Kharge: `இது போன்ற சூழலில் நீண்ட காலம் வாழ விருப்பமில்லை!' – நாடாளுமன்றத்தில் எமோஷனலான கார்கே

மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை, பா.ஜ.க எம்.பி அனுராக் தாகூர் மறைமுகமாக `தனது சாதி தெரியாதவர், சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்’ என்று கூறியதும், இவ்வாறு பேசியதற்காக அவரைப் பிரதமர் மோடி பாராட்டியதோடு, அனைவரும் கட்டாயம் பார்க்கவேண்டிய பேச்சு என்று ப்ரமோட் செய்திருப்பதும் பெரும் விவாதப்பொருளாக இருக்கிறது. மல்லிகார்ஜுன கார்கே இவ்வாறிருக்க, மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இது போன்ற சூழலில் நீண்ட காலம் வாழ விருப்பமில்லை என எமோஷனலாகப் பேசியிருக்கிறார். முன்னதாக, பா.ஜ.க … Read more

ரயில் ஓட்டுநர்களின் பணி நேரம், ஓய்வு குறித்து ஆராய ரயில்வே வாரியம் உத்தரவு

சென்னை: ரயில் ஓட்டுநர்களின் பணி நேரம், ஓய்வு குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. ரயில்கள் இயக்கத்தில் ஓட்டுநர்கள் (லோகோ பைலட்கள்) முக்கியப் பங்கு வகிக்கின்றனர். இந்திய ரயில்வேயில் நாடுமுழுவதும் மொத்தம் 50,000-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் (லோகோ பைலட்) பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு பணியை முடித்த பிறகு வழங்கப்படும் 16 மணி நேர ஓய்வு மற்றும் வார ஓய்வு மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. தொடர் இரவுப் பணி, கூடுதல் பணிச்சுமை ஆகியவற்றால் அவர்களின் … Read more

“இது குற்றம்சாட்டும் நேரம் அல்ல!” – அமித் ஷாவுக்கு பினராயி விஜயன் பதில் | வயநாடு நிலச்சரிவு

திருவனந்தபுரம்: “குற்றம்சாட்டுவதற்கான நேரம் இதுவல்ல. அமித் ஷாவின் கருத்துகளை நான் விரோதமாக எடுத்துக்கொள்ளவில்லை” என்று வயநாடு நிலச்சரிவு தொடர்பான மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பதில் கூறியுள்ளார். வயநாடு நிலச்சரிவு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் அமித் ஷா பேச்சு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பினராயி விஜயன், “இந்திய வானிலை ஆய்வு மையம் வயநாடு மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை மட்டுமே விடுத்தது. … Read more

இணையத்தில் டீப் ஃபேக்ஸ் போன்ற தவறான சித்தரிப்புகள் பரவுவதை தடுக்க மத்திய அரசு உறுதி

புதுடெல்லி: இணையதளத்தில் டீப் ஃபேக்ஸ் உள்ளிட்ட தவறான சித்தரிப்புகள் பரவாமல் தடுக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாதா கூறியுள்ளார். மக்களவையில் இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு எழுத்து பூர்வமாக பதில் அளித்துள்ள ஜிதின் பிரசாதா, “டீப் பேஃக்ஸ் உள்ளிட்ட தவறான சித்தரிப்புகளை தடுக்கும் வகையிலான பொதுமக்கள் மற்றும் அது சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து பெறப்படும் உள்ளீடுகளை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது. … Read more

வரதட்சணைக்கு எதிராக புதிய புரட்சி.. சமூக மாற்றத்திற்காக முதல் அடியை எடுத்து வைத்த சந்தியா ராகம் சீரியல்

Sandhya Ragam New Promo Video: வரதட்சணைக்கு எதிராக புதிய புரட்சி செய்யும் சந்தியா ராகம்.. சமூக மாற்றத்திற்காக எடுத்து வைத்த முதல் அடி – இணையத்தை கலக்கும் வீடியோவை காணுங்கள்.

