‘‘கடந்த ஆண்டும் நூலகம் வெள்ளத்தில் மூழ்கியது’’: டெல்லி பயிற்சி மைய மாணவர்கள் உருக்கம்

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் சனிக்கிழமை பொழிந்த கனமழையில், அங்குள்ள பிரபல தனியார் யுபிஎஸ்சி பயிற்சி மையத்தின் கீழ்த்தளத்தில் (பேஸ்மெண்ட்) வெள்ளம் ஏற்பட்டது. இதில் சிக்கி மாணவிகள், ஒரு மாணவர் என மொத்தம் மூவர் உயிரிழந்தனர். உத்தரபிரதேச மாநிலம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ஸ்ரேயா யாதவ், தெலுங்கானாவைச் சேர்ந்த தன்யா சோனி, கேரளாவின் எர்ணாகுளத்தைச் சேர்ந்த நவீன் டால்வின் ஆகியோர் உயிரிழந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. சனிக்கிழமை மாலை டெல்லியில் பரவலாக மழை பதிவானது. இந்த சூழலில் 7 மணி … Read more

துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் டைட்டில் ட்ராக் வெளியீடு

துல்கர் சல்மான், வெங்கி அட்லூரி, சித்தாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் வெளியிட்ட அதிர வைக்கும் ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் டைட்டில் ட்ராக் வெளியாகியுள்ளது.

கூகுள் மேப்ஸில் இனி சிக்கல் இருக்காது… AI உதவியுடன் புதிய அம்சங்கள் அறிமுகம்

சமீப காலங்களாக கூகுள் மேப்ஸ் தவறான வழியைக் காட்டி பயணிகளுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்திய சம்பவங்கள் அடிக்கடி செய்திகளில் வெளியாகின. கடினமான வழிகளை காட்டி பயணிகளை தவறாக வழி நடத்தியதாக, பலமுறை கூகுள் மேப்ஸ் மீது குற்றம் சாட்டப்பட்டு வந்தது. கூகிள் மேப்ஸ் காட்டிய வழியில் சென்ற, கார் ஒன்று ஆற்றின் நடுவில் சிக்கிக்கொண்ட சம்பவம் கூட பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் இந்திய பயணிகள் எதிர்கொள்ளும், சில பொதுவான பிரச்சினைகளுக்கு தீர்வை அளிக்கும் வகையில், இந்தியாவில் கூகுள் மேப் … Read more

கிருஷ்ணகிரியில் நடந்த வானும் மண்ணும் – 2024 வேளாண் அறிவியல் மாநாடு

கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரியில் நேற்று அக்ரிசக்தி  நடத்திய வானும் மண்ணும் – 2024 வேளாண் அறிவியல் மாநாடு நடைபெற்றுள்ளது. நேற்று அக்ரிசக்தி  நடத்திய வானும் மண்ணும் – 2024 வேளாண் அறிவியல் மாநாடு கிருஷ்ணகிரியில் உள்ள நாளந்தா சிபிஎஸ்இ சர்வதேசப் பள்ளியில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை  நடைபெற்றது. மாநாட்டின் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசிய பன்னாட்டு உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் (IFPRI) திறன் மேம்படுத்துதல் பிரிவின் தலைவர் … Read more

பெண் உதவி இயக்குநருடன் உறவில் இருந்த நடிகை.. வெளிச்சம் போட்டு காட்டிய சர்ச்சை பாடகி!

