தமிழ்நாட்டின் கூடங்குளம் அணுமின் நிலையம் நாட்டின் மின் கட்டமைப்பிற்கு 100 பில்லியன் யூனிட் மின்சாரத்தை வழங்கியுள்ளது

தமிழ்நாட்டின் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து நாட்டின் மின் கட்டமைப்பிற்கு 100 பில்லியன் யூனிட் (கிலோவாட்-மணிநேர) மின்சாரத்தை வழங்கியுள்ளது. இந்தியா – ரஷ்யா இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அணுமின் உற்பத்தி நிலையத்தின் 2 அலகுகள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. தற்போது செயல்பாட்டில் உள்ள இந்த 2 அலகுகளும் தலா 1000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்டவை. இதே திறன் கொண்ட ரஷ்ய VVER-1000 ரகத்தின் மேலும் நான்கு … Read more

Thirumalai: ரஜினிகாந்த், விஜய், தனுஷைவிட இவர் பெரிய ஆளா.. அசோக்செல்வன் குறித்து தயாரிப்பாளர் ஆத்திரம்!

சென்னை: நடிகர் அசோக் செல்வன், அவந்திகா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள எமக்கு தொழில் ரொமான்ஸ் என்ற படத்தின் இசை வெளியீடு தற்போது நடந்து முடிந்துள்ளது. அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை திருமலை தயாரித்துள்ளார். நிலையில் தற்போது இசை வெளியீட்டில் பங்கேற்றுள்ள திருமலை நடிகர் அசோக் செல்வன் குறித்த தன்னுடைய ஆதங்கத்தையும்

நவி மும்பையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து:

மும்பை, மராட்டிய மாநிலம் நவி மும்பையின் ஷாபாஸ் கிராமத்தில் இன்று அதிகாலையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தற்போது முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. விபத்து குறித்து நவி மும்பை தீயணைப்புத்துறையின் துணை அதிகாரி கூறுகையில், “எங்களுக்கு அதிகாலை 4.30 மணிக்கு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. இரண்டு பேர் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் இரண்டு பேர் உள்ளே சிக்கியிருக்கலாம் எனத் … Read more

டி.என்.பி.எல்.: சேலம் ஸ்பார்டன்ஸ்- கோவை கிங்ஸ் அணிகள் இன்று மோதல்

திண்டுக்கல், 8 அணிகள் இடையிலான 8-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியின் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் திண்டுக்கல்லை அடுத்த நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நேற்றிரவு தொடங்கியது. விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. அதன்படி இன்று மாலை 3.15 மணிக்கு நடைபெற உள்ள முதலாவது ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள கோவை கிங்ஸ் அணியும், கடைசி இடத்தில் உள்ள சேலம் ஸ்பார்டன்ஸ் அணியும் … Read more

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிசுக்கு ஒபாமா ஆதரவு

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிசுக்கு முன்னாள் ஜனாதிபதி ஒபாமா தனது ஆதரவை தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வருகிற நவம்பர் 5-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (வயது 78) போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. அதன்படி ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி ஜோ பைடன் (81) வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் வயோதிகம் மற்றும் மனைவி என நினைத்து வேறொரு பெண்ணுக்கு முத்தம் கொடுக்க முயன்றது உள்ளிட்ட … Read more

அடுத்த வருடத்தில் உந்நாட்டு மருந்து உற்பத்தியை 90 வீதமாக அதிகரிக்க முடியும்

அடுத்த வருடத்தில் உந்நாட்டு மருந்து உற்பத்தியை 90 வீதமாக அதிகரிக்க முடியும் என்று சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். 1963 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம் தனது 61 ஆவது ஆண்டு நிறைவை (25) கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலில் சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தலைமையில் கொண்டாடியது. இங்கு மேலும் கருத்து தெரிவித்த சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் … Read more

Niti Aayog: `மைக்கை அணைத்துவிட்டனர்… 5 நிமிடம் கூட பேச அனுமதிக்கவில்லை!' – மம்தா வெளிநடப்பு

மத்திய பட்ஜெட் கடந்த செவ்வாயன்று தாக்கல்செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜூலை 27-ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களும் கலந்துகொள்ளும் வகையில் டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், மத்திய பட்ஜெட்டில் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் நிதி ஒதுக்கி பாரபட்சம் காட்டப்பட்டிருப்பதாக, இந்தியா கூட்டணியைச் சேர்ந்த முதல்வர்கள் ஸ்டாலின், சித்தராமையா, ரேவந்த் ரெட்டி, பகவந்த் மான், சுக்விந்தர் சிங் ஆகியோர் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக அறிவித்தனர். நிதி ஆயோக் … Read more

நலத்திட்டப் பொருட்களின் படங்களை பதிவேற்றும் பணி: கூடுதல் பணிச்சுமை என அரசுப் பள்ளிகள் ஆசிரியர்கள் விரக்தி

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டப் பொருட்களின் படங்களை எமிஸ் தளத்தில் பதிவு செய்யும் உத்தரவால் ஆசிரியர்கள் விரக்தி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பாடநூல்கள், சீருடைகள், காலணிகள், மிதிவண்டிகள் உள்ளிட்ட விலையில்லா பொருள்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி நடப்பு கல்வியாண்டில் (2024-25) மாணவர்களுக்கு பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதர நலத்திட்ட பொருட்களும் படிப்படியாக விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, … Read more

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் 9வது ஆட்சிக்குழு கூட்டம் புதுடெல்லியில் தொடங்கியது. 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவது குறித்து இந்தக் கூட்டம் ஆலோசனை மேற்கொள்கிறது. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே ஒத்துழைப்பை வளர்ப்பதையும், திட்டங்களை வழங்குவதற்கான வழிமுறைகளை வலுப்படுத்துவதன் மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. நிதி ஆயோக்கின் உச்ச அமைப்பான இந்த ஆட்சிக்குழுவில், அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் … Read more

அதிபர் வேட்பாளருக்கான அதிகாரபூர்வ ஆவணங்களில் கமலா ஹாரிஸ் கையெழுத்து

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான அதிகாரபூர்வ ஆவணங்களில் கமலா ஹாரிஸ் கையெழுத்திட்டுள்ளார். இதன்மூலம் அவர் அதிகாரபூர்வமாக ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக மாறியிருக்கிறார். கடந்த 21-ம் தேதி அன்று அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக தற்போதைய அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். அந்த தருணம் முதலே ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ரேஸில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸின் கை ஓங்கி இருந்தது. அவருக்கு அதிபர் பைடனும் ஆதரவு தெரிவித்திருந்தார். “துணை அதிபர் … Read more