக்களுக்கு திமுக ஆட்சியில் நடைபெற்ற போதை பொருள் கடத்தல், கள்ளச்சாரய பலி சம்பவங்கள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சரும், எதிர்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் பொதுமக்களுக்கு … Read more