தாம்பரம் யார்டில் மேம்பாட்டு பணிகள்: பல்லவன், வைகை, சார்மினார் உட்பட 20 ரயில்களின் சேவை மாற்றம்

சென்னை: சென்னை தாம்பரம் யார்டில் மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளதால்பல்லவன், வைகை, சார்மினார் உள்ளிட்ட 20 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, தாம்பரம் – நாகர்கோவில் அந்த்யோதயா அதிவிரைவு ரயில் (எண்.20691/92) வரும் ஆகஸ்ட்1 முதல் 14-ம் தேதி வரையிலும், மறுமார்க்கத்தில் 13-ம் தேதி வரையிலும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. சென்னை எழும்பூர் – சேலம் அதிவிரைவு ரயில் (எண்.22153) ஆகஸ்ட்1 முதல் 14-ம் தேதி வரை சென்னைகடற்கரை, அரக்கோணம், செங்கல்பட்டு, விழுப்புரம் வழியாக மாற்றுப் … Read more

ஆக.23-ல் உக்ரைன் செல்கிறார் பிரதமர் மோடி: ரஷ்ய போருக்குப் பின்னர் முதல்முறை பயணம்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி உக்ரைன் செல்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த பின்னர் முதன்முறையாக பிரதமர் மோடி அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பயணத்தின்போது மோடி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்திக்கிறார். மூன்றாவது முறையாக என்டிஏ கூட்டணி ஆதரவுடன் ஆட்சியமைத்த பிரதமர் மோடி, இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக ரஷ்யா சென்றார். ஆட்சிக்குப் பிந்தைய அவரது முதல் வெளிநாட்டுப் பயணம் என்பதால் … Read more

நீதி கேட்டு மக்கள் மன்றத்தில் நிற்கிறேன்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – வீடியோ

சென்னை: தலைநகர் டெல்லியில் இன்று நடைபெறும் “நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கெடுத்திருக்க வேண்டிய நாளில், பாஜக அரசின் வஞ்சனையால், அதில் பங்கேற்க முடியாத வாறு,  நீதி கேட்டு மக்கள் மன்றத்தில் நிற்கிறேன்” என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். டெல்லியில் இன்று ( ஜூலை 27 ) நடைபெறும் “நிதி ஆயோக்” ஆட்சிமன்றக் குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், பல மாநில முதல்வர்கள் … Read more

மீண்டும் வேலையை காட்ட தொடங்கிய மாலத்தீவு அதிபர்.. இந்தியா குறித்து சர்ச்சை பேச்சு! சீனாதான் காரணமா?

மாலி: மாலத்தீவிலிருந்து இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற்றப்பட்டிருந்தது பெரும் விவாதங்களை கிளப்பியிருந்த நிலையில், “வெளிநாட்டுப் படைகள் வெளியேற்றப்பட்டதன் மூலம் மாலத்தீவின் பாதுகாப்பு இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கை எட்டப்பட்டுள்ளது” என அந்நாட்டு அதிபர் முய்ஸு கூறியிருக்கிறார். மாலத்தீவு அதிபர் முய்ஜு அடிப்படையில் சீன ஆதரவாளர். கடந்த ஆண்டு நடைபெற்ற அந்நாட்டு நாடாளுமன்ற தேர்தலில், “நாங்கள் வெற்றி Source Link

சாய்பல்லவிக்கு திருமணமான நடிகருடன் உறவா? யார் அந்த நடிகர்.. புதுகதையா இருக்கே!

சென்னை: பொதுவாகவே திரையுலகில் நடிக்கின்ற நடிகை மற்றும் நடிகர்கள் குறித்து அவ்வப்போது கிசுகிசுக்கள் வெளி வருவது சகஜமான ஒன்றுதான். அப்படி அடிக்கடி கிசு கிசுவில் சிக்கி வரும் சாய்பல்லவி பற்றி, திருமணமாகி குழந்தை இருக்கும் நடிகர் ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக கிசு கிசு ஒன்று சோஷியல் மீடியாவில் ரவுண்டுகட்டி பரவி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உங்களில்

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 1780 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் 2024 ஜூலை மாதம் 24 ஆம் திகதி மாலை நீர்கொழும்பு தடுகம தடாகத்தில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் ஆயிரத்து எழுநூற்று எண்பது (1780) கிலோகிராம் பீடி இலைகளுடன் இரண்டு (02) சந்தேக நபர்களும் ஆறு (06) டிங்கி படகுகளும் கைது செய்தனர். கடல் வழிகள் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் கடற்படையினர், தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடல் … Read more

`மத்திய அரசு தரும் இலவச வீடு' யாருக்கு கிடைக்கும்… என்ன செய்ய வேண்டும்?

வீடு இல்லாதவர்கள் அல்லது வீடு கட்டுவோர் பயனடையும் வகையில், நரேந்திரமோடி அரசு 2015-ல் பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டத்தில் யாருக்கு வீடு கிடைக்கும்? அதற்கு என்ன தகுதி வேண்டும்? அதற்கான வழிமுறைகள் என்னவென்று பார்க்கலாம். பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா அதிக மக்கள் தொகை, நிதி நெருக்கடி… ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் சீனா! விண்ணப்பிக்க தகுதிகள் என்ன? * பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், சொந்த … Read more

நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணித்தது ஏன்? – காரணங்களை பட்டியலிட்டு முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

சென்னை: தலைநகர் டெல்லியில் இன்று (ஜூலை 27) நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்தது ஏன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நீண்ட விளக்கம் ஒன்றை நல்கியுள்ளார். பட்ஜெட்டில் தமிழகம் உள்பட பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக் காட்டியுள்ள முதல்வர் ஸ்டாலின், “மேலும் தவறு செய்கிறீர்கள்! மேலும் மேலும் தோல்விகளைச் சந்திப்பீர்கள்! இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கொந்தளிப்பதுபோல, இந்திய மக்களின் மனங்களும் கொந்தளிப்பில் இருக்கிறது! இதற்கு பாஜக பதில் சொல்லியே தீர … Read more

அவதூறு வழக்கில் உ.பி. நீதிமன்றத்தில் ஆஜரானார் ராகுல்: நீதிபதி எச்சரித்ததால் நேரில் வந்து விளக்கம் அளித்தார்

புதுடெல்லி: பாஜக தலைவர் அமித் ஷா மீதான அவதூறு வழக்கில் ராகுல் காந்தி ஆஜராக கோரி சுல்தான்பூர் நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியது. ஆனால், இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையில் ராகுல் பங்கேற்றிருந்ததால் விசாரணைக்கு அவரால் ஆஜராக முடியவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜூலை 2-ம்தேதி அவதூறு வழக்கு சுல்தான்பூர்நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி சுபம்வர்மா அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போதும் ராகுல் ஆஜராகவில்லை. அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் காஷி பிரசாத் … Read more

ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சனத்துக்கு கார்த்தி சிதம்பரம் கொடுத்த பதிலடி

Karti Chidambaram, EVKS Elangovan ; காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்த விமர்சனத்துக்கு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் அக்கட்சியை சேர்ந்த கார்த்தி சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார்.