BSNL VS Jio Vs Vodafone… பயனர்களுக்கு சிறந்த ப்ரீபெய்ட் பிளான் எது..!

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவற்றின் சமீபத்திய விலை உயர்வுக்குப் பிறகு, பல பயனர்கள் அரசுக்கு சொந்தமான BSNL சிம்களுக்கு மாறி வரும் நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனமும், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு வாடிக்கையார்களை ஈர்க்க, பல திட்டங்களை அறிவித்து வருவகிறது. மேலும், மத்திய அரசும் தொழில்ட்ப மேம்பாடு மற்றும் வலுவான நெட்வொர்க் ஏற்படுத்த பட்ஜட்டில் அதிக நிதி ஒதுக்கியுள்ளது.  இந்நிலையில், பிஎஸ்என்எல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் நிறுவனங்களின் ஒரு வருட காலத்திற்கான … Read more

ராகுல் மற்றும் பிரியங்கா நாளை வயநாடு பயணம்

டெல்லி நாளை ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வயநாடு செல்ல உள்ளனர். நேற்று கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, மற்றும் சூரல்மலை ஆகிய இடங்களில் தொடர் கனமழையால் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. ப்லர் கண் மூடி தூங்கிய வேளையில் மண் மூடி மடிந்தனர். இதுவரை சுமார் 200க்கும் அதிகமானோர் நிலச்சரிவில் சிக்கி பலியாகியுள்ளனர். போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், வயநாடு தொகுதி முன்னாள் எம்.பியுமான ராகுல் காந்தி, … Read more

\"வாங்களேன் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கலாம்\".. தெருவில் கடை திறந்த இளம்பெண்கள்! வினோதமான சீனா

பெய்ஜிங்: இளம்பெண்ணை கட்டிப்பிடிக்க வெறும் 11 ரூபாய், முத்தம் கொடுக்க 110 ரூபாய், ஒன்றாக சேர்ந்து படம் பார்க்க ரூ.150,ஒன்றாக சேர்ந்து மதுபானம் குடிக்க 4,100 ரூபாய் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் இந்த நடைமுறை சீனாவில் தான் உள்ளது. இப்படி பணம் சம்பாதிக்க இளம்பெண்கள் ஏராளமானவர்கள் ஆர்வமாகி ரோட்டில் கடையை விரித்துள்ளனர். சீனா.. எப்போதும் சர்ச்சைக்கு Source Link

சூரியின் அடுத்த ஹோட்டல்.. குவிந்த ரசிகர்கள்.. செம ஃபார்ம்ல போய்ட்டு இருக்காரு

சென்னை: காமெடி நடிகராக அறிமுகமாகி இப்போது சூரி கதையின் நாயகனாக ஜொலிக்க ஆரம்பித்திருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான கருடன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் சூரி உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார். இந்தப் படத்துக்கு பிறகு அவர் கொட்டுக்காளி படத்தில் நடித்திருக்கிறார். இந்தச் சூழலில் புதிய

தெலுங்கானா கவர்னராக ஜிஷ்ணு தேவ் வர்மா பதவியேற்கிறார்

ஐதராபாத், தெலுங்கானா கவர்னராக தற்போதைய பொறுப்பு கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பதிலாக ஜிஷ்ணு தேவ் வர்மாவை ஜனதிபதி நியமித்துள்ளார். தெலுங்கானா உருவானதில் இருந்து 4வது கவர்னராக ஜிஷ்ணு இன்று மாலை பதவியேற்க உள்ளார். அவருக்கு ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அலோக் ஆராடே பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் தெலங்கானா சட்டப் பேரவை தலைவர்கள் கதம் பிரசாத் குமார், குட்டா சுகேந்தர் ரெட்டி, மாநில முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, துணை முதல்-மந்திரி பாட்டி விக்ரமார்கா, எதிர்க்கட்சித் தலைவர்கள் … Read more