‘நிதி ஆயோக்’ கூட்டத்தை தமிழகம் புறக்கணித்தது ஏன்? – முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

சென்னை: ‘மத்திய பாஜக அரசு, அரசியல் நோக்கத்துடன் அரசை நடத்துவதால், ‘நிதி ஆயோக்’ கூட்டத்தை புறக்கணித்து மக்கள் மன்றத்தில் பேச வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் நேற்று அவர் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: இந்நேரம் டெல்லியில் நடைபெறும், பிரதமர் தலைமையிலான ‘நிதி ஆயோக்’ கூட்டத்தில் பங்கெடுத்திருக்க வேண்டிய நான், மத்திய பாஜக அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை கொண்ட நிதிநிலை அறிக்கையால், நீதி கேட்டு, மக்கள் மன்றமான உங்கள் … Read more

மகாராஷ்டிரா ஆளுநராக சி.பி ராதாகிருஷ்ணன் மாற்றம்: புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கே.கைலாசநாதன் நியமனம்

புதுடெல்லி: ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன், மகாராஷ்டிரா மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான நியமன உத்தரவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று (சனிக்கிழமை) வெளியிட்டார். புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கே.கைலாசநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் ஆளுநராக செயல்பட்டு வந்த பன்வாரிலால் புரோகித் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து பஞ்சாப் மாநில புதிய ஆளுநராக குலாம் சந்த் கட்டாரியா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் யூனியன் பிரதேசமான சண்டிகரின் … Read more

Ammu Abhirami: கனவு நனவாகியிருக்கு.. ஜமா படம் குறித்து நெகிழ்ச்சியடைந்த அம்மு அபிராமி!

சென்னை: இயக்குநர் மற்றும் நடிகராக பாரி இளவழகன் நடித்துள்ள படம் ஜமா. தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வியலை இந்தப்படத்தில் அவர் பதிவு செய்துள்ளார். ஆக்ஷன், திரில்லர், ஹாரர் என தமிழ் சினிமா பாதை மாறியுள்ள நிலையில் நம்முடைய பாரம்பரிய கலாச்சாரத்தை மையமாக கொண்ட கதைக்களத்தை கையில் எடுத்துள்ளார் இயக்குநர். இந்தப் படத்தில் பாரி இளவழகனுடன் அம்மு அபிராமி, சேத்தன்,

தி.மலையில் மகா தீபம் ஏற்றப்படும் பகுதியில் ஆக்கிரமிப்பு குறித்து ஆய்வு: ஆட்சியரிடம் மன்றாடிய பெண்கள்

திருவண்ணாமலை: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ‘மலையே மகேசன்’ என போற்றி வணங்கப்படும் திரு அண்ணாமலை மீது கட்டப்பட்டுள்ள குடியிருப்பு கட்டிடங்களை சிறப்பு குழுவினர் இன்று (ஜூலை 27) ஆய்வு செய்தனர். அப்போது ஆட்சியரிடம், ‘குடியிருப்புகளை அகற்றக் கூடாது’ என வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனு அளித்தனர். அக்னி திருத்தலமான திருவண்ணாமலையில் 2,668 அடி உயரம் உள்ள மலை உச்சியில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் மகா தீபம் ஏற்றப்படும். ஜோதி வடிவில் அண்ணாமலையாரே காட்சி … Read more

“குஜராத்தில் இருந்து விரட்டப்பட்டவர் நீங்கள்!” – அமித் ஷாவுக்கு சரத் பவார் பதிலடி

சம்பாஜிநகர் (மகாராஷ்டிரா): ‘ஊழல்வாதிகளின் தலைவன்’ என்று தன்னை அழைத்த அமித் ஷாவுக்கு ‘குஜராத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர் நீங்கள்’ என்று பதிலடி கொடுத்துள்ளார் சரத் பவார். மேலும், ‘அவர் தற்போதைய உள்துறை அமைச்சர். அவரின் சொந்த மாநிலத்தில் இருந்து விலகி இருக்க உச்ச நீதிமன்றத்தால் எவ்வாறு நிர்பந்திக்கப்பட்டார்?’ என்பதை நினைவு கூர்ந்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தின் மூத்த அரசியல்வாதியும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் (சரத்சந்திர பவார்) தலைவருமான சரத் பவார் கூறுகையில், “சில நாட்களுக்கு முன்பு உள்துறை அமைச்சர் அமித் … Read more

அது என்ன பிரெக்னன்ஸி கிட்டா?.. சமந்தாவின் புதிய போஸ்ட்டால் ஷாக்கான ஃபேன்ஸ்.. இது வேற மேட்டரு!