சென்னை: விரல் நடிகரை வைத்து பல வெற்றிப்படத்தை இயக்கிய ஒரு பிரபல இயக்குநர் ஒருவரின் பெண் உதவியாளர் ஒருவருடன், மாயமான நடிகை உறவில் இருந்தார் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டி சர்ச்சை பாடகி ஒருவர் முன் வைத்துள்ளார். சினிமாத்துறையில் அட்ஜெட்மெண்ட், கிசுகிசு எல்லாம் சர்வ சாதாரணமாக இருந்தாலும் ஒரு நடிகை ஒருவர் சொல்லி இருக்கும் புகார், சினிமா

பெங்களூருவில் இரண்டடுக்கு மேம்பாலங்கள் அமைக்கப்படும்- டி.கே.சிவக்குமார்

பெங்களூரு பெங்களூரு மாநகராட்சியில் நேற்று பிராண்ட் பெங்களூரு திட்டத்தின் கீழ் நகரின் வளர்ச்சி குறித்து துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தலைமையில் எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோக், மந்திரி ஜமீர் அகமதுகான், மாநகராட்சி அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். இந்த கூட்டம் முடிந்ததும் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:- பெங்களூருவில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வது குறித்து எம்.எல்.ஏ.க்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளனர். பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினையை சரி … Read more

மகளிர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு

தம்புல்லா, 9-வது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) இலங்கையின் தம்புல்லாவில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் அரையிறுதி ஆட்டங்களின் முடிவில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்தியாவும், சமாரி அத்தபத்து தலைமையிலான இலங்கையும் தோல்வியே சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளன. இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. 7 முறை சாம்பியனான இந்திய அணி 8-வது பட்டத்தை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. அதேவேளையில் … Read more

ஏமன் விமான நிலையம் மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல்

சனா, இஸ்ரேல்-காசா போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செயல்படுகின்றனர். எனவே செங்கடல் வழியாக செல்லும் இஸ்ரேல் மற்றும் அதனுடன் தொடர்புடைய கப்பல்கள் மீது அடிக்கடி அவர்கள் தாக்குதல் நடத்துகின்றனர். இதில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மற்ற நாடுகளின் வணிக கப்பல்களும் சேதம் அடைகின்றன. எனவே அந்த வழியாக செல்லும் வணிக கப்பல்களை பாதுகாக்க அமெரிக்கா தலைமையில் ஒரு கூட்டுப்படை உருவாக்கப்பட்டது. இந்த கூட்டுப்படையில் இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகள் … Read more

"இது எனக்கு ஒரு சிறந்த வாய்ப்பு!" – அமெரிக்காவில் படிக்க ஸ்காலர்ஷிப் பெற்ற சலவைத்தொழிலாளியின் மகள்

அமெரிக்க வெளியுறவு துறை நிதி உதவியுடன் அந்நாட்டில் மேற்படிப்பைப் பயிலும் வாய்ப்பைப் பெறுள்ளார் லக்னோவைச் சேர்ந்த சலவைத் தொழிலாளியின் மகளான தீபாளி கனோஜ்யா. 16 வயதான தீபாளி கனோஜ்யா லக்னோவைச் சேர்ந்தவர். 10-ம் வகுப்பு படிக்கும் தீபாளியின் அப்பா ஒரு சலவைத் தொழிலாளி. ஆனால் அவளது தந்தை உடல்நலம் சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருக்கும் நிலையில் தீபாளிதான் வீட்டில் டியூசன் நடத்தி தனது அம்மாவிற்கு உதவி செய்து வந்திருக்கிறார். தீபாளி – நண்பர்களுடன் நலிந்த பொருளாதார பின்னணியைச் … Read more

புதுச்சேரி ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி – யார் இந்த கைலாசநாதன்?

புதுச்சேரி: பிரதமர் மோடிக்கு நெருக்கமாக, குஜராத்தில் முதல்வர் அலுவலகத்திலேயே 18 ஆண்டுகள் பணியில் இருந்து ஜூனில் விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கைலாசநாதன், புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பின்னணி என்ன? புதுவை மாநிலத்தின் துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி நீக்கப்பட்டு தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு கடந்த 2021ல் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பு கூடுதலாக தரப்பட்டது. மக்களவைத் தேர்தலில் போட்டியிட தமிழிசை தனது ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்ததால் தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் … Read more