மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்குக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது – சென்னையில் வழங்கப்பட்டது

சென்னை: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்குக்கு, சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. நாடு முழுவதிலுமிருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் முன்னணி மருத்துவ பிரபலங்கள், வல்லுநர்கள், மருத்துவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில், மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கிற்கு நீரிழிவு மருத்துவம், நீரிழிவு பராமரிப்பு, நீரிழிவு ஆராய்ச்சி ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டதற்காக மதிப்புமிக்க “வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கப்பட்டது. டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையம், சென்னை … Read more

போனில் உள்ள கூகுள் கணக்கு – பாஸ்வோர்டை பாதுகாப்பாக வைத்திருக்க..!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப மேம்பாட்டுடன், சைபர் குற்றங்களும், சைபர் மோசடிகளும் அதிகரித்துள்ளன. நமக்கு எந்த வகையிலும் இழப்பு ஏற்படாமல் இருக்க, சில பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொள்வது அவசியமானதாகிறது. ஸ்மார்ட்போன் என்பது அத்தியாவசிய பொருளாக ஆகிவிட்ட நிலையில், அதில் நம் பல்வேறு தரவுகளை சேமித்து வைக்கிறோம். முக்கியமான ஆவணங்கள் முதல், தனிப்பட்ட புகைப்படங்கள், வங்கிகளின் பாஸ்வேர்டு என, நமது அத்தனை தகவல்களையும் கொண்ட ஒரு கருவியாக ஸ்மார்ட்போன் உள்ளது. இந்நிலையில், நமது ஸ்மார்ட்போன் பிறர் கையில் சிக்கினால், … Read more

சென்னை மாநகராட்சி : ட்ரோன் மூலம் கொசு மருந்து தெளிக்க ஒப்பந்த வாகனங்கள் கிடைக்கவில்லை ?

சென்னை மாநகரம் முழுவதும் கொசு மருந்து தெளிப்பதற்காக மாநகராட்சியால் வாங்கப்பட்ட ஆறு ட்ரோன்களும் தற்போது பயன்படுத்தப்படாமல் உள்ளது. இந்த ட்ரோன்களை கொண்டு செல்ல ஒப்பந்தம் செய்யப்பட்ட வாகனங்களின் ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் புதிதாக வாகனங்களை வாடகைக்கு விட யாரும் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. ட்ரோன்களை கொண்டு செல்ல டெம்போ டிராவலர் போன்ற வாகனங்கள் தேவைப்படும் நிலையில் அந்த வாகனத்தில் இரசாயனத்தை ஏற்றிச் செல்வதால் அதன் வாசனை வேறு பயணிகளுக்கு பிரச்சனையை ஏற்படுத்துவதாகத் தெரிகிறது. ஏற்கனவே மாநகராட்சிக்கு சொந்தமான … Read more

குழந்தை வரம் தந்த அனுமன்.. எதிர்ப்பை மீறி பிரமாண்ட கோவில்! அப்பா கனவை நனவாக்கும் முஸ்லிம் பிரதர்ஸ்

அமராவதி: ஆந்திராவில் குழந்தை வரம் தந்த அனுமனுக்கு பல்வேறு எதிர்ப்புகளை தாண்டி அப்பாவின் கனவை நிறைவேற்றும் வகையில் இஸ்லாமிய சகோதரர்கள் 2 பேர் பிரமாண்டமாக கோவில் கட்டி வரும் நிலையில் அதன் பின்னணியில் உள்ள சுவாரசிய காரணம் அனைவரையும் வியக்க வைக்கிறது. நம் நாட்டில் பிறந்த மக்கள் ஒவ்வொருவரின் பின்னணியிலும் ஒரு ஜாதி, மதம் அடையாளமாக Source Link

மகளை நினைத்து ஏங்கும் அப்பத்தா.. வீட்டைவிட்டு வெளியேற்றிய சக்திவேல்.. பளார் விட்ட முத்துவேல்!

       சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோட் சண்டே ஸ்பெஷல் சிறப்பு எபிசோடாக ஒளிபரப்பானது. தன்னுடைய மகள் கோமதி குறித்து தன்னுடைய ஏக்கத்தையும் ஆதங்கத்தை இன்றைய எபிசோடில் வெளிப்படுத்துகிறார் அப்பத்தா. தன்னுடைய மகள் செய்த ஒரு சிறிய தவறு காரணமாக 30 ஆண்டுகளாக அவளிடம் பேச முடியாமல் தான்

ஒலிம்பிக் போட்டி: நமது வீரர்களை உற்சாகப்படுத்த வேண்டும்- பிரதமர் மோடி

புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் நிகழ்ச்சி (மன் கி பாத்) மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். 112-வது நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பானது. இதில் மோடி பேசியதாவது:- ஒலிம்பிக் போட்டியில் நமது தேசியக் கொடியை உலகளவிற்கு எடுத்து செல்லவும், நாட்டிற்கு பெருமை சேர்க்கவும் நமது வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர்களை நீங்கள் உற்சாகப்படுத்த வேண்டும். கடந்த சில நாட்களுக்கு முன்னர் 100 நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்ட சர்வதேச … Read more

மகளிர் ஆசிய கோப்பையை வெல்லப்போவது யார்? இலங்கைக்கு 166 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா

தம்புல்லா, 9-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) இலங்கையின் தம்புல்லாவில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் அரைஇறுதி முடிவில் இந்தியாவும், இலங்கையும் தோல்வியே சந்திக்காமல் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷெபாலி வர்மா மற்றும் ஸ்மிரிதி களமிறங்கினர். இதில் ஷெபாலி வர்மா … Read more

அமெரிக்க அதிபர் தேர்தல்; டிரம்ப்பை முந்தும் கமலா ஹாரிஸ்

வாஷிங்டன், அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் 5-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்தார். வயது முதிர்வு, பேச்சில் தடுமாற்றம், மந்தமான செயல்பாடு போன்ற காரணங்களால் ஜோ பைடன் மீது தொடர் விமர்சனங்கள் எழுந்தன. இதனால் ஜனாதிபதி தேர்தலுக்கான போட்டியில் இருந்து பைடன் விலக வேண்டுமென அவரது சொந்த கட்சியினரே வலியுறுத்தினர். நெருக்கடி அதிகமானதால் ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகுவதாக … Read more

அந்திமழை நிறுவனர் இளங்கோவன் காலமானார்!

அந்திமழை நிறுவனரும், நிறுவிய ஆசிரியருமான மருத்துவர் அந்திமழை ந.இளங்கோவன் இன்று (ஜூலை 28) உயிரிழந்திருக்கிறார். மாரடைப்பால் உயிரிழந்த அவருக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து வெளியான செய்திக் குறிப்பில்… கால்நடை மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, அந்திமழை என்ற கையெழுத்துப் பிரதியைத் தொடங்கினார் ந.இளங்கோவன். அவை மாணவர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. பிறகு கால்நடை உயிரியியல் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். சென்னையிலிருந்து வெளிவரும் குமுதம், தமிழன் எக்ஸ்பிரஸ், குங்குமம் ஆகிய முன்னணி இதழ்களில் எழுதி, … Read more

வெள்ள அபாய எச்சரிக்கை எதிரொலி – கொள்ளிடம் ஆற்று பகுதியில் கடலூர் ஆட்சியர் ஆய்வு

கடலூர்: காவிரி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்படும் என்று 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்திகுமார் சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்று பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 1 லட்சத்து 34 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது மேட்டூரில் 109அடி தண்ணீர் உள்ளது. இந்த நிலையில் இன்று(ஜூலை.27) விவசாய பாசனத்துக்காகவும், குடிநீருக்காவும், … Read more