சென்னை: நடிகை சமந்தா தனது கையில் ஒரு ஸ்லிப்பை காட்டும் புகைப்படத்தை சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் உடனடியாக அது பிரெக்னன்ஸி கிட்டா? என ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. சமந்தா அப்படி ஏதும் பூதம் கிளம்பி விடக் கூடாது என்பதற்காகவே க்ளோஸ் அப்பில் 2வது போட்டோவையும் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாம்பன் செங்குத்து தூக்குப் பாலப் பணிகள் நிறைவு: அக்டோபரில் ரயில் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை

ராமேசுவரம்: பாம்பனில் புதிய ரயில் பாலத்தில் செங்குத்து தூக்குப் பாலத்தை பொருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ராமேசுவரத்தில் இருந்து மண்டபத்துக்கு அக்டோபர் 1-ம் தேதி முதல் ரயில் போக்குவரத்து தொடங்க தெற்கு ரயில்வே நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ராமேசுவரம் தீவினை இந்தியாவுடன் இணைக்கும் பாம்பன் ரயில் பாலம் 1914-ம் ஆண்டு கட்டப்பட்டு நூறாண்டுகளை கழிந்து விட்டதாலும், பாலத்தில் அடிக்கடி தொழில்நுட்பப் பிரச்சினைகள் மற்றும் பாலத்தில் அடிக்கடி விரிசல் விழுவதாலும், பழைய பாலம் அருகிலேயே புதிய ரயில் பாலம் … Read more

டெல்லி மழை: யுபிஎஸ்சி பயிற்சி மையத்தில் வெள்ளம் – 2 மாணவிகள் உயிரிழப்பு

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் சனிக்கிழமை கனமழை பொழிந்தது. இந்நிலையில், அங்குள்ள பிரபல தனியார் யுபிஎஸ்சி பயிற்சி மையத்தின் தரைக்கு கீழ்த்தளத்தில் (பேஸ்மெண்ட்) வெள்ளம் ஏற்பட்டது. இதில் சிக்கி மாணவிகள் இருவர் உயிரிழந்தனர். ஒருவர் மாயமானார். சனிக்கிழமை மாலை டெல்லியில் பரவலாக மழை பதிவானது. இந்த சூழலில் 7 மணி அளவில் டெல்லி தீயணைப்பு துறைக்கு மத்திய டெல்லியின் பழைய ராஜிந்தர் நகர் பகுதியில் அமைந்துள்ள யுபிஎஸ்சி பயிற்சி மையத்தில் நீர் தேங்கியது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து … Read more

பராமரிப்பு பணி: இன்றும், நாளையும் கடற்கரை – செங்கல்பட்டு இடையே பல ரயில் சேவைகள் ரத்து!

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக சென்னை  கடற்கரை – செங்கல்பட்டு இடையே பல மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. சென்னை மக்களின் இன்றையமையாக பயண சேவையாக புறநகர் மின்சார ரயில்கள் இயங்கி வருகின்றன.  சமீப காலமாக மெட் ரெயில்களும் சென்னை  நகர மக்களின் வாழ்வியலுடன் ஒன்றிணைந்து வருகிறது. போக்குவரத்து நெரிசல்,  பயண கட்டணம் போன்றவற்றால் பெரும்பாலோனோர் மின்சார மற்றும் மெட்ரோ ரயில் சேவைகளேயே பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில்,  பராமரிப்பு … Read more

என் சீட்டை தொட்டு கும்பிட்டு மூன்று முறை சுற்றி வருவாரு.. விஜய் சேதுபதி குறித்து யோகிபாபு ஓபன்!

சென்னை: நடிகர் வடிவேலுவின் இம்சை அரசன் 23ம் புலிகேசி, விஜய்யின் புலி உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குநர் சிம்புதேவன். இவரது இயக்கத்தில் அடுத்ததாக யோகிபாபு லீட் கேரக்டரில் நடித்துள்ள போட் படம் உருவாகியுள்ளது. இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப்படத்தின் ட்ரெயிலர், சிங்கிள் உள்ளிட்டவை முன்னதாக