நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து மம்தா பானர்ஜி வெளிநடப்பு

புதுடெல்லி, டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்தியா கூட்டணி முதல் மந்திரிகள் பங்கேற்கவில்லை. மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூட்டத்தில் பங்கேற்று இருந்தார். மோடி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் மம்தா பானர்ஜி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார். நிதி ஆயோக் கூட்டத்தில் 5 நிமிடம் கூட பேச வாய்ப்பளிக்கவில்லை என்றும் மேற்கு வங்காளத்திற்கு நிதி வேண்டும் என பேசிய … Read more

பாரீஸ் ஒலிம்பிக் போட்டி: முதல் தங்கத்தை வென்றது சீனா

பாரீஸ், உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ‘ஒலிம்பிக்’போட்டி பாரீஸ் நகரில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் 2-வது நாளான இன்று மொத்தம் 14 தங்கப்பதக்கங்களுக்கு போட்டிகள் நடக்கின்றன. இந்நிலையில் பாரீஸ் ஒலிம்பிக்கில் தனது முதல் தங்கப்பதக்கத்தை சீனா வென்றுள்ளது. 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு பிரிவில் சீனாவின் ஹுவாங் யுடிங், ஷெங் லிஹாவ் ஜோடி, கொரியா அணியை வீழ்த்தி தங்கத்தை வென்றது. இதன்படி சீனாவுக்கும், கொரியாவுக்கும் இடையே நடந்த இறுதிச் சுற்றில் கடும் போட்டி நிலவியது. … Read more

கெய்மி புயலால் கனமழை: சீனாவில் 6 லட்சம் பேரின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

பீஜிங், தைவானில் உருவான கெய்மி புயலால் அங்கு 2 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த புயல் சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதன்படி சீனாவின் புஜியான் மாகாணத்தில் 118 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் கரையை கடந்தது. அப்போது அங்கு மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக சீனாவின் 12 நகரங்களில் மழை 40 சென்டி மீட்டருக்கும் அதிகமாக பதிவானது. இதன் காரணமாக பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால் சுமார் 6 லட்சம் பேரின் … Read more

அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிப்பு தடையாக இருக்காது..

அரசாங்கத்தின் அபிவிருத்தி சார்ந்ந வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிப்புக்கள் தடையாக இருக்காது என்று கடற்றொழில் அஇமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா தெரிவித்துள்ளார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த விடயம் தொடர்பாக தேர்தல் ஆணையகத்துடன் தொடர்பு கொண்டு தேவையான ஆலோசனைகளை பெற்றுக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் மேலும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதிக்கு பின்னர், அரசாங்க வேலைத் திட்டங்கள் முன்னெடுககப்படும் போது, வேட்பாளர்களுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராக அவை பயன்படுத்தப்படுமாயின், தேர்தல்கள் ஆணைக்குழு தமது … Read more

Niti Aayog: மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டம்… கலந்துகொள்ளாமல் புறக்கணித்த நிதிஷ் குமார்!

பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் காலை தொடங்கியது. இதில், ஏற்கெனவே அறிவித்தது போல எதிர்க்கட்சிகள் ஆளும் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டனர். நிதி அயோக் – Niti Aayog மேலும், பா.ஜ.க அரசின் பாரபட்சமான பட்ஜெட்டை எதிர்த்துக் குரல்கொடுக்கப்போவதாக இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட மேற்கு வங்க முதல்வர், தான் பேசும்போது மைக்கை அணைத்துவிட்டதாக பாதியிலேயே வெளியேறினார். இந்த … Read more

“சாதி, மத அடிப்படையில் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்துகிறது திமுக” – மத்திய அமைச்சர் சாடல்

சென்னை: சாதி, மதம், பிரதேசம் அடிப்படையில் திமுக மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்துவதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக பாஜகவின் சிந்தனையாளர்கள் பிரிவு சார்பில் 2024-ம் ஆண்டின் மத்திய பட்ஜெட் குறித்த நிகழ்ச்சியில் மத்திய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் உரையாற்றினார். அப்போது அவர், “மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக போராட்டம் நடத்தி இருக்கிறது. உண்மையில், திமுக அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி … Read more

கேரள அரசுப் பள்ளிகளில் மாதம்தோறும் ‘புத்தகப்பை இல்லா நாட்கள்’ திட்டம் அறிமுகமாக வாய்ப்பு!

திருவனந்தபுரம்: கேரளாவில் மாநில அரசு தனது ‘புத்தகப்பை இல்லா நாட்கள்’ திட்ட முன்முயற்சியை முன்னெடுத்து செல்ல ஆலோசித்து வருவதால், மாநிலத்தில் பள்ளிக் குழந்தைகள் இனி மாதத்தில் நான்கு நாட்கள் அதிக எடையுள்ள பைகளை எடுத்துச் செல்லவேண்டிய தேவை இருக்காது. இது குறித்து கேரள மாநில பொதுக் கல்வித் துறை அமைச்சர் சிவன்குட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பள்ளிக்கூட பைகளின் அதிக எடைகள் குறித்த புகார்கள் அதிகரித்து வரும் நிலையில், பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளின் கவலைகளை நிவர்த்தி … Read more

பான் இந்திய சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கும் ரெபல் ஸ்டார் பிரபாஸ்! ஏன் தெரியுமா?

கல்கி கி.பி 2898ல் நடித்த இந்தியாவின் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன், பிரபாஸை ‘கடவுளுக்கு நிகரானவர்’ என்று அழைத்தது பிரபாஸுக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டாகும்.  

சாவர்க்கர் பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்ததாக கூறியது தவறான தகவல்… தவறுக்கு மன்னிப்பு கோரினார் சுதா கொங்கரா

சாவர்க்கர் பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்ததாக தான் கூறியது தவறு என்று சுதா கொங்கரா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று போற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா அந்தப் படத்தை இந்தியில் ரீ-மேக் செய்து வெளியிட்டுள்ளார். இந்த படம் வரவேற்பை பெற்றதை அடுத்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு சமீபத்தில் சுதா கொங்கரா பேட்டி அளித்திருந்தார். அதில், “சாவர்க்கர் மிகப் பெரிய தலைவராக இருந்த போது, அவர் தன்னுடைய மனைவியை நீ படிக்க … Read more

மகாராஷ்டிராவில் நான்குமாடி கட்டடம் இடிந்து விபத்து.. ஒருவர் பலி.. தொடரும் மீட்புப் பணி

மகாராஷ்டிர மாநிலத்தில் நான்கு மாடி குடியிருப்பு இடிந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். 50க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.   மகாராஷ்டிரத்தில் உள்ள நவிமும்பையில் சிபிடி பெலாப்பூர் பகுதியில் உள்ள நான்கு மாடி கட்டடம் இன்று அதிகாலையில் இடிந்து விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று Source Link